தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 08, 2012

தாவீது அடிகளார் புத்தகக் கடையும் Database System உம்

தாவீது அடிகளார் என்பவர் ஒரு புத்தகக்கடை துறந்தார் - தாவீது புத்தகக்கடை David Book Stores. அந்தக் கடையை எல்லாரும் DB, DB என்று அழைத்தனர். அந்தக் கடையில் கல்லாவில் இருக்கும் அடிகளார் ரொம்ப ஸ்டிரிக்டு, அதால அவரை டீமன் (daemon) எண்டு மரியாதையா அழைப்பது வழக்கம். இந்த டீமன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ‘You Sir’, ‘You Sir’ என்று அழைப்பார் அது மருவி யூசர் (user) என்று ஆகியது, அந்த கடையில் வேலை செய்யும் எல்லாரும் வாடிக்கையாளர்களை யூசர் என்று அழைப்பது அந்தக் கடையின் வாடிக்கை ஆகி விட்டது.

புத்தகம் வாசிக்க இன்னுமொரு சாட்டு.

இந்தக் DB கடையில வாங்கி விக்குறதுதான் வேலை. Users வந்து பாத்துட்டு போவினம்(Read), வாங்கிப் போவினம்(Delete), வித்துப் போவினம்(Create), கொடுக்கல் வாங்கல்களை செரி செய்து போவினம்(Update). சில சமயங்களில் புதுதாக புத்தக வகைகளை கொணர்ந்து விப்பினம். அப்ப அதுக்கெண்டு அலுமாரியில் தட்டு ஒதுக்க வேண்டும். அலமாரிகளும் நிரம்பின பிறகு புது அலமாரி வேண்ட வேணும்.
கடையில வியாபாரம் அதிகமாகி விட்டதால பில்லு போட ஒரு மேனேஜரை நியமித்தார் அடிகள். அவர் பெயர் தீ.ரா.ஜாக்சன். இவரை வேடிக்கையா எல்லாரும் தி’ராங்’க்சக்சன் என்று அழைப்பதற்கு ஒரு காரணமும் இருக்கு. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை ராங்கு (wrong) பண்ணாம ஒழுங்கா ஒரு ஒடரில வியாபாரம் பண்ண அழைத்து செரியா கணக்கு பதிவதால் இவரை the-wrong-jackson = transaction manager என்று அழைப்பர்.

எந்தப் எழுத்தாளர் புத்தகம் எந்த அலமாரியில் இருக்கு எண்டு ஒரு அட்டவணை வைசிருப்பார் நம்ம டீமன், அதை இண்டெக்ஸ் எண்டு சொல்லுவினம். கடையில பலதும் பத்துமா புத்தகங்கள் இருக்கும் பய புள்ளைக ஆர்வமா வருவானுக அவைகளை அளந்து பாத்து யார் எதை வாசிக்கலாம், யார் எதை விக்கலாம், யார் வீட்டுக் புத்தகக் கணக்கை யார் யார் மாத்தலாம் எண்டு ஒரு முடிவை டீமன் அண்ணை எடுப்பார் இதை அக்செஸ் ரைட்ஸ் (access rights) எண்டு சங்கேதம் சொல்லுவினம். தாவீது கண்ணைக் காட்டினா கடைப் பெடியளுக்கு விளங்கிடும் யாருக்கு என்ன அக்செஸ் ரைட்ஸ் எண்டு.
மாதத்தின்  முதல் புதன் கிழமையில வருகிற அந்த இந்திய மாதாந்த சஞ்சிகைக்கு ஒரு பலத்த வரவேற்ப்பு இருக்கு, இப்படி எந்த காலத்தில எதை அதிகம் வாங்குவினம் எண்டு தெரிஞ்சு அதை கல்லாவுக்கு கிட்ட வைச்சிருப்பார் - இதை ஸ்டோர் ப்ரோசீஜர் (stored procedure) எண்டு அவை வியாபார பாணியில சொல்லுவினம்.


ராஜேஷ் குமார் நாவல்கள் தனியா சுஜாத்தா நாவல்கள் தனியா அடிக்கி இருந்தாலும் அவயிண்ட துப்பறியும் நாவல்களுக்கு மீசை முளைச்ச ராணிக்காமிஸ்களிட்ட ஒரு கிராக்கி இருந்தது, அதுக்காக அவர் இந்த கிரைம் புத்தகங்களை எல்லாம் ஜொயின்(join) பண்ணி ஒரு சீ-ஆர் கொப்பியில எழுதி வைச்சிருப்பார் - இந்த சீ-ஆர் கொப்பிய கிரைம் வியூ (view) எண்டு கடைப் பெடியள் சொல்லுவானுகள்.

இப்படி சீரும் சிறப்புமாய் புத்தகக் கடை நடத்தி இருக்க வேண்டிய தாவீது அடிகள் யாழ்ப்பாண நூலகம் எரிந்த சேதி கேட்டு பொறுக்காமல் உயிர் நீத்தார்.

                   
சமர்ப்பணம் தாவீது அடிகளார் - யாழ் நூலக எரிப்பு சேதி கேட்டு உயிர் நீத்த புத்தகக் காதலன் + புத்திஜீவி + கல்விமான்.

அர்த்தமுள்ள வலைத்தளங்கள் பற்றிய என் தகவல் தொழில்நுட்ப தொடர்பான இன்னொரு பதிவு.

ஞாயிறு, மார்ச் 25, 2012

ஒரு பெரும் செயல்!

யாழ் ஐ.டி எனும் தன்னார்வு முனைப்பு அமைப்பு பற்றி என்னை தனிப்பட்ட முறையில் தெரிந்த பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். எழுத்தின் வழி மட்டும் வாலிபனை வால் பிடிக்கும் யாரவது இருப்பின், முன்பு ஒரு பதிவிலும் தொடர்பான பின்னூட்டத்திலும் யாழ் ஐ.டி பற்றி குறிப்பிட்டதை கண்டிருப்பீர். அதை அதிகம் தெரியாமல் இந்த கடிதத்தை வாசிப்பவர்கள் அதன் அறிமுகத்திற்க்காய் கிழே சொடுக்கவும்,
  1. அதிகார பூர்வ வலைத்தளம்: http://yarlithub.org/
  2. ஒரு ரசனையான அறிமுகம்: http://yarlithub.org/WhoWeAreTamil.php அல்லது http://www.padalay.com/2011/12/yarl-it-hub-silicon-valley.html
  3. இதன் கனாக் காணருடன் ஒரு நேர்முகம்: http://www.padalay.com/2012/03/01-03-2012.html
  4. ரசிகையின் அங்கலாய்ப்பு: http://www.rasikai.com/2012/03/blog-post_08.html
  5. கனவுகளுக்கான நம்பிக்கை: http://sayys365.blogspot.com.au/2012/03/yit-meet-up-analytical-game-part-2.html
  6. கேலிச்சித்திரம்: http://www.rasikai.com/2012/02/blog-post_27.html
இத்தனை (6) அழகியலுக்கும், இத்தனை காலத்திற்கும் பிறகு எழுதுவதற்கு என்ன இருக்கு, இது விட்டில்த்தனமா, வியாபாரமா, இல்லை வியாகூலமா ?
Simple, என் கண்கள் சொருக மறந்ததற்க்கும், ஒரே கனவு திரும்ப திரும்ப தொல்லை பண்ணுவதற்கும், pizza செரிக்காமல் போனதற்கும், மனச்சாட்சியுடன் ஏற்ப்பட்ட மணமுறிவுக்கும் மருந்து தேடும் முயற்சி.

YIT அல்லது இதுமாதிரியான ஆக்க முயற்சிகளை நோக்கி நீளும் எல்லாத் தமிழ்ப் பெரும் கைகளுக்கும் இந்தக் கடிதம் முகவரி இடப்படுகிறது.........

yarl it
"ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம் - ஒரு பெரும் செயல் செய்வாய், வா! வா! வா!"
பெரும் குழப்பத்துக்கும், மயக்கத்துக்கும் மத்தியிலே, கண்கள் நிறைய கனவும் தோள்கள் நிறைவும் தினவும் கொண்ட, மேலே நகரும் வழி தெரியாத / இல்லாத, என் ஆருயிர் பொறியியல் தம்பிகளுக்கு,
ஏறக்குறைய அதே நிலைப்பாட்டில் இருக்கும் அண்ணன் எழுதிக் கொள்வது.

எங்கெங்கே எல்லாம் தர்மம் வலுவிழந்து அதர்மம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் நான் அவதரிக்கிறேன் என்று கண்ணன் சொன்னதாக கீதை சொல்கிறது. இதுக்குள் இருக்கும் சடங்குகளை ஒதிக்கி விட்டு சங்கதியை பாரு. எப்பெப்போ சவால் முன் வருகிறதோ அப்பப்போ உன்னை ஹீரோ ஆக்கிக்கொள்ள (ஒரு பெரும் செயல்) ஒரு வாய்ப்பு. சவால் அதிகமாக அதிகமாக உனக்கு கிடைக்க இருக்கும் வெகுமதியும் அதிகரிக்கும் - exponentially.

தயாராகு, இத்தனை கால ஆகுதியும், இதனை கால காத்திருப்பும் வழி சமைத்து, இதோ அலிபாபா குகை, திறக்கத் தயாராக - நீ தயாராகு. குகையை தேடி மந்திரம் கற்று புதையலை வெல்ல நீ தயாராகு. கைகளை பரபர என்று தேய்த்து, கண் இடுக்கி, புத்தி ஒருகண் சேர்த்து, கால் உதைத்து ஒரு பெரும் செயல் செய, ஒரு பெரும் விழாக் கொண்டாட தயாராகு. வெற்றிக்குப்பின் சரசங்களையும் சம்பிரதாயங்களையும் வைத்துக் கொள்ளலாம். இப்போதைக்கு கிளியின் கழுத்தில் அம்பு நுனி நுழைய வேண்டிய பகுதியில் மட்டும் உன் கவனம் இருக்கட்டும்.

ஆண்டாண்டு காலமாக உன் அண்ணன், அண்ணனுக்கு அண்ணன், பாட்டன், அவன் பாட்டனுக்கு பாட்டன் எல்லாம் செய்த வித்தை தான் உன் இரத்தம் நாடி நரம்பு எல்லாம் ஊறிப்போன சித்து - இந்தக் கணக்கு. இது பப்பால ஏத்தும் வழக்கமான பம்மாத்து இல்லை; உசுப்பேத்தும், உணர்ச்சிகளை கிளற வைக்கும், உள்ளீடற்ற அரசியல் அல்ல, முறையான சான்றுகளுடனும் செரியான புள்ளிவிவரங்களுடனும் நிரூபிக்க கூடிய உன் சமூகத்தின் இயல்பு.

ஒவ்வொரு சமூகத்திற்கும் அதுக்கெண்டு தனியான இயல்பு உண்டு- அது தான் அதை சமூகமாக group selection வழி நவீன கூர்ப்பு தத்துவத்திற்கு அமைய வாழ வைத்தது. இதில் பெருமைக்கும் சிறுமைக்கும் ஆன எல்லா குணாம்சங்களும் உள்ளடக்கம்.

வாழுவியல் ஆதாரங்கள்:
உனக்கு நினைவிருக்கா, சின்ன வயதில் தேத்தண்ணி குடிக்கும் ஒரு பின்னேரம், அம்மா பகோடாவை ஆளாளுக்கு பிரித்த பகிந்த படி, வேம்பு சாமரம் வீசும் மண் முத்தம், ஊஞ்சலிலும் சூடான சீமந்துக் குந்திலும் நாங்கள் எல்லாம் தேயிலையின் வாசத்தை நுகர்ந்தபடி, என்ன பேசுவோம் எண்டு: நடிகைகளோ, நாலாம் வீட்டின் நாலு பேருக்கு தெரியாத சங்கதியோ, விரிவான நாட்டு நடப்போ அல்ல; புதிர்கள், கணக்குகள், கணக்குகள், புதிர்கள்.

ஆடுகடிக்காமல் புல்லும், புலி கடிக்காமல் ஆடும் அந்தக் கரைக்கு போவது எப்படி?; பத்துக்குள் ஒரு எண்ணை மனதுக்குள் நினைத்துக்கொள் அதை ரண்டால் பெருக்கி ரெண்டைக் கூட்டி மூன்றால் பெருக்கி கூட்டி விடை சொல் - நீ நினைத்தது இதுதானே; ஏழு நாணயங்கள் ஒரு முள்ளுத் தராசு ஒரு நாணயம் மட்டும் பளுவில் குறைவு இரண்டே தவணையில் எப்படி கண்டு பிடிப்பது. பெரும்பாலான எம்மைப் போன்ற யாழ்ப்பாணத்து சிறார்களுக்கு இந்தக் கணக்குகளும் புதிர்களும் அத்துப் படி என்பது நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்லை. ஆனால் நாஙள் இவற்றைப் பேசி நிறைய வருடங்களுக்கு பிறகு கணணி விஞ்ஞானம் கற்கும் போது, algorithm படிக்கும் போது, தொடர்ந்து இந்தத் துறையில் பணியாற்றுகையில் problem solving இன் விற்பனை விலை தெரியும் போது, இந்த அத்திவாரத்தை குடும்ப வழமைக்குள் வித்திட்டவர்களை - எங்கள் மூதைகளை - கண்மூடி பிரார்த்தித்துக் கொண்டேன்.

பின்னொரு மழை நாளில், வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு பொரித்த பருப்பு வடையும் வெறும் தேத்தண்ணியும் சுவைத்தபடி, ஊறும் நிலத்தின் மேல் சாக்கு விரித்து அதன் மேல் பாய் விரித்து, இரவிரவாய் சிமினி விளக்கு வைத்துக்கொண்டு அம்மமாவுடன் முன்னூற்றிநாலு விளையாடியது மறந்திருக்க மாட்டாய். அவவோடு விளையாடுவது இலகல்ல, துரும்பு எண்ணோணும், மேசை கவனம் வேணும், மடித்த பிடி பாக்க ஏலாது, போன பிடியில் இந்த கார்டை போட்ட படியால், டயமண்ட் ஒப்பின் பண்ணும போது களித்த படியால் ஆடித்தன் ஜெக் எங்க இருக்கெண்டு ஊகிக்க தெரியாமல் முழிக்க முடியாது. அதுவும் கணக்கு, மனக் கணக்கு - find - S algorithm / decision tree / probability : machine learning இன் அடிப்படை எல்லாம் 304, அந்த lectures முழுதும் அம்மம்மா நினைவாய், அவ்வப்போ அவ சுடும் தோய்ப்பனும்.

வேலி போடும் போது, பொங்கலுக்கு உலக்கை வைச்சு சிவப்பும் வெள்ளயுமா கோலம் போடும் போது, சயிக்கில் கம்பி, முள் முருங்கை செத்தல் பிடி -> வெடி, சாமிக்கு வாகனம் கட்டும் போது, சகடயில பெரிய திருவாசிய பலன்சு பண்ணேக்கை, லவுஸ் ஸ்பீக்கர் போட்டு கோவிந்தராஜனை அலறவிடேக்க, பழைய ரேடியோ உடைச்சு மைக் செய்யேக்க, பங்கர் வேட்டேக்க, அதுக்கு குத்தி அடுக்கி மண் மூட்டை வைச்சது, துலா, கப்பி - அதுக்கு எண்ணை விடுறது, oven இல்லாமல் கேக் சுட்ட அம்மா, tin-milk ஐ உரலில் தேய்த்து ஓப்பின் பண்ணும் வித்தை, உப்பு போட்ட ஜாம் போத்தல் விளக்கு........ எண்டு எங்களை எதோ இதுக்கே நேர்ந்து விட்ட மாதிரி நாங்கள் விஞ்ஞானமும், கணக்கும், பொறியியலும் சேர்ந்த வாழுவியலை வாழ்ந்தோம். இந்த வித்தை, இந்த சித்து எங்களுக்கு எங்கள் பாட்டிக்கு அம்மாக்கு ஆட்டுக்குட்டிக்கு எண்டு எல்லத்தரப்பிலும் சொல்லி, பயின்று, கை வந்தது. உன் நாடி நரம்பு புத்தி சித்தம் எல்லாம் ஊறிப்போன ஒன்று. இது உன் வலிவு என்பதை விட உன் இயல்பு - தயவு செய்து புரிந்துகொள்.

அனால் இந்த பழம் பெருமை, ஏறு பட்டி தலை நார் எல்லாம் merit list தாண்டி என்னத்தை செயதம் எண்டு கேக்குறியா. கவலைப் படாதே எங்கள் கனவுகள் engineering entrance குறிப்பாய் merit list என்று ஒடுக்கமானதல்ல. வைரமுத்து சொன்னப்போல
"எம் கண்களில் இருக்குற கனவும் தோள்களில் இருக்குற தினவும் ஒரு கிரகத்தையே படைக்க வல்லது".

நாடும், நாடு கடந்தும் என்ன ஒரு கிரகமே உனக்கு சொந்தமாகும் வழி சொல்கிறேன் கேள்.

ஆதாரங்கள் தொடரும்.....


ஒளி படத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா

....... ....... ...... ....... ....... ......
....... ....... ...... ....... ....... ......
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழும சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே - நாடெல்லாம்
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா
- சுப்பிரமணிய பாரதி

செவ்வாய், அக்டோபர் 18, 2011

அர்த்தமுள்ள வலைத்தளம் - I

Semantic Web - அர்த்தமுள்ள வலைத்தளங்கள் அடுத்த வலைத்தள சந்ததி என்று சில ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சியாளர்களால் பரவலாக கருதப்பட்ட அமைப்பு. அனால் இதன் எதிர் காலம் பற்றி பல்வேறுபட்ட சந்தேகங்களை இன்றைக்கு எழுப்புகிறார்கள். அனால் அதையும் மீறி இதன் எதிர்காலத்தை நம்பும் சிலர் இருக்குறார்கள்.

அர்த்தமுள்ள வலைத்தளங்கள் (semantic web) பற்றி ஒரு அறிமுகம் தருவதற்கு முன் வலைத்தளங்கள் எப்படி இயங்குகின்றன , அவற்றின் வரலாறு பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
internet / இணையம் என்பதற்கும் வலைப்பின்னலுக்குமான (web) வேறுபாடு வயிரவருக்கும் நாயுக்குமிடயிலானது போல, எப்படி நாயை வயிரவர் என்று நினைத்து வணகுவோமோ அப்படி இந்த இரண்டையும் போதுமான அளவு குழப்பி அடிப்பார்கள்.

இணையம் என்பது கணணிகளின் தொடர்பாடலுக்கானஅமைப்பு (framework) மற்றும் அவை தொடர்பாட பயன்படுத்தும் (protocol) வரைவுடன்பாடு சேர்ந்த (system) அமைப்பு. இந்த அமைப்பின் மேலே இயங்கும் ஒரு சேவை தான் வலைத்தளங்கள். மின்னஞ்சல் (ஈ-மெயில்), கோப்பு தரவேற்றம் மற்றும் தரவிறக்கம் (file uploading and downloading: ftp), தட்டி உரையாடல் (chatting), இணைய வழி தொலை தொடர்பாடலும் தொலைக்காட்சியும் (VOIP & IP-TV) போன்றவை ஏனைய இணைய சேவைகள்.
உலகளாவிய வலைப்பின்னல் WWW என்பது இணைய வழியாக http எனும் தொடர்பாடல் வரைவின் (protocol) வழி இணைக்கப்பட்டுள்ள (documents, audio, photos, and vedio) கோப்புகள் + தரவுப் பத்திரங்கள் , ஒலி, படங்கள் (புகை மற்றும் வரை ), சலனப்படங்கள் ஆகும். இணைய உலாவி / browser என்பது http வரைவைப் (protocol) புரிந்துகொண்ட உலகெங்கும் இணையத்தோடு இணைந்திருக்கும் இந்த வகைவகையான தரவுகளை உங்கள் பார்வைக்கு பகிரும்.

நவீன வலைப்பின்னல் அமைப்பில் ஒரு இணையப்பக்கம் (webpage) என்பது பல்வேறுபட்ட தரவு அலகுகளை (web resource) சேர்த்து தருகின்றது. ஒவ்வொரு தரவு அலகும் இணைய பக்கம் உட்பட தனித்து URL எனும் தனித்த-தரவு-அடையாளம் மூலம் அடையாளப்படுத்தபடும். இன்றைக்கு ஒவ்வொரு இணையப்பக்கமும் ஒரு தொகை இணையத்தரவலகுகளை (web resource) அதற்குரிய URL மூலம் குறித்து நிற்கும். இந்த இணையத்தரவலகுகளை இணைக்கும் போது இணையப்பக்கம் ஒரு சொல் அல்லது சொற்றொடர் வழியாக இணைத்திருக்கும். இந்த சொல் / சொற்றொடர் உலகளாவிய வலைப்பின்னல் தேடல் சேவைகளால் லாகவமான முறையில் பயன் படுத்தப்படுகின்றன. ஆயினும் இந்த சொல், அது குறித்து நிற்கும் URL, அந்த தரவுகாட்டியால் (URL) அடையாளப்படுத்தப்படும் இணையத்தரவு (web resource) என்பவற்றுக்கிடையிலான உறவு தெளிவானதல்ல. உதாரணமாக இங்கே சொடுக்கவும் (click here) எனும் சொற்றொடர் மூலம் இணைக்கப்பட்ட இணையத்தரவு (web resource) பற்றி 'இங்கே சொடுக்கவும்' எனும் வார்த்தை கொண்டு எதையும் அனுமானிக்க முடியாது.



இணையத்தில் கொட்டிக்கிடக்கும் கோடானகோடி இணையத்தரவு (web resource) களின் நம்பகத்தன்மை பற்றிய விவாதத்தை கொஞ்சம் ஒதிக்கி வைத்துவிட்டு , இந்த பரந்துபட்ட தகவல் திரட்டை வினைத்திறனுடன் பயன்படுத்த தற்போதைய வலைத்தள அமைப்பில் உள்ள குறை பாடுகளையும் அதற்கான நிவர்த்திகளையும் தேடலாம். html எனும் வரைவுக்கிணங்க கோர்க்கப்பட்டுள்ள இணையப் பக்கங்கள் http எனும் வரைவுக்கிணங்க பரிமாறப்படும். இணைய உலாவிக்கு http வரவுக்கிணங்க தொடர்பாடி html மொழியை / வரைவை புரிந்து நமக்கு பரிமாறும்(render). இந்த அமைப்பில் தரவுகளை அச்சுக் கோர்ப்பது போல் கோர்க்க (render) html உதவினாலும் மென்பொருள் ஒன்று இந்த தரவுகளை புரிந்துகொள்ள வழியில்லை.தேனுக்கு உள்ளேயே கிடந்தது ஊறி பரிமாறினாலும் அகப்பை அதன் சுவை அறியாது என்பது போல, இணைய உலாவிக்கு தரவு -> தகவல் -> அறிவு பற்றிய புரிதல் இல்லை.

உலக வலை எங்கும் சிக்கி தவிக்கும் தகவல் மீன்களை கணணிகளே பிரித்து , ஆய்ந்து , கொய்து, பொரித்து, குழம்பு வைத்து பரிமாற வழியில்லை. Fried rice செய்யுற அறிவையும் புட்டவிக்கும் அறிவையும் சேர்த்து நவீனமாக புட்டு-கொத்து வந்தது போல கணணிகளும் இந்த வலைத்தள தரவுகளை கிரகித்து அறிவாக்குமா எனும் கேள்விக்கு அர்த்தமுள்ள கணித்தல் (semantic computing) மற்றும் வலைப்பின்னல் பெரு வெளியில் இணைந்த தரவுகள் சேர்ந்த அர்த்தமுள்ள வலைத்தளம் எனும் கருத்தியலை பதிலாக வைக்கிறார்கள் சிலர், ஆனால் சிலர் அதன் எதிர்காலத்தையும் நடைமுறை உசிதத்தையும் பலமாக சந்தேகிக்கிறார்கள்.

அர்த்தமுள்ள வலைத்தளம் நடைமுறையில் உள்ள http வலைத்தளங்களை பிரதியீடு பண்ணப் போவதில்லை, மாறாக அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதே அதன் இலக்கு. வலைத்தளங்களில் கணனிக்கு புரியும் வகையில் தரவைப் பதியின் அந்த வலைத்தளங்களை அர்த்தமுள்ள வலைத்தளங்கள் எனலாம் - semantic web.
Artificial intelegince செயற்கை அறிவாற்றல் ஆராய்ச்சியாளர்கள் அறிவை பதிவதற்கு சிக்கலான வரைபட அமைப்பிலான (graph structure) தரவு-அமைப்பொன்றை (data-structure) உபயோகப் படுத்துகின்றனர். ontology / சொல்லரி எனப்படும் இந்த தரவமைப்பில் வேறுபட்ட வினைத்திறன் (effiency), வெளிப்படுத்துமாற்றல் (expresiveness) போன்ற பல பரிமாணங்களில் வேறுபட்ட implementations செயன்முறைகள் உள்ளன. அவை பற்றி நேரமிருந்தால் பிறகு பார்க்கலாம்......