செவ்வாய், அக்டோபர் 18, 2011

அர்த்தமுள்ள வலைத்தளம் - I

Semantic Web - அர்த்தமுள்ள வலைத்தளங்கள் அடுத்த வலைத்தள சந்ததி என்று சில ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சியாளர்களால் பரவலாக கருதப்பட்ட அமைப்பு. அனால் இதன் எதிர் காலம் பற்றி பல்வேறுபட்ட சந்தேகங்களை இன்றைக்கு எழுப்புகிறார்கள். அனால் அதையும் மீறி இதன் எதிர்காலத்தை நம்பும் சிலர் இருக்குறார்கள்.

அர்த்தமுள்ள வலைத்தளங்கள் (semantic web) பற்றி ஒரு அறிமுகம் தருவதற்கு முன் வலைத்தளங்கள் எப்படி இயங்குகின்றன , அவற்றின் வரலாறு பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
internet / இணையம் என்பதற்கும் வலைப்பின்னலுக்குமான (web) வேறுபாடு வயிரவருக்கும் நாயுக்குமிடயிலானது போல, எப்படி நாயை வயிரவர் என்று நினைத்து வணகுவோமோ அப்படி இந்த இரண்டையும் போதுமான அளவு குழப்பி அடிப்பார்கள்.

இணையம் என்பது கணணிகளின் தொடர்பாடலுக்கானஅமைப்பு (framework) மற்றும் அவை தொடர்பாட பயன்படுத்தும் (protocol) வரைவுடன்பாடு சேர்ந்த (system) அமைப்பு. இந்த அமைப்பின் மேலே இயங்கும் ஒரு சேவை தான் வலைத்தளங்கள். மின்னஞ்சல் (ஈ-மெயில்), கோப்பு தரவேற்றம் மற்றும் தரவிறக்கம் (file uploading and downloading: ftp), தட்டி உரையாடல் (chatting), இணைய வழி தொலை தொடர்பாடலும் தொலைக்காட்சியும் (VOIP & IP-TV) போன்றவை ஏனைய இணைய சேவைகள்.
உலகளாவிய வலைப்பின்னல் WWW என்பது இணைய வழியாக http எனும் தொடர்பாடல் வரைவின் (protocol) வழி இணைக்கப்பட்டுள்ள (documents, audio, photos, and vedio) கோப்புகள் + தரவுப் பத்திரங்கள் , ஒலி, படங்கள் (புகை மற்றும் வரை ), சலனப்படங்கள் ஆகும். இணைய உலாவி / browser என்பது http வரைவைப் (protocol) புரிந்துகொண்ட உலகெங்கும் இணையத்தோடு இணைந்திருக்கும் இந்த வகைவகையான தரவுகளை உங்கள் பார்வைக்கு பகிரும்.

நவீன வலைப்பின்னல் அமைப்பில் ஒரு இணையப்பக்கம் (webpage) என்பது பல்வேறுபட்ட தரவு அலகுகளை (web resource) சேர்த்து தருகின்றது. ஒவ்வொரு தரவு அலகும் இணைய பக்கம் உட்பட தனித்து URL எனும் தனித்த-தரவு-அடையாளம் மூலம் அடையாளப்படுத்தபடும். இன்றைக்கு ஒவ்வொரு இணையப்பக்கமும் ஒரு தொகை இணையத்தரவலகுகளை (web resource) அதற்குரிய URL மூலம் குறித்து நிற்கும். இந்த இணையத்தரவலகுகளை இணைக்கும் போது இணையப்பக்கம் ஒரு சொல் அல்லது சொற்றொடர் வழியாக இணைத்திருக்கும். இந்த சொல் / சொற்றொடர் உலகளாவிய வலைப்பின்னல் தேடல் சேவைகளால் லாகவமான முறையில் பயன் படுத்தப்படுகின்றன. ஆயினும் இந்த சொல், அது குறித்து நிற்கும் URL, அந்த தரவுகாட்டியால் (URL) அடையாளப்படுத்தப்படும் இணையத்தரவு (web resource) என்பவற்றுக்கிடையிலான உறவு தெளிவானதல்ல. உதாரணமாக இங்கே சொடுக்கவும் (click here) எனும் சொற்றொடர் மூலம் இணைக்கப்பட்ட இணையத்தரவு (web resource) பற்றி 'இங்கே சொடுக்கவும்' எனும் வார்த்தை கொண்டு எதையும் அனுமானிக்க முடியாது.இணையத்தில் கொட்டிக்கிடக்கும் கோடானகோடி இணையத்தரவு (web resource) களின் நம்பகத்தன்மை பற்றிய விவாதத்தை கொஞ்சம் ஒதிக்கி வைத்துவிட்டு , இந்த பரந்துபட்ட தகவல் திரட்டை வினைத்திறனுடன் பயன்படுத்த தற்போதைய வலைத்தள அமைப்பில் உள்ள குறை பாடுகளையும் அதற்கான நிவர்த்திகளையும் தேடலாம். html எனும் வரைவுக்கிணங்க கோர்க்கப்பட்டுள்ள இணையப் பக்கங்கள் http எனும் வரைவுக்கிணங்க பரிமாறப்படும். இணைய உலாவிக்கு http வரவுக்கிணங்க தொடர்பாடி html மொழியை / வரைவை புரிந்து நமக்கு பரிமாறும்(render). இந்த அமைப்பில் தரவுகளை அச்சுக் கோர்ப்பது போல் கோர்க்க (render) html உதவினாலும் மென்பொருள் ஒன்று இந்த தரவுகளை புரிந்துகொள்ள வழியில்லை.தேனுக்கு உள்ளேயே கிடந்தது ஊறி பரிமாறினாலும் அகப்பை அதன் சுவை அறியாது என்பது போல, இணைய உலாவிக்கு தரவு -> தகவல் -> அறிவு பற்றிய புரிதல் இல்லை.

உலக வலை எங்கும் சிக்கி தவிக்கும் தகவல் மீன்களை கணணிகளே பிரித்து , ஆய்ந்து , கொய்து, பொரித்து, குழம்பு வைத்து பரிமாற வழியில்லை. Fried rice செய்யுற அறிவையும் புட்டவிக்கும் அறிவையும் சேர்த்து நவீனமாக புட்டு-கொத்து வந்தது போல கணணிகளும் இந்த வலைத்தள தரவுகளை கிரகித்து அறிவாக்குமா எனும் கேள்விக்கு அர்த்தமுள்ள கணித்தல் (semantic computing) மற்றும் வலைப்பின்னல் பெரு வெளியில் இணைந்த தரவுகள் சேர்ந்த அர்த்தமுள்ள வலைத்தளம் எனும் கருத்தியலை பதிலாக வைக்கிறார்கள் சிலர், ஆனால் சிலர் அதன் எதிர்காலத்தையும் நடைமுறை உசிதத்தையும் பலமாக சந்தேகிக்கிறார்கள்.

அர்த்தமுள்ள வலைத்தளம் நடைமுறையில் உள்ள http வலைத்தளங்களை பிரதியீடு பண்ணப் போவதில்லை, மாறாக அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதே அதன் இலக்கு. வலைத்தளங்களில் கணனிக்கு புரியும் வகையில் தரவைப் பதியின் அந்த வலைத்தளங்களை அர்த்தமுள்ள வலைத்தளங்கள் எனலாம் - semantic web.
Artificial intelegince செயற்கை அறிவாற்றல் ஆராய்ச்சியாளர்கள் அறிவை பதிவதற்கு சிக்கலான வரைபட அமைப்பிலான (graph structure) தரவு-அமைப்பொன்றை (data-structure) உபயோகப் படுத்துகின்றனர். ontology / சொல்லரி எனப்படும் இந்த தரவமைப்பில் வேறுபட்ட வினைத்திறன் (effiency), வெளிப்படுத்துமாற்றல் (expresiveness) போன்ற பல பரிமாணங்களில் வேறுபட்ட implementations செயன்முறைகள் உள்ளன. அவை பற்றி நேரமிருந்தால் பிறகு பார்க்கலாம்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக