வெள்ளி, மார்ச் 16, 2012

காதலிக்க நேரமில்லை.

காதலிக்க நேரமில்லை.
                                          காதல் கூர்ப்படைதல்....   


கடைசியாக 
காதலிக்கலாம் என்று 
தீர்மானித்தேன் !


அதற்காக
இவ்வளவுநாளும் காதல் வேண்டம் என்று 
தவம் கொண்டிருக்கவில்லை.


இனி காதலை தேடி அலைந்தாவது 
கைப்பற்ற தீர்மானித்தேன்.


இனி கரட்டை சாப்பிட்ட பின்னர்தான் 
இந்த கழுதை நகர்வது என்று தீர்மானித்தது.


காலத்திற்கு காலம் 
சந்தைகளை மாற்றினார்கள்:
OL - AL - campus என்று...
தூரம் கூடிக்கொண்டே போனது;
வலிவும் கூடவே ஓடும் வலியும்.
கரட்டும் மாறியது,
அதன் சுவை என்றும் ஒரே மாதிரித்தான் அறிமுகப் படுத்தப்படும்.
வடிவம் மாறினாலும் வடிவு மாறவில்லை.


இது ஒரு அருமையான கார்டூன்,
புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள்
இனி காதலிக்கலாம் என்று 
தீர்மானித்தேன் !


தரம் பத்து: கல்யாணி...
நிறைந்து மலர்ந்து நிற்கும் 
நித்தியகல்யாணி செடி - அவள்;

கல்யாணி.
நிறைந்து மலர்ந்து நிற்கும் 
நித்தியகல்யாணி செடி - அவள் 
ஒரு முறை சிரித்த போது,
இனி தான் மலர்வதில்லை என்று
சத்தியம் செய்தது.


கொஞ்சம் அழகு
கொஞ்சம் அறிவு
கொஞ்சம் பண்பு
கொஞ்சம் பணிவு

கொஞ்சும் அழகு
கொஞ்சும் அறிவு
கொஞ்சும் பண்பு
கொஞ்சும் பணிவு


கல்யாணி: "உன் பெயரே கவிதை" என்ற கவிதைக்கு பொருளடக்கம்.
விசாரித்ததில் இப்போ அவள் இங்கிலாந்தில் இல்லறத்து அடக்கம்.
O/L இல் அவளை காதலித்த ராஜராஜன் 
A/L லிலேயே காணாது போனான்.
வேறு விபரம் தெரியவில்லை.


தரம் பன்னிரண்டு:
முதன் முதலில் அவளைப் பார்த்த போது 
எனக்கு அவளைப் பிடித்திருந்தது.
கதுப்புகள் கணை மூட்டின,
வயிற்றுக்குள் ஒரு ஆட்டுக்கல் உருள 
இதயம் இரத்தத்திற்கு பதிலாய் தேன் பாச்சியது.


அவளை எனக்கும் பிடித்திருந்தது.
அவளை எனக்கும் பிடித்திருந்தது என்பது 
என் 'நான்' க்கு பிடிக்கவில்லை.
அது அவளுக்கு பிடித்திருந்தது, 
அனால் அதத்தான் பிடிக்காதது போல் பண்ணினாள்.
அவளுக்கும் 'நான்' பிடித்திருந்தது.
(குசி படத்தின் ஈகோ பிடித்த கழுதை நினைவுக்கு வருதா? என்ன இல்லையா :( )


ஒரு பாடசாலைப் போட்டிக்கு வந்திருந்தாள்.
ஒரே போட்டியில் இருவரும்.
அவளுக்கு இரண்டாம் இடம்.
எனக்கு ஆறுதல்ப் பரிசுமில்லை,
ஆறுதல்ப் படுத்துவாரும் இல்லை.
ஆறவுமில்லை.


அரங்கேறிய வேறொரு நாள்,
அறுவை நிகழ்வில்,
அவள் - நான்;
அவள் சிவந்து போனாள்.
நான் வழமை போல 
அதை கண்டுகொள்ளாது என் அருவைகளோடு,
விவாதிகளுக்கான சாபம் என்று நினைக்குறேன்.
கொஞ்சம் அதிகமோ என்று இன்று குறை பட்டுக்கொண்டாலும்,
அன்று அது ஆசுவாசப்படுத்தியது.
கூட்டம் விசிலடித்தது.
அரசால் களும் புரசால் களும் ஆரம்பித்தன;
அதற்குப்பின்,
அடிக்கடி பேசிக்கொண்டோம்,
அடிக்கடி முரண் பட்டோம்.
முரண்பாடுகள் இருவரையும் 
அருகருகே 
மிக அருகருகே 
கொணர்ந்து மோத விட்டது.
மேலும் நெருங்கினோம்,
மேலும் முரண் பட்டோம்.
எனக்கும் அவளைப்போல் 
அவளோடு முரண்படுபவர்களோடும், அவளோடும் - முரண் படுவது பிடித்திருந்தது.
நாங்கள் நட்புடன் என்றோம்,
ஊர் பின்னாலே பேசியது,
நண்பர்கள் முன்னாலே சிரித்தார்கள்.


ஒரு சில மாத உறவை A/L paper class தின்று போனது.
Applied maths உம் inorganic chemistry உம் 
அவள் மறந்தே போனாள்.


A/L முடிந்த பிறகு நண்பர்கள் சொன்னார்கள்,
எனக்கு ஆறுதல் பரிசுகூட கிடைக்காத போட்டியில்,
முதல் பரிசு பெற்ற நண்பன், 
என்னோடு சேர்ந்து அவளோடு முரண் பட்ட நண்பன்,
paper class காலங்களில் அவ(ளை)லை ஞாபகம் வைத்திருந்திருக்கிறான்.


நேற்று அந்த நண்பன் தனது நாலாவது காதலியை, அல்லது நண்பியை அல்லது GFஐ அறிமுகப்படுத்தினான்.
அவளைப்பற்றி அவனிடம் கேக்க எனக்கு தயக்கம்,
அவன் எந்த வித்தியாசமும் இன்றி புதியவளின் கரம் கோர்த்து நின்றான்.

பூமி தொடர்ந்தும் சுற்றிக்கொண்டு இருந்தது.

எழுதியது: செப்டெம்பர் 2005 


பாரதியின் சுயசரிதை: பிள்ளைக் காதல்.
அன்ன பொழுதில் உற்ற கனவினை
அந்தமிழ் சொல்லில் எவ்வண்ணம் சொல்லுகேன் ?
சொன்ன தீய கனவு அங்கு துயிலிடை தோய்ந்ததன்று - நனவிடை தோய்ந்ததால்;
மென் நடை கனியின் சொற் கருவிழி, மீனி எங்கும் நறு மலர் வீசிய கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றினைக் கண்டு காதல் வெறியில் கலந்தனன்.

10 கருத்துகள்:

எஸ் சக்திவேல் சொன்னது…

>வயிற்றுக்குள் ஒரு ஆட்டுக்கல் உருள
இது புதுமையாகவும் நன்றாகவும் உள்ளது.

>கொஞ்சம் அழகு
கொஞ்சம் அறிவு
கொஞ்சம் பண்பு
கொஞ்சம் பணிவு


எனக்கு
கொஞ்சம் அழகு
நிறைய அறிவு
நிறைய பண்பு
நிறைய பணிவு

பேராசை?


>நாங்கள் நட்புடன் என்றோம்,
ஊர் பின்னாலே பேசியது,
நண்பர்கள் முன்னாலே சிரித்தார்கள்

இந்த இடத்தில் நீங்கள் ஊரை முட்டாளாடிக்கிக்கிறீர்களா அல்லது இல்லையா என்பது ஒரு சிறு குழப்பம்.

>ஒரு சில மாத உறவை A/L paper class தின்று போனது.
Applied maths உம் inorganic chemistry உம்
அவள் மறந்தே போனாள்

அதுதான் ஒரு நல்ல மாணவனிற்கு அழகு !!

இந்தத் தூய நட்பைப்பற்றி மெலிதாக அங்கதத்துடன் நானும் ஒரு சிறு கிறுக்கல் கிறுக்கினேன். தனிமடலில் போடுகிறேன்.

ஜேகே சொன்னது…

//paper class காலங்களில் அவலை ஞாபகம் வைத்திருந்திருக்கிறான்.//

வழமையான் Spelling mistake என்று நினைத்தேன்!! ஆனால் அடுத்த வரி
//நேற்று அந்த நண்பன் தனது நாலாவது காதலியை, அல்லது நண்பியை அல்லது GFஐ அறிமுகப்படுத்தினான்.//

எனக்கும் புரியும்படியான கவிதை
அதில் கவிதையும் கூட
எழுதிய உங்களுக்கும்
எழுதவைத்த உங்களின்
எழுதாத கவிதைக்கும் நன்றி!
கேட்கும்போது மறக்காமல்
மூத்த பையனின் பெயரை கேளுங்கள்!
சாரி
ஏறு வரிசையா? இறங்கு வரிசையா?
கடைசி பையன் பெயரை கேளுங்கள்!

சிலவேளைகளில் நீங்கள் தெரியாமல் விடும் எழுத்து பிழைகளை கூட மண்டை காய்ந்து யோசிக்கவேண்டி இருக்கிறது.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சந்தோசம் சக்தி,

சக்தி எழுதிய வந்தியத்தேவனின் காதல் தோல்வி அல்லது சோழர் காலத் தூய நட்பு இங்கே, http://www.ssakthivel.com/2011/07/blog-post.html

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சந்தோசம் ஜேகே, உங்களுக்கு புரியும்படி என்னால் அவ்வப்போ எழுத முடிவது சந்தோசம்.

அது எழுத்துப்பிழைதான், நீங்கள்தான் தீவிரமா யோசிப்போர் சங்க தலைவரா ? என்ற கவிதைகளையும் இவளோ தீவிரமா நீங்கள் ஆராயுறது, காமடி எண்டுறதா இல்லை ரசனை எண்டுறதா இல்லை அன்பு எண்டுறதா.

கடைசி பையன் பேரா - அட கர்த்தாவே.

ஜேகே சொன்னது…

//paper class காலங்களில் அவளை ஞாபகம் வைத்திருந்திருக்கிறான்.//

"அவலை" போய் "அவளை" ஆக்கியதால் கவிதை கொஞ்சம் அபலை ஆகிவிட்டது தலைவரே .. மாற்றாமல் அப்படியே விட்டிருக்கலாம்! நல்ல கவிதை எல்லாம் தெரியாமல் தான் வரும் .. காதல் போல!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நீங்கள், விடமாட்டியலே, நீங்கள் இந்த தொப்பிக்குள் இருந்து முயல் எடுக்குறது விட மாட்டியளா,
ஏற்கனவே சட்டிக்குள் - சட்டைக்குள் நினைவிருக்கா.

செரி உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம், இரண்டும்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

விரிவா பின்னூட்டிய இருவருக்கும் மீண்டும் நன்றிகள்.

இலங்கைத்தமிழன் சொன்னது…

தயவு செய்து இந்த facebook page இல் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சனல் 4 வீடியோவுக்கு எதிராக சிங்கள இனவாதிகளால் இது செய்யப்படுகிறது
http://www.facebook.com/Channel4.Fake.Video
எவ்வளவு முடியுமோ comment பண்ணுங்கள்
fake account விரும்பத்தக்கது

பெயரில்லா சொன்னது…

ellaam waste maamoooiiiii

ஏ.எ.வாலிபன் சொன்னது…

அட ஒரு புனை பெயராவது வைச்சிருக்கலாம் மாப்ளை, எல்லாமே மாயை எண்டு சொல்லுறீன்களா, அட பெரிய்ய்ய்ய்ய தத்துவம் மாப்ளை.

கருத்துரையிடுக