வெள்ளி, ஜூன் 01, 2012

யானைக்கு மணிகட்டுவது யாரு ?திடீரெண்டு மிக்சிங் செரியாகாம எகிறிக்கொண்டு இருந்த ஒரு நடு சாமத்தில அந்த யோசனை வந்தது. யானைக்கு மணி கட்டலாம். அட பூனை எண்டா வழமை. நம்ம ரேஞ்சுக்கு ஒரு யானைக்காவது மணி கட்டினாத்தானே செரியா இருக்கும்.

யானைக்கு மணி கட்டலாம் எண்டு வெளிக்கிட்டா யாரை துணைக்கு கூப்பிடலாம் எண்டு ஒரே குழப்பம். பூனை நாய் எண்டா கஜேந்திரன கூப்பிடலாம், யானைக்கு ஓம்பியை கூப்பிடலாம், அட நக்கலுக்கு இல்லை, அவன் வெளிய இருந்துதான் எப்பவும் ஆதரவு தருவான். நல்ல பொடியன் பலரிண்ட காதலுக்கு துணை போனவன் ஆனா நம்பேலாது திடீரெண்டு இந்தியாவுக்கு பிரதமமந்திரி ஆக்குறன் எண்டு கூட்டிக்கொண்டு போடுவான் - டேஞ்சரஸ் பெல்லோ. இத்தாலில இருந்து வந்தா விடுவானுகள் - நரி நீலமாயிருக்கெண்டு, நாமளும் பிரவுன் நரிதானே. இவனேன் எப்ப பார்த்தாலும் சனியன் சகடை கிங்கு மேக்கர் மாதிரி பேசுறான் எண்டு விளங்கேல்லை ஒரு நாய்ப் பிரியனோட பலகால சவகாசமாயிருக்கும். அட யானைக்கு மணி கட்ட வெளிக்கிட்டு வெளிஊர்க்கதைக்கு போயிட்டன்.

வேற ஒண்டுமில்லை யானைக்கு மணி கட்ட வேணும், சும்மா தானே நிக்குது ஒரு மணியை கட்டி விட்டா மணியா இருக்கும் எண்டு பாத்தன் (அட எவண்டா அவன் இசகு பிசகா யோசிக்குறது). யானைக்கு மணிகட்ட எண்டு ஒரு பேசு-புக்கு குரூப் தொடங்கலாம் எண்டு யோசிச்சன். சிக்கல் என்னெண்டா குரூப்பில யாரை சேர்க்கிறது எண்டு ஒரே குஷ்டமப்பா - அட சீ கஷ்டமப்பா. யானைகளை மட்டும் சேர்க்க சொல்லிச்சினம், சிலர் மணி செய்யுரவை எண்டுச்சினம். அப்ப யாரு மணிக் கட்டுறது - தூக்கி போட்டு மிதிச்சுதெண்டா ? மணி கட்டுறவையும் குரூப்பில வேணுமில்லை.

அப்புறம் மணியடிக்க ரெண்டு பேர், அதுக்கு ஒரு பசன் ஷோ நடத்தி, இல்லை பாட்டுப் போட்டி - சுப்பர் சிங்கர் யானை - வழகுவது எலிபன்ட் ஹவுஸ். வெண்ட யானையை கோல் ரோட்டில் குப்பை அள்ள விட்டு பிரச்சரிக்கலாம், மரம் நட வைக்கலாம், தண்ணியை யானை தும்பிக்கையில விசிறி அடிச்சா (மரத்துக்குத்தான்) டி.ஆர்.பி எகிறுமில்லை. அட இவளவு யோசிக்க முதல் குரூப்புக்கு ஒரு அட்மின் கண்டுபிடிக்கோணும். அட்மினுக்கு நிறைய வேலை – ஆட்சேர்ப்பு, ஆட்கொணர்வு, ஆக்களை தூக்குறது, கொமென்ட் மொடரேசன் ஆக மொத்ததில அந்த குரூப்புக்கு சிக்கின அடிமை - ரொம்பா நல்லவர். யாரு அதுக்கு செரியா வருவான் எண்டு மூளையைக் கசக்கி யோசிக்காம டான் எண்டு சாயியை தான் யோசிச்சனான் - ரொம்ப நல்ல பெடியன், பெரிய இடம் பில்லா படத்துக்கே பி.எம்.டபிள்யு சப்ளை பண்ணுறார் எண்டா பாருங்கோவன்.

செரி குரூப்புக்கு என்ன பேர் வைக்கலாம், யானை எண்டு வைச்சா, மணியகாரர்கள் கோவிப்பினம், மணி-யானை எண்டா எதோ தப்பா படுது. யானையும் மணியும் 2011 எண்டு வைக்கலாம் எண்டா 2010 இல செத்துபோன யானை எல்லாம் கனவில வந்து விரட்டும் - செரி யானை ரீயூனியன் எண்டு வைக்குறதா முடிவெடுத்தம். யானைக்கு மணி கட்டுறதா இல்லை யானைகளுக்கு ரீயூனியன் வைக்குறதா எண்டு ஒரு அறிக்கைப்போர் தொடங்கலாம் எண்டு கள நிலவரங்கள் தெரிவித்ததை நாங்கள் கணக்கேடுக்கேல்லை. யானை பெரிசா இருந்தா போதும் பிளிருதா எண்டது பிரச்சனை இல்லை - பிளிருற யானைக்கு மதம் வராது எண்டு ஒரு பழமொழி இருக்கல்லே.

குரூப் எண்டு தொடங்கினா நாலு பேர டாக் பண்ணி ஒரு போஸ்ட் போடனும் இல்லை கவிதை கதை கத்தரிக்காய் எண்டு வருத்தேடுக்கோணும். கொமென்ட் போடாதவங்களை சாட்டில் பிடித்து காச்சோணும், இப்பிடி நிறைய சமூக வலைத்தள அங்கீகரிக்கப்பட்ட வன்முறைகளால் வடம்பிடிச்சாத்தான் உண்டு.


திடீரெண்டு மணி வேண்டுறதில ஒரு சிக்கல் - மணிக்கு மணியைக் குறைச்சு கரும்பு வேண்டி போடச்சொல்லி ஒரு குழப்பம், நல்லகாலம் கரும்பு வளர்க்க சொல்லி எதிர்க்கேல்லை. இந்த மணிகட்டலுக்கு ஆள் சேர்க்க டாக்குத்தர்மார் ரெண்டு பேரக் கேட்டன் ஒருத்தன் ரோடு போடுரதைக் காட்டிலும் ரோடு மேல கார் உடுரதில விண்ணன், மற்றவன் மரமேருறதிலைக் காட்டிலும் மரத்திலிருந்து ஆள் இறக்குறதில, சும்மா படுத்திருந்தவனை மரத்தில ஏத்தி விடுறதில விண்ணன். இவனுகளை கூப்பிட்டா வழி கிடைக்கும் எண்டு பார்த்தா, யானையோட தமிழில்தான் கதை, அதுக்கு பனங்கிழங்கு கொடுக்கோணும் எண்டு டிமாண்டுகள் வைச்சானுகள்.

இதுசெரி வராது எண்டு கனடாவில இருக்குற மச்சானைக் கூப்பிட்டலாம் எண்டா, அவன் வானத்தில இருந்து டார்ச் அடிக்குற பயபிள்ளைகளோட (aliens) சாவகாசம் வைச்சிருக்குற ஆளு கொஞ்சம் டேக்கு மாக்கு பேர்வழி - ஆனா எதையும் ஒரு அறிவுபூர்வமா அணுகுவான். அவனைக் கேட்டா யானை எல்லாம் உண்மையில ஒரு பறக்கும் தட்டுகள் எண்டான். இதென்னடா புதுக்கதையா இருக்கு எண்டு பாத்தா, வெள்ளை யானை வாலைப்பிடித்துக்கொண்டு சொர்க்கம் போன அப்புகாமி தெரியுமா எண்டான் - அப்பத்தான் அவன் நெஸ்பிரேக் கதைகளிலேயே இன்னமும் இருக்குறான் எண்டு விளங்கிச்சுது.

அண்மைக்காலமாக யானை எக்ஸ்பேர்ட் ஆகிவரும் ஜேகேட்ட கேக்கலாம், மனுசன் பிரசண்டேசனில நித்திரை கொள்ளுரவனுகளுக்கே யானை விட்டு வேருட்டுதாம், பெரிய அம்பானி சீ அம்பாரி, அட சீ அது யானை மேல போடுற மேட்டர், அதென்னது ஆ பாகனா இருப்பார் போல. ஆனா கலர் கலரா யானை காட்டுமே, போதாக்குறைக்கு முதலிலேயே யானைய காட்டிடணும் இடைக்க புதுசா ஒரு யானை வேணாம் எண்டும். யானைக்கு மணியைக் கட்டுங்கோ எண்டா முயலைப் பிடிச்சுக்கொண்டு வந்தாலும் வரும் அதுவும் கையப் பிடிச்சு இழுத்து. செரி பரவாயில்லை எண்டு கேட்டா, சீமான் தனக்கு அரசியல் தெரியாது நீ வியாழமாற்றத்தில கேள்வியைக் கேளு சொல்லுறன் எண்டுது.

இவளவு சிக்கலோட யானைக்கு மணி கட்டத்தான் வேணுமா எண்டு என்னைக் கேட்டா நான் பூட்டின கதவை திறந்து சத்தமா சொல்லுவன் - யானைக்கு மணி கட்டுறதில இதெல்லாம் சகஜமப்பா.
டோண்டு வொரி பீ ஹப்பி.

12 கருத்துகள்:

எஸ் சக்திவேல் சொன்னது…

>இவளவு சிக்கலோட யானைக்கு மணி கட்டத்தான் வேணுமா எண்டு என்னைக் கேட்டா நான் பூட்டின கதவை திறந்து சத்தமா சொல்லுவன் - யானைக்கு மணி கட்டுறதில இதெல்லாம் சகஜமப்பா.

ஏதோ ஒன்றைப் பூடமகாசச்சொல்லுகிறீர்கள் என்று புரியுது. ஆனா இந்தக் கடைசி வரிகளை ரசித்துச் சிரித்தேன்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சக்தி அண்ணை, இது ஆராய அல்ல, சும்மா வாசிச்சமா ரசிச்சமா எண்டு போறதுக்கு. பழமொழி சொன்னா அனுபவிக்கணும் :).

ஜேகே சொன்னது…

தம்பி .. எப்போதே எதுக்கோ யானை விட்டாலும் .. தொடர்ந்து யானை விடுபவன் என்ற பெயர் வரக்கூடாது என்று குதிரை விடும் ஆள் நான் .. ஸோ டோன்ட் வொர்ரி!

என்னிடம் www.kathavu.com என்று ஒரு தளமுகவரி இருக்கிறது .. இலக்கியத்துக்கான aggregator உருவாக்கும் எண்ணத்தில் வாங்கி வைத்தேன் .. பயன்படுத்த்வேண்டுமானால் ரெடி!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//பெயர் வரக்கூடாது என்று குதிரை விடும் ஆள் // இது தப்பு குதிரை விட வேணும் எண்டு நினைத்து உள்ள இருந்து ஒரு பட்சி சொல்லி அது உணர்வாய் பிற வாகித்து அப்புறம் தான் குதிரை. அட இப்பிடி எடுத்தமா கவுத்தமா எண்டு கூடாது.

//www.kathavu.com// ஒரு பேஸ் புக் குரூப் தொடக்கி முடிவெடுப்பமா ?

ஜேகே சொன்னது…

////www.kathavu.com// ஒரு பேஸ் புக் குரூப் தொடக்கி முடிவெடுப்பமா ?//

தொடங்கி category design பண்ணுவோம் .. இதிலே இலக்கிய வீடியோ .. ஏனைய மீடியாக்களையும் கொண்டு வரவேண்டும் .. டிஸ்கஷன் வேண்டும் தான்!

Mano Karan சொன்னது…

என்ன இது? சிவனேண்டு நம்மள சும்மா இருக்க விடமாட்டாங்க போல... மணி அடிக்கிறது, தோரணம் கட்டுறதெண்டு. எத்தின பேர் இப்பிடிக் கிளம்பி இருக்கீங்க? :)

பி.கு: இப்ப யானைகளுக்கு எல்லாம் சனி உச்சமாம்..

எஸ் சக்திவேல் சொன்னது…

கவிதை எழுதுவன் எல்லாம் கதை எழுதலாம், ஆனால் கதை எழுதுபவனெல்லாம் கவிதை எழுதமுடியாது... (சிவாஜி ஸ்டைலில் 'வாசிக்கவும்)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

யானைக்கு வியாழமாற்றம் (குரு பெயர்ச்சி) எப்படி மச்சி ?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சக்தி அண்ணை ரஜனி ஸ்டைல் பெட்டர் இல்லை ?

//கண்ணா கவிதை எழுதுவன் எல்லாம் கதை எழுதலாம், ஆனால் கதை எழுதுபவனெல்லாம் கவிதை எழுதமுடியாது. இது எப்படி இருக்கு ?//

செழியன் சொன்னது…

// யானை பெரிசா இருந்தா போதும் பிளிருதா எண்டது பிரச்சனை இல்லை//
அது சரி அண்னை கடைசி மட்டும் சொல்லவே இல்லயே!! யானைக்கு மணி கட்டுவது யார் எண்டு!!!!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

அதான் இப்ப நீங்க வந்துடீன்களே செழியன்.

செழியன் சொன்னது…

ஆகா!! நானே வாயைக்கொடுத்து மாட்டிக்கிட்டனா!!!இனியென்ன உங்கட பதிவின்ர கடைசி வரியப் போட்டாவது சமாளிப்பம் என்ன!!
//யானைக்கு மணி கட்டுறதில இதெல்லாம் சகஜமப்பா.
டோண்டு வொரி பீ ஹப்பி.//

கருத்துரையிடுக