வெள்ளி, நவம்பர் 18, 2011

பிறந்தநாள்என் இனிய தமிழ், தெலுங்கு, மலையாள, மற்றும் கன்னட வாசகர்களே இதுவரை facebookஇல் குறும்பு செய்து வந்த வாலிபன் முதன் முறையாக blog இல்.

இதுவரை facebookஇல் செய்த குறும்புகளை முதற் கட்டமாக இங்கு transfer செய்திருக்குறேன் - வரலாறு முக்கியம் அமைச்சரே.

இனி இங்கையே வாலிபனின் சேட்டைகள் ஆரம்பமாகும்.என் படைப்புகளை,

ஒரு அப்பா தன் வயது வந்த பெண் பிள்ளையை

சபைக்கு அழைத்து வருவது மாதிரி

அழைத்து வருகிறேன்.
அவள் கலையை ரசிப்பவர் சிலர்,

அவளை ரசிப்பவர் சிலர்,

ரொக்கட் எறிபவர் சிலர்,

விசிலடிப்பவர் சிலர்;
இவளும் சளைத்தவள் அல்ல!

எந்த வாசகனுக்கு

கண் ஜாடை காட்டுகிறாள் எண்டு தெரியாது.

அதை நான் தடுக்கவும் முடியாது.

எதையுமே நான் தடுக்க முடியாது .
ஒரு புன்னைகயோடும்

எச்சரிக்கையோடும்

எல்லாவற்றையும் எதிர்கொள்கிறேன்.

அவள்

உங்களை ஏற்றுக் கொண்ட பிறகு

கூடுவதும்,

கூடி இன்பம் காணுவதும்,

குலவி பிள்ளை பேறுவதும்,

உங்கள் இஷ்டம்.

தூதுக்கு என்னைக் கூப்பிடாதீர்கள்.

2 கருத்துகள்:

ஜேகே சொன்னது…

என் பதிவு ஒன்றில் இருந்து நானே சுட்டு போடுகிறேன்!!


பிரபல கவிஞரும் வசனகர்த்தாவுமான Robert Browning இடம் அவருடைய கவிதை வரி ஒன்றின் விளக்கத்தை வாசகர் ஒருவர் கேட்டாராம். அதற்கு Browning சொன்ன பதில்,

"இதை எழுதும் போது எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே இதன் அர்த்தம் தெரிந்திருந்தது. ஆனால் இப்போது ............. Only God Knows!"

ஏ.ஏ.வாலிபன் சொன்னது…

உண்மைதான், நயத்தல் தான் இலக்கியத்தை ரசனை ஆக்குகிறது, வாழ்க்கையை ரம்மியமாக்குகிறது (ரம்மியா ஆக்குகிறது எண்டு வாசிச்சால் அதுக்கு நான் பொறுப்பாளி அல்ல).

இந்த குமரிப்-பெண் உவமானம் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்தது இப்பதான் கோர்த்து எழுதோணும் எண்டு தோன்றியது - தம்பி துஷி 'மடம்' கதை பற்றி எழுப்பின சந்தேகங்கள் + suggestion கள் தான் இதை பதிந்தே ஆகோணும் எண்டு ஆக்கியது. பதிஞ்சிட்டு பார்த்தா நீங்களும் ஏறத்தாள அதே மாதிரி ஒரு உவமை பாவிச்சிருக்கிறீங்கள் - same blood.

கருத்துரையிடுக