சனி, பிப்ரவரி 18, 2012

எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்.


எந்த ஒன்றைப் பற்றிப் பேசுகின்ற போதும்
இன்னொன்றை பற்றியும்
ஏன்
எல்லாவற்றைப் பற்றியும் கூடப்
பேச முடிகிறது

இது நண்பன் மீனி சொன்ன கவிதை....

எந்த ஒன்றையும் செய்கிற போது
இன்னொன்றையும்
என் எல்லாவற்றையும்
அவனே செய்யச் வேணும் எண்டு எதிர்பார்க்கப் படுகிறது;

எதிர்பார்ப்பின் சுமை ஏற்றல் எதிர்ப்பிலும் கொடுமையானது என்பது பலருக்கு புரிவதில்லை.

என்னிடம் ஒரு திட்டமிருக்கு நீங்கள் எல்லோரும் செய்யுங்கள் - முடியாட்சி
எங்களிடம் ஒரு திட்டமிருக்கு வாருங்கள் எல்லோரும் சேர்ந்து செய்வோம் - குடியாட்சி
என்னிடம் ஒரு திட்டமிருக்கு அதை நான் தனியே செய்கிறேன் - சுயாட்சி ?
எங்களிடம் நிறையத் திட்டமிருக்கு இதையும் சேர்த்து நீயே செய்துவிடு - ???

4 கருத்துகள்:

suharman karthik சொன்னது…

// என்னிடம் ஒரு திட்டமிருக்கு அதை நான் தனியே செய்கிறேன் - சுயாட்சி ?//

இதனை சர்வாதிகாரம் என்று கூற முடியாதா ?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

என்னிடம் ஒரு திட்டமிருக்கு அதை நீங்கள் எல்லோரும் செய்தே ஆகவேணும் - சர்வாதிகாரம்

// என்னிடம் ஒரு திட்டமிருக்கு அதை நான் தனியே செய்கிறேன் - சுயாட்சி ?// கவனிக்க கேள்வி அடையாளம்

sk-suharman சொன்னது…

என்னிடம் ஒரு திட்டமிருக்கு அதை நீங்கள் எல்லோரும் செய்தே ஆகவேணும் - சர்வாதிகாரம்

thanks

பெயரில்லா சொன்னது…

"எங்களிடம் நிறையத் திட்டமிருக்கு இதையும் சேர்த்து நீயே செய்துவிடு - ???"
எல்லாரும் மன்னர்கள் !

கருத்துரையிடுக