சனி, மார்ச் 31, 2012

வசதிக்கான மறதி; மறதி எனும் வசதி;


போத்தலுக்குள் இருக்கும் தோய்ப்பனோடு (பயிற்றம் பணியாரம்)
ஊரின் நினைவும் குறைந்து கொண்டே போனது
நிலத்தின் கீழே விரைந்து ஓடுகிற இரயிலோடு
என் கவனமும் விரைந்து தொழிலில் கலந்து போனது
கோவில் கும்பாபிசேகம்,
சங்கட சதுர்த்தி,
எரிந்தடங்கிய தீ
எல்லாமும்.

அவ்வப்போ இணைய செய்திகள்,
facebookஇல் பகிரப்பட்ட video இக்கள்
எப்பவோவாவது சில கவிதை கதை கட்டுரைகள்
ஊரின் மங்கலான ஒரு புகைப்படத்தை நினைவுக்கு கொணரும்-
சோட்டி போட்ட பேபி மாமிகள் கடைசியாக் கையாட்டியது;
சக்திவேல் மாமாவின் பழைய ரலி சயிக்கில்;
பல்லிளித்த குதிரையில் வரும் பிள்ளையாரை,
அய்யர் வெட்டிய வாழையை-
'அரக்கன் கொன்ற பிள்ளையாராய்' வர்ணிக்கும் ஞானம் அண்ணை;
எல்லாப் படங்களிலும் மெதுவாகப் புகை படிகிறது.

மறந்து போன நண்பன்,
சாட்டில் வந்து
ஹாய் சொல்லும் போது,
அருமையாக நானும் வெட்டியாக இருக்கும் போது,
சம்பாசிக்குறோம்.
தன் மறந்துபோகும் படங்களை தூசு தட்ட முயலுகிறான்.
நிறைய நினைவு படுத்தினாலும்
பழைய காட்ச்சிகள் சில மனதில் வருமாட்டேன் என்கிறது.
இப்போ முயலுவதற்கு கூட முயல்வதில்லை.
கிரெடிட் கார்ட் மாசாமாசம் கட்டுவதற்கு மறக்க கூடாது எனும் பதட்டம் எனக்கு.

சில சமயங்களில் அந்த படங்களை
என் எழுத்தின் வழி சித்திரமாய் தீட்ட முயலுகுறேன்.
(சக்தி அண்ணையும் இதையே இப்படி சொல்லி இருக்குறார்.)

எப்போதாவது தூக்கத்தில் வரும் அந்த பழங்கனவும்
தூக்கமும்
மெதுமெதுவாய் என்னை விட்டு தொலைவுக்கு.
கண்களை விற்று தூக்கமோ,
தூக்கத்தை விட்டு கண்களையோ
கட்டாயம் வாங்கி ஆகவேண்டி இருக்கு.

5 கருத்துகள்:

ஜேகே சொன்னது…

//போத்தலுக்குள் இருக்கும் தோய்ப்பனோடு//
நான் யோசிச்சன் நல்லெண்ணெய் என்று! US ல quarantine பிரச்சனை இல்லையா?

//அய்யர் வெட்டிய வாழையை
அரக்கன் கொன்ற பிள்ளையாராய் வர்ணிக்கும் ஞானம் அண்ணை,//
அழகான வரிகள், அரசியல் ஏன் இந்த கவிதையில் வரப்போகிறது என்ற நம்பிக்கையில் தமிழ் உணர்வாளர்களிடம் இருந்து தப்பிவிட்டீர்கள்!

//பல்லிளுத்த குதிரையில்//
என்ன அர்த்தம்?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//US ல quarantine பிரச்சனை இல்லையா?// இருக்கு பக்கெட்டில் ingredients போன்ற சில சமாச்சாரங்களை எழுதி ஒட்டி வந்தால் தப்பலாம்.

//பல்லிளுத்த குதிரையில்// பிழை திருத்தி ஆகிவிட்டது.

அரசியலா, நீங்கள் என்னை ஒரு வழி பண்ணாம விடமாட்டியல் போல.

எஸ் சக்திவேல் சொன்னது…

>சக்திவேல் மாமாவின் பழைய ரலி சயிக்கில்

சஞ்சயன் மாமா கோவிக்கப் போகிறார்

ஏ.எ.வாலிபன் சொன்னது…

அட இதை எழுதும் போது நீங்கள் கதைகளின் வழி அப்பாவின் ரலி சயிக்கில் எடுத்துக்கொண்டு பயணிக்கும் வசதி பற்றி சொன்னது நினைவு வந்தது, சஞ்சயன் அதுக்கு பிறகே.

எஸ் சக்திவேல் சொன்னது…

சும்மா வேடிக்கைக்காகச் சொன்னேன். சஞ்சயன் என் நண்பர்தான் . பதிவுலகம் மூலம்தான் நண்பரானார். அவர் பதிவுகளின் தீவிர வாசகன் நான். ஒருவிதத்தில் நான் பதிவெழுத ஒரு inspiration அவர்.

கருத்துரையிடுக