புதன், மார்ச் 21, 2012

கண் சிமிட்டும் விண்மீன்கள்


தீவிரமாக நடந்து கொண்டிருக்கும்
எல்லாப் பஞ்சாயத்தின் பின்னணியிலும்
ஒரு காதல் ஜோடியாவது
மௌன பாஷையில் பேசிக்கொண்டிருக்கும்.


வால் முளைத்த வெள்ளியின் பாச்சலைப் பற்றி
அலட்டாமல், வாலுள்ள குரங்குகள்
நாவல் பழங்களை தேடிக்கொண்டு;
கீழே ஒரு வாலில்லா ஜீவன்
குருவியின் வாயில் தனக்கான பழங்களை தேடிக் கொண்டு.

விளம்பர பதாதைகளில்
அழகு நங்கையர் எல்லாம்
என்னை காதல் (?) பார்வை பார்க்கிறார்கள்
அவ்வளவு அழகாவா இருக்குறேன் நான் ?

6 கருத்துகள்:

எஸ் சக்திவேல் சொன்னது…

>ஒரு காதல் ஜோடியாவது
மௌன பாஷையில் பேசிக்கொண்டிருக்கும்.

ஐயையோ இப்படிப் போட்டுடைத்தால் என்ன செய்வது? அவர்கள் அங்கு போவதே அவன்/அவள் வரலாம் என்பதற்காகவல்லவா? பின்னே பஞ்சாயத்துப் பார்க்கவா?

பெயரில்லா சொன்னது…

ஏதென்ஸ் தோட்டத்து ரோஜா ச்சே ராஜா ச்சே காவலாளி..
என்னமோ எல்லாம் தப்பு தப்பா tongue slip ஆகுது இன்னைக்கு!!

எஸ் சக்திவேல் சொன்னது…

அடியேன் கவிதை Department இல் வீக். மொக்கை கொமென்ட் எனில் மன்னிக்கவும்.

ஜேகே சொன்னது…

கருமம் பிடிச்ச எண்ட கண்ணுக்கு இதில அரசியல் தெரியுது தலை! .. இது அரசியல் கவிதையா?

(வேணாம் ஜேகே, உனக்கு கவுஜ எல்லாம் விளங்காது .. பேசாம போய் வேலைய பாரு)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

அட ஊருக்கே தெரியுமே சக்தி அண்ணை, எல்லாருக்கும் தெரியும் கவை இல்லை.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

மறுபடியுமா, அட ஆண்டவா.....
இது கவிதை, இதில அரசியலும் பண்ணலாம்....

கருத்துரையிடுக