வியாழன், ஜூன் 21, 2012

யாக்கைகள் கொண்டொரு யாகம் - II

முந்தய பாகம்
ஒரு தென்றல்க் காற்று
அந்த மரத்தின் ஒவ்வொரு இலைகயையும்
திருப்பிப் பார்த்ததுக்கொண்டிருந்தது.

ஒரு புது கொப்பியின்
எல்லா வரிகளிலும்
முத்து முத்தாக
கவிதை எழுத முயன்று கொண்டிருந்தான்.

நீ என்ன வேணும் எண்டாலும் எழுதிக்கொள்
என்ற அர்ப்பணிப்பில்
கொப்பியின் ரசனை தெரிந்தது.

கைகள் முயல்கள்
தலை எலி
நெஞ்சு பட்டம்
இடுப்பு சமுத்திரம்
கால்கள் வேர்கள்.

முயல்கள்
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன
பயமா? பசியா?

எலி
திடீரெண்டு மறைவதுவும் பின் எழுவதுவும்
நிற்காமல் அலைந்துகொண்டிருந்தது.

சமுத்திரத்தில்
பௌர்ணமிகாலத்து அலை.

வேர்கள்
ஆழ ஊடுருவி
இறுகப் பற்றிக் கொண்டிருந்தன.

பட்டம்
சாய்வாகவும் குத்தாகவும்
காற்றின் போக்கில் பறந்து கொண்டிருந்தது.
தவறுகளும் செரி
தண்டனைகளும் செரி
அத்தனை இனிப்பு.

அறுபத்தி மூன்று கலைகளும்
ஒன்று சேர்ந்தது என்பதால்தான்,
பேரின்பம் கூட இதன் மீது பயம் கொள்கிறது.

சரணாகதியும் ஆட்கொள்ளலும்,
சரியை மார்க்கம்,
கிரியை மார்க்கம்,
யோக மார்க்கம்,
ஞான மார்க்கம்,
எல்லா மார்க்கத்தின் வழியும்
அததற்க்கான முக்திகளும்.
இதுவும் பேரின்பம் தான்.
ஆனால்
கடவுள் வேறு
பக்தன் வேறல்ல.

உலகில்
அதிகம் காமிக்கப் பட்டதும்
அதிகம் காமிக்கப் படாததும் – இதுதான்.

காமத்தின் பால்ப் பட்டு
அவர்கள் செய்ததெல்லாம்
காமத்துப்பாலிலும் சொல்லாதது.

முந்தய பாகம்

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஈழத்து 'சாரு நிவேதிதா' பட்டத்தை உங்களுக்கு வாரி வழங்குகிறேன்.

பெயரில்லா சொன்னது…

"அறுபத்தி மூன்று கலைகளும்
ஒன்று சேர்ந்தது என்பதால்தான்,
பேரின்பம் கூட இதன் மீது பயம் கொள்கிறது"..

Interesting உவமானம்! wondering again..

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//ஈழத்து 'சாரு நிவேதிதா'// நீங்க யாரக் கலாய்க்குறீங்க ? என்னையா சாருவையா ?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

பெயரச் சொன்னா பெயரைச்சொல்லி நன்றி சொல்லி இருக்கலாம் இப்ப எப்படி நன்றி சொல்ல ?

பெயரில்லா சொன்னது…

:)

பெயரில்லா சொன்னது…

"நன்றிகள் அனானியாரே/பெயரில்லா" என்று கூறமுடியாதா?

பெயரில்லா சொன்னது…

>வேர்கள்
ஆழ ஊடுருவி
இறுகப் பற்றிக் கொண்டிருந்தன.

பட்டம்
சாய்வாகவும் குத்தாகவும்
காற்றின் போக்கில் பறந்து கொண்டிருந்தது.

-------------

hee hee

ஜேகே சொன்னது…

தல

"நீ என்ன வேணும் எண்டாலும் எழுதிக்கொள்
என்ற அர்ப்பணிப்பில்
கொப்பியின் ரசனை தெரிந்தது" போன்ற occasional brilliance தெரிந்தாலும் ... காமமும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் அடுத்த கவிதைக்கு காத்திருக்கிறேன்!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

மீண்டும் பெயர் சொல்லாது ரசனை சொல்லிப் போனவர்களுக்கு எப்படி நன்றி சொல்லலாம் என்று தெரியாமல் முழிக்க, பொதுவா எல்லாரையும் ஒன்றா அனானி பெயரிலா என்று விழிக்க விருப்பமில்லா வாலிபன்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி ஜேகே, வேறு விடயங்களும் கட்டாயம் எழுத முயல்கிறேன்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

ஜேகே காமம் கடந்து போகாது, அது கொண்டாடப் பட வேண்டியது இன்னமும் எழுத, ரசனையா பாராட்ட அதில் ஆயிரம் இருக்கு. ஏன் காதல் விதந்துரைக்கப்பட்ட அளவு காமம் underplay பண்ணப்பட்டது. முக்கியமாய் நான் எதையும் பிளான் பண்ணி எழுதுவதில்லை, எதோ ஒரு பொறி அது வந்து விழுவதுதான்.

கருத்துரையிடுக