வியாழன், மார்ச் 15, 2012

ஜெனீவா

சாத்தான் வேதம் ஓதுகிறது.
சட்டம்பி ஆள் சேர்கிறார்.
பிள்ளையையும்  கிள்ளி
தொட்டிலையும் கிள்ளினவன்
களையையும் கிள்ளுவான் எண்டு
ஒரே நாள் உண்ணாவிரத்தில்
உரிமை பெற்றுத்தந்தவர்கள்
பிரமிப்பை கொடுக்குறார்கள்.
முளையைக் கிள்ளாவிட்டால் செரி என்று
இன்னமும் முனைப்பாய் அலைகிறது முத்துக்குமரன் ஆவி.

தங்களூர் சிலையைக்
காக்காத காத்தவராயன்கள்
கடல் கடந்த தலையை
மீட்காத சுந்தர பாண்டியர்கள்
கட்டும் உலையை
உடைக்க வழி தெரியாதோர்
எங்களூர் பகைக்கு
வழி சொல்வாரோ ?
அவர்கள் கலையை
வாங்குவதோடு நின்றிருக்கலாம்.

ஏறின பாண் விலையும்
ஏறப்போற பாண் விலையும்
ஆசியாக் கப்புக்குள் ஒளிந்து போக,
பழைய காயங்களும்
புதிய மருந்துகளும் பற்றிய பிரக்ஜை
நீங்களும் வெல்லலாம் ஒருகோடி என்ற
மாயைக்குள் ஒடுங்க.

பிரம்படி யார் யார் முதுகுக்கு விழும்
என்று தெரியாமலேயே
பிரம்படி பற்றி ஒரே அதிரடி.
கிரிக்கட் வெற்றிகளையும்
மனிதஉரிமை தண்டனைகளையும்
ஒப்பு நோக்கும் பட்(டின/டண)த்தார்.

குழல் ஊதி ஊதி பிதுங்கிய வாயுடன் கிருஷ்ண-பரமாத்மா,
உருண்டைக் கண்களும் செஞ்சாய உதடுகளுமாய் மன்மதன்.
போகலாமா வேணாமா எனும் குழப்பத்தில் நந்தனார்.
எழுதி எழுதி சலித்தவற்றை,
சலித்து சலித்து எழுதினவற்றை,
எழுதாமல் இருக்கும் வழி
தெரியாமல் நான்.

எது எப்படியோ,
சாமி இருப்புக்கு வந்தா
சுண்டல் கொடுத்துதானே ஆகவேணும்.
தூக்கி சுத்தின சாமிய உள்ள வைச்சு பூட்டிவிட்டு
கொடுக்கிற சுண்டல
வீட்ட கொண்டு போறதுதானே வழமை.
எங்க எல்லாரும் சேர்ந்து சொல்லுங்கோ,
............இக்கு அரோகரா.

5 கருத்துகள்:

எஸ் சக்திவேல் சொன்னது…

பிரம்படி மீண்டும் அப்பாவிகளுக்குத்தான். இருக்க சுண்டல் கிடைக்கிறது அல்லவா? அரோகரா.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

அரோஓஓஓஓஓகராஆஆஆஆ சக்தி வேலுக்கு

ஜேகே சொன்னது…

சாத்தான் வேதம்
சட்டம்பி ஆள் சேர்ப்பு
வியாழ மாற்றம்
வாலிபன் கவி
ஆளுக்கொரு ஸ்டேடஸ் ...
இண்டைக்கும் போடுவம் என்றால்
சச்சின் ஸ்லோ சென்ஷரி
கடவுள் பக்தி அதிகமா போயி
கடைசியில் அவனோடு நாமும்
ஒரே புள்ளியில்
எல்லாமே போலி .. டோக்டர்ட்!
இல்லாத கடவுளை இருக்கென்று சொல்லாட்டா
மதத்துக்கு ஏது இருப்பு?
மக்களுக்கு ஏது சுண்டல்?
கடவுள் இருக்கிறார்
அரோகரா!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//ஒரே புள்ளியில் எல்லாமே போலி// பக்கா ஜேகே, நிஜம், சுடும் நிஜம், தோலுரித்த உண்மை: இது பாசாங்குதான், அழகான பாசாங்கு. ஆனா நீங்க நெத்தியடி. நல்ல கவிதை. நீங்கள் இனியாவது கவிஞ்ஞர் இல்லை எண்டு சொல்லுவதை நிறுத்தி விடுங்கள்.

புரியாமல் எழுதுவது - கவிதை - screen play: இன்னொரு சமயம் விரிவாக. இப்போதைக்கு அரோகரா.

செழியன் சொன்னது…

அரோகரா.......
//சாமி இருப்புக்கு வந்தா
சுண்டல் கொடுத்துதானே ஆகவேணும்.
தூக்கி சுத்தின சாமிய உள்ள வைச்சு பூட்டிவிட்டு
கொடுக்கிற சுண்டல
வீட்ட கொண்டு போறதுதானே வழமை.
எங்க எல்லாரும் சேர்ந்து சொல்லுங்கோ,
............இக்கு அரோகரா.//

கருத்துரையிடுக