ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

தனியே எமக்கோர் குணமுண்டு....

முகவுரை


காட்டிடை கற்பகதரு.....

அது 1992, ஜூன் அல்லது ஜூலை என்று நினைகிறேன்.... பம்பலப்பிட்டி பிளட் பஸ் தரிப்பை ஆதிசேசன் படம் விரித்தது போல் நிழல் போர்த்து காத்து நிற்கும் மரங்களை வெப்பக் காற்று உலுக்கி எடுத்துக்கொண்டு இருந்தது. என்னத்தைப்பற்றி காற்று மரங்களிடம் விசாரித்து இருக்கும்.... சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கோரத்தையா, இல்லை சற்று நேரத்தில் கதிரேசன் மண்டபத்தில் நிகழ இருக்கும் பிரமிப்பையா....

பம்பலப்பிட்டி பிளட்ஸ் பஸ் தரிப்பிடம்
கோவிலுக்கு கூட இவ்வளவு கூடியதில்லையே, கடைசியா ஆடிவேலுக்குதான் இதனை வேலைப் பளு இருந்தது, அப்படி ஒரு பள்ளிகூட விழாவிற்கு எதற்கு இதனை 'தலை'கள். அந்த சிங்களப் போலீஸ்காரருக்கு அயர்ச்சியும் அதிசயிப்பும் சேர்ந்து அதிர்ச்சி கூட. ஆண்கள் பாடசாலை எண்டுதானே சொன்னார்கள் எதற்கு இத்தனை பெண்கள். half saree அணிந்த வளையல் கரங்கள் அலைமோதியது அவருக்கு அதிர்ச்சியே. போலிஸ் பயிற்சியில் விடியக்காலையே எழுந்து வெறு வயிற்றோடு மைதானத்தில் சுமார் ஐந்தாறு சுற்றுகளை அரை மணி நேரத்துக்குள் ஓடத் தெரிந்த, விறைப்போடு சலூட் அடிக்க தெரிந்த, கள்ளனை கண்களால் அளவெடுக்க தெரிந்த அந்த நடுத்தர வயது போலீசுக்கு இந்த வளையல் கரங்கள் யாராக இருக்கும் எதுக்கு அலை மோதுகிறார்கள் எண்டு கண்டுபிடிக்க தெரியவில்லை.

அன்று சபையில் ஒரு அற்புதம் நிகழ்த்த இருக்கும் இளஞ்ஞனின் காதலிகளும் காதலிகள் ஆகப்போகிறவர்களுமே ஒரு கூட்டம் இருக்குமே. மற்றவர்களையும் சேர்த்தால். காக்கிக்கு இது புரிய வாய்ப்பில்லை.


மாலைக் கடைக்காரர்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது, குறிப்பாய் மல்லிகை சரம். மொட்டு மாலை விலை அதிகம் ஆனாலும் கிராக்கி இருந்தது. விரைவில் மல்லிகை விற்றுத் தீர்ந்ததால் மற்றைய பூச்சரங்களை வகை வகையாய் கோர்த்து வைத்தார்கள். கனகாம்பரம் கையிருப்பில் இல்லை, ஆனால் பலர் குறிப்பாக நடுத்தர வயதுப் பெண்கள் அதை இருக்கா இருக்கா எண்டு ஆவலோடு கேட்டு ஏமாந்து போனார்கள்.

பூக்கடைக் காரர்களுக்கு மட்டுமல்ல அந்த பலசரக்கு கடையிலும் நல்ல கூட்டம், பாக்கட்டில் வரும் தீன்பண்டங்கள், பிஸ்கட்கள், டொபிகள், மென்பானங்கள், கண்டோஸ் மற்றும் பெப்பர்-மின்ட்கள் விரைந்து விற்பனை ஆனது. பெரிய அளவில் இலாபம் தராத பண்டங்களே ஆயினும் நிறைந்து விற்றதில் முதலாளி மகிழ்வாயிருந்தார். ஆனாலும் கடைப் பையன்களிடம் கண்டிப்பாயே இருந்தார்.

வழக்கத்துக்கு மாறாய் நிறைந்த கூட்டம் தங்களுக்கு பலனளிக்காததில் பிச்சைக்காரர்கள் கூட்டம் நிறைய ஏமாற்றம் கொண்டது. கோவில் திருவிழாக் கூட்டம் அல்லது சமய விழாக் கூட்டம் என்றால் தங்களை வலுவாகக் கவனிக்கும். இந்தியாவிலிருந்து யாரும் பிரபலங்கள் வந்திருந்தால் தான் இப்படிக் கூட்டம் அலை மோதும் ஆனாக் கவனியாது. இது புதுசு, உள்ளூர் விழாதான் ஆனா இவ்ளவு ஆர்ப்பாட்டம். போன கிழமை கூட ஒரு உள்ளூர் பிரபலம் - டிவி எல்லாம் தெரிந்த முகம் ஒரு விழா நடத்த்தினாரே, ஆனா கூட்டம் இல்லையே. குறிப்பா இளைஞ்ஞர் கூட்டம் இந்த இடத்திற்கு புதுசு. கோவிலும், சினிமா இல்லாத பண்பாட்டு விழாக்களும் இளசுகளை அவளவாய் ஈர்த்ததில்லை.

வித்தக விநாயகர்
ஏன் இவ்வளவு கூட்டம்? ஒருவேளை இந்தக் கல்லூரியின் அமைப்பு:- நீலம், சிவப்பு, பச்சை எண்டு வகை வகையான டை அணிந்த பெண்கள் பாடசாலைகள் சுற்றி இருக்க என்பதாலோ.... ஒருவேளை அதைத் தான் தலைநகரின் மையப்பகுதியில் இருக்கும் தன்னிகரில்லாப் பாடசாலை எண்டு சொல்லுரானுகளோ?.... யாருக்கு தெரியும்வித்தக-விநாயகருக்கேவெளிச்சம்.

வாசலில் இருந்த பரபரப்பு உள்ளே பாதையில் தெரியவில்லை. அகன்றிருந்த பாதையும், அங்கால் பக்கம் இருந்த மண்டப வாசலும் உள்ளே நடக்கிற பரபரப்பை பெரிதுபடுத்தியது - ஒரு திரில் அனுபவமாய் - suspense effect இல்.

திறந்து விட்டிருந்த கிறில் கேட்டுக்கு இடையில் ஒரு மேசை, இரண்டு குத்து விளக்கு, நடுவே ஒரு கும்பம், சில வேட்டி கட்டின தலைகள் தெரிந்தன. ஒருவன் குத்து விளக்கை காற்றிடம் இருந்து காப்பற்ற கங்கணம் கட்டிக் கொண்டு போராடிக் கொண்டிருந்தான்.

இந்த ஆர்ப்பாட்டங்ககளுக்கு மத்தியில், அதை கண்டு கொள்ளாதவர் போல் எங்கட கதையின் நாயகன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தார். பள்ளி உடுப்புத்தான், நல்லா கஞ்சி போட்டு தோச்சு அயன் பண்ணின மிடுக்கான சட்டை; கையில் ஒரு பையில் வேட்டி குருத்தா எண்டு நினைக்குறேன். பாடலில் லயித்திருந்தவர் நேற்று பயிற்சியில் சொன்ன மாதிரி ஒரு குறித்த வரியைப் பாட முயன்று கொண்டிருந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக பயின்ற சிறுவர்களும், பயிற்றுவித்த ஆசிரியர்களும், கூட்டி வந்த பெற்றாருமாய், எல்லோருமே வறுத்தெடுக்கப் பட்டார்கள். தொடர்ச்சியான கடும் பயிற்சி + ஒத்திகை. ஆனா இந்த நாடக் காரங்கள் பயிலும் போது தங்களை மாதிரி நண்டு சிண்டுகளை துரத்தி விட்டுடுவானுகள் என்பதுதான் அவனின் ஒரே வருத்தம். அதிலும் தமிழழகன் உருவமும் குரலும் அவர் பேசமுதலே பயம் பற்றிக் கொள்ளும். தெறித்து ஓடிவிடுவானுகள். சுபாஸ் பற்றி கண்டதை விட கதைகள் அதிகம் என்பதால் ஒரு முடிவற்ற குழப்பம் அவர் பற்றிய அபிப்பிராயத்தில் இருந்தது. எது எப்படியோ இண்டைக்கு அந்த நாடகத்தை பார்த்து விடலாம். எதோ ஒரு அரச நாடகம் என்பதை தாண்டி வேறேதும் தெரியாது, ஆர்வம் மனதை அரிக்கத் தொடங்கியது....

இவன் சுதர்சனை இன்னும் காணவில்லையே, எங்கயாவது மூலைக்க நிண்டு சுரம் பாடிப் பார்கிறானா - பாவி என்ன குரல் அவனுக்கு. உள்ளுக்குள் இருந்து ஒரு வெள்ளை நிற வான் வேகமாக கடந்து போனதில் சிந்தனை வேறு தளத்திற்கு தாவியது. அண்டைக்கு அப்படித்தான் ஒரு லே-லான்ட் பஸ் பிடிச்சு தமிழ்தினப் போட்டி போனது நினைவு வந்தது - கூடவே பூரிப்பும் பெருமையும்.

ஏறு போல் நடை

சுபாஷ் அண்ணா:
உதவி சிரேஷ்டமாணவ தலைவர் 93-94
தமிழ் அண்ணா:
சிரேஷ்டமாணவ தலைவர் 92-93
தமிழ்த் தினப்போட்டியில் மாவட்ட, மாகாண ஏன் அகில இலங்கையளவில் எங்களுக்கு எத்தனை பொற் பதக்கங்கள். மாவட்ட மட்டப் போட்டிக்கு போன போதுதான் பஸ் பிடிச்சு போனது. வழமையாக கடுமையாக இருக்கும் தமிழ் மற்றும் சுபாஸ் அண்ணாமார் சிரிச்சுக் கும்மாளம் அடிச்சுக் கொண்டு கூட்டிக்கொண்டு போனது ஒரு இன்ப அதிர்ச்சி. சிரேஷ்ட மற்றும் பிரபல்யமான (அடுத்த வருடம் உதவி சிரேஷ்ட மாணவதலைவர் ஆகப் போகிற) மாணவ தலைவர் என்பதாலேயே அவர்கள் மீது ஒரு பயம் கலந்த மரியாதை. முகுந்தன், லோசன் எண்டு ரெண்டு அண்ணாமார் - அவர்களிலும் சின்ன அனால் இவனிலும் பெரிய பெடியனுகள் தமிழோடும் சுபாஸோடும் நல்ல ஓட்டப் பேசிப் பழகினானுகள். விவாத அணிக்காரனுகள். சுபாசண்ணாவின் ஒரு காதல் கவிதையை லோசனும்முகுந்தனும் - தமிழுக்குகிண்டலும் கேலியுமாய் சொல்லிக்கொண்டு வந்தது ஆச்சரியமாயும் உற்சாகமாயும் இருந்தது. வயது வேறுபாடின்றி அவனுகள் சிரேஷ்டமாணவதலைவர்களையே கிண்டலடிப்பது இந்த ஆறாம் வகுப்பு சிறுவனுக்கு புதிதே. அவனுகள் எல்லாம் எதோ ஒரு பெருமையும் தினவையும் அந்த சிறுவனுக்குள் அவனுக்கு அறியாமலேயே ஊடிக்கொண்டிருந்தானுகள். (இவர்களைப்பற்றி இன்னும் விவரமாய் வருகிற தொடர்களில் பதிய இருப்பதால் இப்போ தவிர்த்து விடுகிறேன்)

பஸ் பிடிச்சுப் போனவனுகள் வரேக்க ஒரு ஒட்டோவும் பிடிக்க வேண்டி இருந்தது - பெற்ற பரிசுகளை பாராட்டுகளை அள்ளி வர. தமிழ்அழகனின் நாடகம் முதற் பரிசு பெற்றதோடு, பின்னர் மாகாண மற்றும் அகில இலங்கை மட்டம் வரை சென்று வெற்றி பெற்றது. மேலும் நடுவர்களின் பரிந்துரையின் பேரில் தமிழ் தின பரிசளிப்பு விழாவில் அரங்கும் ஏறியது. நாடகம் மட்டுமல்ல. கீழ் பிரிவு மேல் பிரிவு குழு தனிப் பாடல்கள் பேச்சு கவிதை கட்டுரை இன்னும் இன்னாவோ எல்லாம் - முதல் பரிசு புதல பரிசு முதல் பரிசு....

பரிசுகளை அறிவிப்பவர் முதலே எல்லா முதல் பரிசும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கே எண்டு சொல்லிருக்கலாம் போல.... அப்படி தொடர்ச்சியாக இந்துக்கலூரி முதலிடம் , இந்துக்கலூரியை சேர்ந்த இவர் முதலிடம் ...சொல்ல அவருக்கு அலுத்ததோ இல்லையோ கேட்ட எங்களுக்கு தித்திப்பு... மற்றவர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, அதிலும் சில பொறாமைக்காரர்கள் முகத்தில் ஒரு கலியாணத்திற்கு தாளிக்குமளவுக்கு கடுகு வெடித்தது எண்டால் பாருங்களேன். யார் கண்ணுக்கும் படாமல் சில காதல்களும் வெடித்தது.

"ஊ..." என்ற கத்தல்களும், சீண்டலும், குறிப்பாய் பெண்கள் கல்லூரிகளைப் பார்த்து கலர்ஸ் காட்டுறதும், அலம்பல், சிலம்பல், ஆர்ப்பாட்டம், பெருமை, வீறு, ஆனந்தம் எல்லாம். தரையில் கால்கள் நிற்கவில்லை. தங்கள் குழுவிற்கு பரிசு கிடைத்தது எண்டு தெரிந்ததும் கைதட்டி ஆரவாரப் படுத்தி கை குலுக்கி - சந்தோசம் + வெக்கம். நாம ஹீரோ நிஜமாயே ஹீரோவாய் உணர்ந்தார் - ஒருமுறை கொலரை செரிப்படுத்திக் கொண்டார் சுற்றும் முற்றும் பார்த்து விட்டும் மீண்டும் அமர்ந்தார். இப்போ மாணவதலைவர்கள் மீது வாஞ்சை வந்தது, அவனுகள் விவாதம், நாடகத்தில் காட்டிய ஆளுமை கருவத்தையும் சந்தோசத்தையும் தந்தது - இனிமேல் இவுனகள் என்ன சொன்னாலும் கேக்கலாம் எண்டு தோன்றிற்று.

இது தான் அரும்புகிற மீசை முறுகுகிற தருணம், மார் புடைத்து தோள் விடைத்து சிங்கங்கள் மாதிரி..... ஜிவ் எண்டு மண்டைக்குள் ஏறுகிற போதை சொல்லால் வடிக்கவொணா உணர்வு - ரதியும் மன்மதனும் நிறைய அம்புகளோடு களம் காணுகிற கணம். அவசரத்தில் ஒழுங்கில்லாமல் நடக்கிற போட்டிகளுக்காய் departmet காரர்களோடு ஆசிரியர்கள் சண்டை பிடிக்கிற தருணம். எனக்காக என் கல்லூரி, ஆசிரியர்கள் மாணவ தலைவர்கள் அண்ணாமார் பின்னே நிற்பார்கள் என்பது புரிகிற பொழுது.

இது என் கல்லூரி எண்டு உணர்வு மேலோங்குகிற தருணம், மண்டை கனக்கும், கைகள் பையில் தைக்கப்பட்ட சின்னத்தை முத்தமிடும், தலை கால் புரியாத வெறி அது - வேண்டியதே. இவன் என் கல்லூரியின் மாணவதலைவன் - இத்தனை பேரை கட்டி-மேய்த்து, சொல்லிக்கொடுத்து, பயிற்றுவித்து, உற்சாகப் படுத்தி, தட்டிக் கொடுத்து, தட்டிக் கேட்டு, இடையில் கன்டீனுக்கு கூட்டிப் போய், காசு கொண்டர மறந்தவனுகளுக்கும் சேர்த்து வாங்கி பகிர்ந்து உண்டு, பகிர பங்கு பெற சொல்லிக் கொடுத்து, வெற்றி வாங்கி, அதை கொண்டாட சொல்லிக் கொடுத்து, கொண்டாடி மகிழ்ந்து - இவன் அண்ணா - என்னை அடித்தாலும் மிரட்டினாலும் நான் பணிய வேண்டிய; பணிய விரும்புகிற அண்ணா எண்டு தோன்றுகிற தருணம். அவன் அடையாளப் படுத்திக் கொடுத்த மேடையில்த் தான் நான் ஏறி முழங்குகிறேன், அக்காமாரும் நடுவர்மாரும் எல்லாரும் அவன் வெற்றியையும் பெருமையும் ஏலவே எங்களுக்கு ஏற்றித்தான் பார்க்கிறார்கள்; கூடவே எதிர்பார்ப்பும். இந்த அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் தந்தவனுக்கு நான் பணிவது என் கடமை - எங்கள் எல்லார் வெற்றியையும் தட்டி குடுத்து பாராட்டிய அவன் வெற்றியை எப்படிக் கொண்டாடுவது - அவர்கள் பெயர்களை உரக்க கத்தினோம் -ஒரு லயத்தோடு
தமிழ் அண்ணா! தமிழ் அண்ணா! தமிழ் அண்ணா!
அறிவிப்பாளரோடு சேர்ந்து நாங்களும் உச்சரித்தோம் - சுபாஸ் அண்ணா- சுருதி சேர்த்தோம்- ஒரு புன்னகையோடு அதற்க்கு வழி விட்டார் அறிவிப்பவர். தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு தமிழ் தினப் போட்டிகளில் வகைப்பட்ட எல்லாப் பிரிவுகளிலும் விவாதம், இசை, நாடகம் எண்டு முத்தமிழிலும் ஈடு இணையற்ற வெற்றிகளைக் குவித்து விட்டுத்தான் இந்த விழாவிற்கு வருகிறது கல்லூரி. ஆனால் கண் பட்ட மாதிரி எங்கள் குழுப் பாடல் வகையில் அகில இலங்கை மட்டப் போட்டியில் ஒரு சின்ன சிக்கல் ஆகிவிட்டது.


கடவுளும் ஆற்றாப் பரணி

ஒரு படை அணியாய் திரண்டு எட்டுத் திக்கும் எட்டாத் தேசங்களும் என்பது போல - நாலு பிரிவும் மூண்டு தமிழும் வென்று வந்தது எங்கள் கல்லூரி. குறிப்பாய் சுபாஷின் கவிதைகளும் தமிழின் பேச்சும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. இன்று நினைத்தாலும் புல்லரிக்கிற சொக்கிப் போகிற ஒரு இமாலய வெற்றி அது.

துரதிஷ்ட வசமாக கஞ்சிரா பாவித்ததால் போட்டியில் இருந்து விலக்கப்பட்டது எங்கள் கல்லூரி - குழுப்பாடல்: அகில இலங்கை மட்டம். கிருபானந்தமூர்த்தி டீச்சர் அன்று முழுவதும் அழுதா, இன்னொரு வாய்ப்புக்காய் கெஞ்சினா - பிச்சை கேட்கிற மாதிரி- "சின்னப் பெடியள் உடஞ்சுடுவானுகள்" -அனால் சட்டம் இரக்கமற்றது. வேறு வழியில்லை - எத்தனை நாள் பயிற்சி, எத்தனை நாள் கனவு. ஒரு ஆறாம் வகுப்பு சிறுவன் மனமுடைந்திருக்க வேண்டும். ஆனா நம்ம ஹீரோ இந்தக் கவலையை சுமார் பன்னிரண்டு தங்கப்பதக்கங்கள் வென்ற மகிழ்ச்சியில் கரைத்துக் கொண்டார்.
எல்லாரும் தங்கள் பதக்கங்களை அணிந்து கொண்டு நிற்கிற புகைப்படம் இனனும் பள்ளியில் இருக்க வேண்டும்... இல்லாவிட்டால் இந்த கதை மாந்தர்களது வீட்டுப் பரணில் ஒரு பழைய ஆல்பத்தில் உறங்கிக்கொண்டிருக்கலாம்.

எல்லா சந்தோசங்களுக்குள்ளும் டீச்சரின் அழுகை கேட்டுக்கொண்டே இருந்தது. அனால் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டது இந்த சிறுவர் காலாட்படை. குறிப்பாய் தயாபரனும் , சுதர்சனும். படிப்பில் சுட்டியான இருவரும் இசையிலும் கெட்டியே. தொடர்ந்து கல்லூரிக்கு ஒரு இசைப்பாரம்பரியம் ஏற்படக் காரணமாய் இருந்தவர்கள்.


இந்துவின் முத்தமிழ் விழா 1992 அடுத்த பாகத்தில், உங்களிடம் இது தொடர்பை மேலதிக குறிப்புகள், தகவல்கள், கிசுசிசுக்கள், புகைப்படங்கள் இருந்தால் பகிருங்கள்....
இந்தத் தொடருக்கு உதவியாய் இருக்கும்.

நன்றி தயாபரன் அண்ணா: கருத்தாக்கத்திற்கும் தகவலுக்கும்.


இந்துக் கல்லூரி தொடர்புடைய என்னுடைய மற்றைய ஆக்கங்கள்:

தொடர்புடை ஏனைய பதிவுகள்
வகை: கல்லூரி நாட்கள்

25 கருத்துகள்:

ARV Loshan சொன்னது…

அழகான மனப் பகிர்வு :)
அந்தக் காலம் ஒரு பொற்காலம் சகோதரா :)
பெருமையான நாட்களில் என் பெயரும் இணைந்திருப்பது பெருமை :)
நன்றி உதயா மீண்டும் இந்துக்கல்லூரியின் நினைவுகளை மீட்டியமைக்கு

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சந்தோசம் அண்ணா, இவ்வளவு தூரம் வந்ததோடு அல்லாமல் உங்கள் அன்பைப் பகிர்ந்ததுக்கும். நிச்சயமாய் கல்லூரியின் பெருமைகளில் உங்கள் பங்கும் உண்டு அண்ணா - குறிப்பாய் 95 களில் - நீங்கள் ஆண்ட காலங்கள் அவை.

இந்துக் கல்லூரி வானலைகளில் ஆதிக்கம் செலுத்த கதவுகளை திறந்து விட்டவர் நீங்கள், இன்றைக்கும் MASS உம் CLASS உம் சேர்ந்து தருகிற வித்தையில் உங்களுக்கு போட்டியே இல்லையே - உங்களுக்கு அலுக்காதா ?

தவிரவும் நாங்கள் வாதிட்ட காலங்களில் நடுவராக வந்தாலும் gap இல் வந்து தட்டிக் குடுத்தது எங்களுக்கு தந்தது நிறைய அண்ணா.

Rajeshbabu Kanth சொன்னது…

How can I forget this 'Hindu College' sign board. this was done (donate) by Us Arts Union 93. Too bad the letters faded. Love my school

Srikantha Sivamyooran சொன்னது…

Very good effort. Even for us Thamil Anna n subash Anna are the heros on those days.... Good memories ...

Rajeshbabu Kanth சொன்னது…

Haha...but Subash was the heroine in my drama..92 kalai vizha

Reshzan சொன்னது…

பலருக்கு வரலாறு மறந்து போகிற நேரத்தில் இந்த நினைவுப்பகிர்வு முக்கியமானது,

Rakesh Sharma சொன்னது…

Thx 4 sharing with me anna.....its very interesting n happy to recall those unforgettable moments....I can feel this bz my mum n my elder bro..Vidyashankar was part of those events......n my Father was the Head Of Zonal Education who conducted this Tamil day competition on those days... furthar , when it comes to music competition ,Neelakandan Saravanan, Vidyashankar,Sutharshan, Thayaparan n Gajamugan should be addressed.....You can Ask from Thayaparan anna.........

Yathavan n Kugendran anna also should be addressed....there were no single near competition for these two in their era......

எஸ் சக்திவேல் சொன்னது…

>வழக்கத்துக்கு மாறாய் நிறைந்த கூட்டம் தங்களுக்கு பலனளிக்காததில் பிச்சைக்காரர்கள் கூட்டம் நிறைய ஏமாற்றம் கொண்டது.

பார்க்கவேண்டியவர்கள் (அதுதான் half saree அல்லது அது அணியும் வயதினர்) பார்க்கும்போது பிச்சைக்காரனுக்கு கையில் இருந்த 2 ரூபாவையும் போட்டுவிட்டி பம்பலப்பிட்டியிலுருந்து வெள்ளவத்தைவரை நடந்துவந்த வள்ளல் என் நண்பன். (அவனுக்கும் சத்திவேல் தான் பெயர் :-) - நான் சொல்லாவிட்டாலும் நீங்கள் ஊகித்துவிடுவீர்கள்)

---
மற்றது நான் பாவித்தது "நனைவிடை தோய்தல்"; சொந்தச் சரக்கு இல்லை. ஏற்கெனவே பாவனையில் உண்டு. அத்தலைப்பில் எஸ்.பொ ஒரு புத்தகமே எழுதியுள்ளார். தேடிக்கொண்டுள்ளேன் அப்புத்தகத்தை...

எஸ் சக்திவேல் சொன்னது…

இந்த word verification ஐ எடுத்தால் என்ன?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

எடுத்தாயிற்று சக்திவேல்.... உங்கள் பழைய கமெண்டுகள் ஸ்பாமுக்க கிடந்தது recover பண்ணி இருக்குறன்.

ஜேகே சொன்னது…

நனைவிடல் தோய்தல் அழகு ... அறிமுகம் இல்லாதவருக்கும் கொஞ்சம் அழும்பு. ஆலாபனை பாடியிருந்தால் பரிச்சயம் இல்லாதவரும் இராகம் பிடித்திருப்பரோ?

Umapathy (Umesh) சொன்னது…

Ture Unforgettable Moments how come we can forget the golden times

B.Umapathy

Umapathy (Umesh) சொன்னது…

True Unforgettable Moments we all was having our part in the school and we cannot forget anyone

nice to see that sign bord and the bamba-flat

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//ஆலாபனை பாடியிருந்தால் பரிச்சயம் இல்லாதவரும் இராகம் பிடித்திருப்பரோ?// - கொஞ்சம் போர் அடிச்சிருக்காது ?: நான் இதை கொழும்பு இந்துக்கல்லூரி நண்பர்களை வாசகர்களாக மனதில் வைத்தே எழுதினேன் ஜே.கே.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சந்தோசம் உமாபதி, உங்கள் வாசிப்பும் உணர்வுப் பகிர்வும் - நன்றி.

Ramanan சொன்னது…

நண்பா,

உங்கள் பதிவு அருமை. நானும், இந்துவின் எருமைதான். 92,93 (எனது 7,8 ம் வகுப்பு)களில் 'Hindu College' sign board, பாபு அண்ணா (நானும் கம்பர் house தான்), சுபாஸ் அண்ணா, தமிழ் அண்ணா, காண்டீபன் அண்ணா, பழைய Canteen, Gravel Ground, சரஸ்வதி hall இடம் பெயர்க்கப்பட்ட மக்கள், 92 பரிசளிப்பு, High Jump Matressla Jump பண்ணி தயாபரன் சாரிட்ட அடிவாங்கினது, அம்பெரில்லா ஆச்சி, ஒரு ரூபா ஐஸ் பழம், security அப்பு எல்லாம் மறக்க முடியுமா? Thank you for reminding my old gold memories.

முத்தமிழ் விழா 1992 பற்றி நினைக்கும் பொது சுபாஸ் அண்ணாவின் அந்த பாறாங்கல் நாடகம் மறக்க முடியமா. ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்கிறேன்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சந்தோசம் ரமணன்அண்ணா...,

நீங்கள் அழகாக பாடசாலை சித்திரத்தை வார்த்தைகளால் தீட்டினீர்கள்....

வந்து வாசிச்சு என் வார்த்தைகளுக்கு ஆதரவும் தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி...நன்றி.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//இந்துவின் எருமைதான்// நல்ல குறும்பு :)

Thamilalagan சொன்னது…

i dont mind, but i have not done any thing special

this brings our memory back thanks

Thiruchchenthooran சொன்னது…

Just saw these msgs.. appreciated uthaya... I enjoyed the flow of the article.. well written one.

தயாபரன் அண்ணா சொன்னது…

I just read your article....:) nicely put....
But Uthaya your flow is interesting to keep the reader locked....

Anthe half sari varekka mattum konjam screen play karai thandi oodinathu pool a irukku...
:))))

Naan ethaiyellam censor panni sonnano.. Née athaiyum serthittai... Eppididaa?

I can give you more finer details on the main matter... The more I read your blog... I remember even more finer details...

Chandrakasan சொன்னது…

Hello Uthaya shangar.

I don’t know you remember me, but I do. I read your article on your blog about Hindu college and it was a happy read. Thanks for sharing this with everyone.

I am very sorry to write this comment in English as I am commenting this from work and don’t have enough time to write it in Tamil. Also read your kavithai and article about Miss Vellupillai. Very impressive. Keep it up Bro!!!

BTW, I studied in Colombo Hindu College 2000 Batch ( Maths ), I think we also went to the same tuition back in Jaffna for year 5 scholarship ( Yoham Aunty )

Regards,
Chandrakasan

sudharshan சொன்னது…

தம்பி உதயா

அடி மனதில் தூசி படியாமல் இருந்த நினைவு முத்துக்களை மீண்டும் மீட்டு எடுத்ததுக்கு நன்றி!

நீ கூறியது போல், இந்துவின் மைந்தனாய் என்னை அறிமுகப்படுத்தும் போது எப்போதும் எனக்கு ஒரு கர்வம் உண்டு!

அந்த கர்வம்/ தெனாவட்டில் ஒரு பெருமை! மற்றைய பாடசாலை மாணவர்களுக்கு நாம் சளைத்தவர்கள் அல்ல என

நிரூபிக்க கிடைத்த ஒரு வாய்ப்பை கூட விட்டு வைத்ததில்லை! நீ கூறிய எனது அண்ணன் மார் இதைதான் போதித்தார்கள்!

அனால், இன்று இது ஸ்தம்பித்து நிற்ப்பதை கண்டு வேதனையடைகிறேன்!

இந்த ப்ளாக் ஐ இன்றைய மாணவர்களும் வாசிக்க வழி செய்!

வாழ்த்துக்கள்!!!!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

மிக்க சந்தோசம் சுதர்சன் அண்ணா, நிறையப் பேருக்கு இந்த இன்றைய நிலைகுறித்த வருத்தம் உண்டு. இன்றைய மாணவர்களும் வாசிப்பார்கள் எண்டு நினைக்குறேன். இதுவரை யாரும் அப்படி வெளிப்படையாய் பகிரவோ பதியவோ இல்லை. பார்ப்பம்.

Kannan சொன்னது…

// நான் இதை கொழும்பு இந்துக்கல்லூரி நண்பர்களை வாசகர்களாக மனதில் வைத்தே எழுதினேன் // if so ok!

கருத்துரையிடுக