வியாழன், மார்ச் 01, 2012

சொல்லொணா உரை: இது பதிவல்ல.

ஜேகே இந்த மூன்று பத்திகளும் தனித்தனி - வேறு வேறு கவிதை - ஆனால் 'சொல்லொணா' எனும் தலைப்புக்குள் வரும். நான் விரத்தியான ஒரு தனிமை இரவுப் பொழுதில் எழுதியது முதல் பத்தி, பின் கம்பளி, கனவு, கைகளோடு தூங்கிப்போனேன், மறுநாள் FB இல் பகிர்ந்தால் ஒரே 'உச்சு' மழை, அதன் தொடர்ச்சியாய் மற்றவற்றை வேறு பொழுதுகளில் எழுதினேன்.

பேசாப் பொருளை கவிதையில் பேசலாம் என்றால் சொல்லொணா உணர்வுகள் / விடயங்களை / துயரங்களை கவிதையில் சொல்ல நான் முயல்வது ஒன்றும் தப்போ வியப்போ இல்லையே.

கவிதைக்கு அந்தக் கவிஞ்ஞனே பொருள் சொல்லுவதன் வலி பற்றி நேற்றுத்தான் கேதா சாட்டில் கொட்டித் தீர்த்தான் - கிழக்கிந்தியக் பெரும்பான்மை விதிக் காத்து அடிச்சுக் குதறிய வலி அவனுக்கு.

நீங்கள் கிழக்கிந்தியக் கம்பனி என்கிறீர்கள், நான் விதி என்றேன், அவன் எங்களூர் பெரும்பான்மை என்றான், சிலர் தானே புயல் என்று நினைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது இல்லையா.கவிதையை முகூர்த்தம் பார்த்து புணராவிட்டால் இதுதான் கதியோ....

நானே கவிதைக்கு உரை சொல்வது அழகாயிராது, ஆனால் இதை (முதல் பத்தியை) FB இல் பகிர்ந்த போது ஒரு சுவாரசியமான அனுபவம் ஏற்பட்டது, அதைப் பகிர்கிறேன் :=

நண்பன் சிவா: U doing alright man??? What's ur number ? 
தொடர்ந்து என்னிடம் ஒருமணி நேரம் பேசினான். என்னை கொஞ்சம் கிளப்புக்குகளுக்கு போய்வரச் சொன்னான்.
(ஒருக்கா பெரதேனியா சுற்றுலாப் போனபோது நான் இயக்கிய படங்களிற்கு இவன்தான் இசைஅமைப்பாளன், நல்லாப் பாடுவான், தேவாரம் கல்லூரி கீதம் தாண்டி முத்தமிழ் விழா இவன் ஏன் ஏறவில்லை என்று இன்று யோசிக்கிறேன். என் இசைஅறிவு இவன் திறமை அளந்து சொல்லுமளவுக்கு இல்லை, ஆனா நாங்கள் ஒரு நாப்பது அம்பது பெடியள் செமத்தியா ரசிக்கப் பாடினான்.)

ஒரு சகோதரி சாட்டில் வந்து, நக்கலா, ஏன் பொழுது போகலையா என்று கேட்டார், என் நிலைமை சொன்னதும் வைத்தியராகி heal பண்ண முயன்றார் - வைதியருக்கே வைத்தியம் பண்ணுற மாதிரி ஒரு சிக்கலான விஷயம் -முயன்றார்.

நானே பாதிக்கப் பட்டாலும், பாதிப்புகளைப் பற்றி எழுதினாலும் இல்லை பகிடியை எழுதினாலும் எல்லாமே பகிடியாய் தான் பாக்குறானுகளோ என்று பயம் கவ்விக்கொண்டது.

நண்பன் கோபி வழமை போல பக்கத்திலைக்கு பாயசம் கேட்டான்.

நான் பலரது 'உச்'சுக்களை தவிர்க்கும் பொருட்டும் மற்றவர்க்கு உற்சாகம் தரும் பொருட்டும் இப்படி பகிர்ந்தேன் "நிஜமான பூக்களை பார்க்க கற்றுக் கொள்கிறேன் ...."

டாக்குத்தர் மனோவும் கஜனும் சூப்பர் மச்சி என்றார்கள்,

டாக்குத்தர் மனோ இப்படி சந்தோசித்தார்
"சூப்பர் மச்சி..
//அந்த அறையில் எல்லாப் பொருட்களையும் தின்று நின்றது வெறுமை!//
//நிஜமலர்களும் காகித மலர்களும்.....
இடையில் இருந்த அந்த ஒற்றை முள்ளை வெறித்தவாறு நான்//..இங்கு சொல்லப்பட்டதைவிட இதன் மூலம் வாசகனுக்குள் விரியும் சொல்லப்படாத விடயங்கள் பல.. மேலும் தொடர வாழ்த்துக்கள்.."

மனோ அந்தக் கவிதையின் பத்தியை மேலும் நீட்டி முழக்கச் சொன்னான் - அதை வலிந்து வரவழைக்க நான் ஒன்றும் பிறவிக் கவிஞன் அல்லவே.

"இதயம் கனத்தால் வருவது கவிதை......" என்றேன் நான்.

உடனே கோபி "கனத்த இதயத்துடன் தனித்திரு என்று நண்பன் மனோ சொல்லாமல் சொல்கிறான்." என்கிறான்.

சிவா: நீ தவிப்பதும், அதனால் கவிப்பதுவும் அப்படியே அதை இங்கு பதிப்பதுவும்....அதை நாங்கள் மதிப்பதுவும்.... எல்லாமே நன்றாக நடக்கிறது என்றான்.

இதற்கிடையில் சிவா இன்னொரு குண்டை தூக்கிப் போட்டான்: "இவன் போற ஸ்டைலப் பார்த்தா சோனியா காந்தியத்தான் பொண்ணா எடுக்கோணும் எண்டு" இதுக்கு கோபி வேற தன்னுடைய மூன்று+ வருட ஆராய்ச்சி அறிவைப் பயன்படுத்தி ஒரு தூபம் போட்டான் பாருங்க... அடே அப்பா ஐய்த்தலக்கடி கும்மா எண்டுற மாதிரி: " ஓ, அதுவா அந்த முள்ளு. முள்ளு என்னும் போதே புரிந்தது, ஏதோ வில்லங்கம் என்று" என்றான்.

இத்தனிக்கும் பிறகு நான் எழுதத்தான் வேணுமா என்று நினைக்கும் போது யாரவது வந்தது பப்பாவில் ஏத்த முயல நான் முருங்கை மரம் எறிவிடுவேன். ஹிஹி இது அடிக்கடி நடக்குற ஒன்று........

ஆரம்பத்தில் எனக்கு மட்டும் எழுதி மடித்து வைத்தது, ஒரு சில நண்பர்களுக்கு தெரிவு செய்து வாசித்துக் காட்டி, FB இல நோட்டுப் போட்டு, அதில் ஒரு spoof தொடர் ஹிட் ஆகி... கொஞ்சம் கிக்காகி... பலமுறை ப்ளாக் பற்றி யோசிச்சு, நேரம் மறுக்க, வாத்தியார் வெருட்ட.... ஜேகேவின் படலை என்னை புளோக்கு இழுத்து வந்தது. ஆரம்பத்தில் கமெண்டும் லைக்கும் எனக்கு போதை தந்தது, மிக விரைவில் அது சலித்தது, ஏன்? எதற்கு? யாருக்கு? இந்த வாலிபன் வேடம் - ஒரு கனத்த கேள்விக்காட்டுக்குள் தொலைந்து, எனக்கே எனக்கு எழுதுகிறேன் என்று சால்ஜாப்பு சொல்லி, மெதுவாய் விழித்த போது படிப்பில் கொஞ்சம் கவனம் குலைந்தது தெரிந்தது - அப்போ "பயணிகள் கவனிக்கவும்" - பாலகுமாரனின் சின்ராசுவை பார்த்து தெளிந்து கொண்டேன் - உங்களுக்கும் உதவும் என்று நினைக்கிறேன்.
பயணிகள் கவனிக்கவும் சின்ராசு சொன்னது:

"இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் அனுபவம் வேணும் அக்கா. கவிதை, ரசனை, காதல், இலக்கியம் இதெல்லாம் எல்லாருக்கும் வந்துடாது அக்கா. கொஞ்சப் பேருக்குத்தான் வரும். நூத்தில பத்துப்பேர் தான் இதில மாட்டுவான். தொண்ணூறு பேர் செரிதான் போடா எண்டுவானுக. இது வந்தா நல்லாவும் இருக்கும் பாடாய்ப் படுத்தவும் செய்யும்....."            

பாலகுமாரன் உங்கள் கொல்லைப்புறத்தில் வந்ததில்லை என்று தெரிகிறது, எனக்கு அவர் சுஜாத்தாவை விட ஒருபடி மேல். நீங்கள் அதில் உடன்படத் தேவையில்லை, ஆனால் அவரை வாசித்தால் நான் சும்மா என்பதாவு உங்களுக்கு புரியும்.

இதை வாசிப்பவர்கள் யாரவது இந்த பத்து வீதத்தில் இருந்தால் நிச்சயமாய் பாலகுமாரனது இரும்புகுதிரைகள் (இரும்புக்குதிரைகள் அல்ல) வாசிக்கவும்.

8 கருத்துகள்:

Gobi சொன்னது…

மச்சி, நீ வடித்தது ஒரு கவிதை.
அதை நாங்கள் பார்த்த விதம் ஒரு கலவை.
அதனால் வந்ததோ ஒரு புதுமை
மொத்தத்தில் நடந்தது ஒரு ரசனை.

ஜேகே சொன்னது…

நான் "நீங்கள் கிழக்கிந்தியக் கம்பனி என்கிறீர்கள்" என்று சொன்னது கவிதையின் பொருட்குற்றத்தை சுட்டிக்காட்டவே .. மற்றபடி அவன் நினைச்சது புரிந்தது .. விதி மாட்டர் சூப்பர் .. எனக்கு கிளிக் ஆக வில்லை!

உங்கள் சொல்லணா பற்றி கலந்துரையாடியதுக்கு என் நிறுவனம் எனக்கு அரை நாள் சம்பளம் கொடுத்தது. வீடு வந்தும் திருப்பி அதையே எழுதுவதாக இல்லை!!!

////அந்த அறையில் எல்லாப் பொருட்களையும் தின்று நின்றது வெறுமை!////
இப்படியான வரிகள் ரசித்தது உண்மை .. அது எனக்கு ராவணன் படத்து காட்சிகள் போலவே இருந்தது .. காட்சிகளில் கச்சிதம் .. ஸ்க்ரீன் ப்ளே?

//இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் அனுபவம் வேணும் அக்கா. கவிதை, ரசனை, காதல், இலக்கியம் இதெல்லாம் எல்லாருக்கும் வந்துடாது அக்கா. கொஞ்சப் பேருக்குத்தான் வரும். நூத்தில பத்துப்பேர் தான் இதில மாட்டுவான்//

அக்கா யார் என்று தெரியாது .. ஆனா எனக்கு விரும்பாமல் கிடைத்த தகுதி இது என்பதில் அதிக பெருமை இல்லை!! உங்கள் கவிதை கொஞ்சம் மெசின் கோட்ஸ் ஆக இருந்ததால் ட்ரான்ஸ்போர்ட் லேயர் காரனுக்கு புரியவில்லை!!

//பாலகுமாரன் உங்கள் கொல்லைப்புறத்தில் வந்ததில்லை என்று தெரிகிறது,//
அதிகம் வாசித்ததில்லை .. ஆனால் உங்களை போல நண்பர்கள் சொல்லி, அவர் பற்றிய ஓரளவு அறிவு இருக்கிறது .. நீங்கள் சொல்லிய புத்தகம் வாங்க போகிறேன் ..

நான் சொன்ன விஷயம்... I lost my chat logs .. do you have it?...

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சந்தோசம் கோபி நீ கூட நல்லா கவிதை எழுதுறாய். நான் எழுதியது கவிதைதனா என்று ஒரு விவாதம் இன்னும் முற்றுப் பெறவில்லை - எனக்கே டவுட்தான்.

Gobi சொன்னது…

சயிக்கிள் கப்பில நான் எழுதினத ஒரு கவிதை என்று சொல்லி கடாய்ச்சுவிட்டாய் பார்த்தியா. நான் வசனத்தை ஒரு ரைமிங் உடன் சொன்னேன் அவளவுதான்.

எஸ் சக்திவேல் சொன்னது…

எனக்கும் கவிதைக்குக் கருத்துச் சொல்லி வாயெல்லாம் 'பல்லாக' கொஞ்சம் பயம். இருந்தாலும் உங்கள் நிலையறியாது advice மழைபெய்ய முடியாதுள்ளது. என்றாலும் கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவானேன்? (எனது வயதும் 'பழசு' ரேஞ்ச்'இற்குப் போய்க்கொண்டிருக்கிறது).

நானும் ஒருகாலத்தில் துபாயில் (சரியாகச் சொன்னால் ஆஜ்மான் என்று இன்னொரு emirate=state) இல் தனியாகக் கழித்தேன். பொறியியல் படித்துவிட்டு ஒரு technician ஆக வேலை. கடைசியில் செய்தது store இல் கணக்கு எழுதுவது. மிகுந்த மனவுழைவு. டாபா/டோபா, மாட்ரிக்ஸ், triple integration, 3 D vector, MAgnetism அது இது என்று ஆசையாகப் படித்தேன். எப்ப பாவிப்பேன் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில், telephone களை "101, 102. 103 .." என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

பிறகு என்னை மறந்து செஸ் விளையாடத் தொடங்கினேன். kind of addiction. பிறகு கல்யாணம் கட்டி சிங்கப்பூர் வந்து இப்ப சிட்னி. சிங்கபூரில் IT இற்கு மாறினேன். இப்பவும் வேலைத்தல அரசியல் வெறுக்கவைக்குது. ஆனால் தொழில்நுட்பத்தை காதலிக்கப் பழகிக் கொண்டேன். காலை வாரும் மனிதர்களைப் புறக்கணிக்கப் பழகிவிட்டேன்.

சிலருக்குத் 'தண்ணி' மாதிரி எனக்குச் செஸ் உம், நல்ல இசையும். (இத்துடன் என் சிற்றுரையை அல்லது பினாத்தலை) நிறுத்திக் கொள்கின்றேன்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சக்திவேல் எனக்கு எழுத்து உங்களுக்கு சதுரங்கம் மாதிரி. உங்கள் அக்கறை புரியுது நன்றி. நானே அந்த கணத்திலிருந்து (as jk said it was a weak moment) வெளியே வந்துவிட்டேன். அந்தக் கணங்கள் தவிர்க்க முடியாதவை வளர வளர இன்னும் வரும் - கடக்க பழக வேணும். மற்றபடி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

ஜேகே
//உங்கள் சொல்லணா பற்றி கலந்துரையாடியதுக்கு என் நிறுவனம் எனக்கு அரை நாள் சம்பளம் கொடுத்தது.// அடடா அப்ப நாங்க இன்னும் கொஞ்சம் கதச்சிருந்திருக்கலாம் முழுச் சம்பளம் தந்திருப்பானுக.

அக்கா 'பயணிகள் கவனிக்கவும்' கதையில் ஒரு பாத்திரம், சின்ராசு எனும் பாத்திரம் அந்தப் பாத்திரம் பார்த்து பேசியது = நான் பகிர்ந்தது.

//அது எனக்கு ராவணன் படத்து காட்சிகள் போலவே இருந்தது .. காட்சிகளில் கச்சிதம் .. ஸ்க்ரீன் ப்ளே?// நல்ல உவமானம், எனக்கு அதில் ஒரு முரண்பாடு இருக்கு - ஸ்க்ரீன் ப்ளே: கட்டாயமா என்ன - கவிதை என்றால் என்ன என்ற கேள்வியில் போய் நிற்கும் அந்த சர்ச்சை: ஏற்கனவே கோபி இந்தக் கேள்வி கேட்டு நான் அதுக்கு பதில் தெரியும் ஆனால் சொல்லமுடியாது என்று நழுவி(?) இருக்குறேன்.

ஜேகே சொன்னது…

//ஸ்க்ரீன் ப்ளே: கட்டாயமா என்ன//
மணிரத்தினம் பதிலும் இதுவோ?

கருத்துரையிடுக