வெள்ளி, ஜூன் 08, 2012

தாவீது அடிகளார் புத்தகக் கடையும் Database System உம்

தாவீது அடிகளார் என்பவர் ஒரு புத்தகக்கடை துறந்தார் - தாவீது புத்தகக்கடை David Book Stores. அந்தக் கடையை எல்லாரும் DB, DB என்று அழைத்தனர். அந்தக் கடையில் கல்லாவில் இருக்கும் அடிகளார் ரொம்ப ஸ்டிரிக்டு, அதால அவரை டீமன் (daemon) எண்டு மரியாதையா அழைப்பது வழக்கம். இந்த டீமன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ‘You Sir’, ‘You Sir’ என்று அழைப்பார் அது மருவி யூசர் (user) என்று ஆகியது, அந்த கடையில் வேலை செய்யும் எல்லாரும் வாடிக்கையாளர்களை யூசர் என்று அழைப்பது அந்தக் கடையின் வாடிக்கை ஆகி விட்டது.

புத்தகம் வாசிக்க இன்னுமொரு சாட்டு.

இந்தக் DB கடையில வாங்கி விக்குறதுதான் வேலை. Users வந்து பாத்துட்டு போவினம்(Read), வாங்கிப் போவினம்(Delete), வித்துப் போவினம்(Create), கொடுக்கல் வாங்கல்களை செரி செய்து போவினம்(Update). சில சமயங்களில் புதுதாக புத்தக வகைகளை கொணர்ந்து விப்பினம். அப்ப அதுக்கெண்டு அலுமாரியில் தட்டு ஒதுக்க வேண்டும். அலமாரிகளும் நிரம்பின பிறகு புது அலமாரி வேண்ட வேணும்.
கடையில வியாபாரம் அதிகமாகி விட்டதால பில்லு போட ஒரு மேனேஜரை நியமித்தார் அடிகள். அவர் பெயர் தீ.ரா.ஜாக்சன். இவரை வேடிக்கையா எல்லாரும் தி’ராங்’க்சக்சன் என்று அழைப்பதற்கு ஒரு காரணமும் இருக்கு. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ராங்கு (wrong) பண்ணாம ஒழுங்கா ஒரு ஒடரில வியாபாரம் பண்ண அழைத்து செரியா கணக்கு பதிவதால் இவரை the-wrong-jackson = transaction manager என்று அழைப்பர்.

எந்தப் எழுத்தாளர் புத்தகம் எந்த அலமாரியில் இருக்கு எண்டு ஒரு அட்டவணை வைசிருப்பார் நம்ம டீமன், அதை இண்டெக்ஸ் எண்டு சொல்லுவினம். கடையில பலதும் பத்துமா புத்தகங்கள் இருக்கும் பய புள்ளைக ஆர்வமா வருவானுக அவைகளை அளந்து பாத்து யார் எதை வாசிக்கலாம், யார் எதை விக்கலாம், யார் வீட்டுக் புத்தகக் கணக்கை யார் யார் மாத்தலாம் எண்டு ஒரு முடிவை டீமன் அண்ணை எடுப்பார் இதை அக்செஸ் ரைட்ஸ் (access rights) எண்டு சங்கேதம் சொல்லுவினம். தாவீது கண்ணைக் காட்டினா கடைப் பெடியளுக்கு விளங்கிடும் யாருக்கு என்ன அக்செஸ் ரைட்ஸ் எண்டு.
மாதத்தின்  முதல் புதன் கிழமையில வருகிற அந்த இந்திய மாதாந்த சஞ்சிகைக்கு ஒரு பலத்த வரவேற்ப்பு இருக்கு, இப்படி எந்த காலத்தில எதை அதிகம் வாங்குவினம் எண்டு தெரிஞ்சு அதை கல்லாவுக்கு கிட்ட வைச்சிருப்பார் - இதை ஸ்டோர் ப்ரோசீஜர் (stored procedure) எண்டு அவை வியாபார பாணியில சொல்லுவினம்.


ராஜேஷ் குமார் நாவல்கள் தனியா சுஜாத்தா நாவல்கள் தனியா அடிக்கி இருந்தாலும் அவயிண்ட துப்பறியும் நாவல்களுக்கு மீசை முளைச்ச ராணிக்காமிஸ்களிட்ட ஒரு கிராக்கி இருந்தது, அதுக்காக அவர் இந்த கிரைம் புத்தகங்களை எல்லாம் ஜொயின்(join) பண்ணி ஒரு சீ-ஆர் கொப்பியில எழுதி வைச்சிருப்பார் - இந்த சீ-ஆர் கொப்பிய கிரைம் வியூ (view) எண்டு கடைப் பெடியள் சொல்லுவானுகள்.

இப்படி சீரும் சிறப்புமாய் புத்தகக் கடை நடத்தி இருக்க வேண்டிய தாவீது அடிகள் யாழ்ப்பாண நூலகம் எரிந்த சேதி கேட்டு பொறுக்காமல் உயிர் நீத்தார்.

                   
சமர்ப்பணம் தாவீது அடிகளார் - யாழ் நூலக எரிப்பு சேதி கேட்டு உயிர் நீத்த புத்தகக் காதலன் + புத்திஜீவி + கல்விமான்.

அர்த்தமுள்ள வலைத்தளங்கள் பற்றிய என் தகவல் தொழில்நுட்ப தொடர்பான இன்னொரு பதிவு.

16 கருத்துகள்:

Veena சொன்னது…

Good one. Liked the way the techincal words have been linked with tamil words. Reminded me the stories behind the names of our towns :)

பாவி சொன்னது…

என்னவொரு கற்பனையப்பா! வாழ்க வாலிபன்

எஸ் சக்திவேல் சொன்னது…

C.J.Date என்று ஒருவர் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு எல்லோரும் ரூல்ஸ் பின்பற்றுகிறார்களா என்று பார்க்கிறார்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி வீணா.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி பாவி, உங்கள் வார்த்தைகள் ஊக்கமளிக்கின்றன.

பெயரில்லா சொன்னது…

wondering how you translate the complex technologies in simple tamil..Nice..
Connection lost at the end..:)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி சக்தி அண்ணை. அந்த இடைச்செருகல் நல்ல இருக்கு மிஸ் பண்ணிட்டன்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//connection lost at the end// -> agreed. I could not find a better way to finish the flow. Thanks for dropping by and the encouraging words.

ஸ்ரீ. கிருபானந்த் சொன்னது…

தமிழர் என்று ஒரு இனம் இருக்கும் வரை தணியாத தீயாய் அடிமனதில் எரிக்கும் ஒரு சம்பவம் இங்கு மிக நாசுக்காக சொல்லப்பட்டு இருக்கிறது.. வாலிபனுக்கே உரிய தனியான பாணியில்.. ஆழ் மனதின் ஆதங்கங்களும், அறிவியலும், ஆளுமையும், கற்பனை வளமும் சந்திக்கின்ற ஒரு அழகான புள்ளி இந்த ஆக்கம்...

நாம் தாவீதுகளாக இருந்தோம்.. எம்மிடம் கூழாங்கற்கலுமிருந்தன.. ஆனால் எதிரி கோலியாத் இல்லை...

ஸ்ரீ.கிருபானந்த்

Gobi சொன்னது…

எல்லாமே நல்லாய் போகும்பொழுது, தமிழ் சினிமா மாதிரி கடைசியில ஒரு பாட்டு வந்து படத்தை முடிச்சிட்டுது.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி கிருபா, நல்ல கவிதை //நாம் தாவீதுகளாக இருந்தோம்.. எம்மிடம் கூழாங்கற்கலுமிருந்தன.. ஆனால் எதிரி கோலியாத் இல்லை...//

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி கோபி,
//தமிழ் சினிமா மாதிரி கடைசியில ஒரு பாட்டு வந்து படத்தை முடிச்சிட்டுது.// கடசீல சண்டை தானே வைப்பாங்க?

வலசு - வேலணை சொன்னது…

You sir மருவி user ஆனதை ரசித்தேன்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி வே.வலசு.

ஜேகே சொன்னது…

தல .. இது முக்கியமான பதிவு .. yarl it hub க்கு தனி தமிழ் வலைப்பதிவு தொடங்கி இவற்றை போடலாம்.

stored procedure இன் பாவனை கொஞ்சம் இடிக்கிறது .. எளிமைப்படுத்தலில் இருக்கும் சிக்கல் இது .. தமிழில் புரிதல் சிக்கல் இருக்காது என்பதால் கொஞ்சம் டீப்பாக போய் குளத்தில் நல்ல தண்ணியை காட்டினால் தான் நீந்த பழகுவார்கள் என்று நினைக்கிறேன்!


//இப்படி சீரும் சிறப்புமாய் புத்தகக் கடை நடத்தி இருக்க வேண்டிய தாவீது அடிகள் யாழ்ப்பாண நூலகம் எரிந்த சேதி கேட்டு பொறுக்காமல் உயிர் நீத்தார்.//

இந்த பதிவுக்கு இந்த பஞ்ச் தேவையில்லை போல தோன்றியது ..

ஏ.எ.வாலிபன் சொன்னது…

stored procedure கொஞ்சம் caching மாதிரிப் படும் இங்க. But to explain it completely we need to go till query tree. I was aware of this issue while writing and wanted someone to bring it.

It is interesting that every one feel the same abt the climax, I agree that that is a இடை செருகல் type.

கருத்துரையிடுக