(Eyes consumed with Grief)
எந்த சிவப்புமில்லாத facebook போல,
வெறுமை + ஏமாற்றம் தருகிறது
நீ கண்டுகொள்ளாமல் போவது.
கால் கடுக்க காத்திருந்த
எந்தன் வலிகளை ஒன்று திரட்டி
அனுங்கும் செருப்பின் முனகல் கூடவா
உந்தன் காதுகளுக்கு எட்டவில்லை.
என்ன அலட்சியம்!
எத்தனை திமிர்!
உனைச் சொல்லி குற்றமில்லை,
நீ ஓட ஓட,
துரத்தச் சொல்லுது என் அறிவு,
முன் சில்லுகளை துரத்தும்
பேரூந்தின் பின் சில்லுகள் மாதிரி.
வெள்ளவத்தையின் அந்த வசு வண்டி தரிப்பிடம்,
எரிக்கும் வெயில்,
ஒரு தெரு நாய்,
நிழலில் சுருண்டு போயிருந்த தாடி வளர்த்த அந்த பிச்சைக்காரன்,
நான்,
நீ.
உன்னோடு உன் இரண்டு தோழிகள்.
உன்னோடு வரும் போது
அவர்கள் தெரிவதில்லை - எண்டு
தெரியுமா அவர்களுக்கு?
நான் திருக்குமரன் சேரின் இரசாயனவியல் வகுப்பின் இடைவேளையின் போது ராஜ்பவனில் பரோட்டா சாப்பிட வந்ததாய் நினைத்துக் கொண்டிருக்குறது ஊர்.
இந்த இடைவேளையில் தான் இரசாயனவியல் நடக்கிறது என்பது திருக்குமரன் சேர் கூட ஊகித்திராத உண்மை.
எனக்கும்,
உனக்கும் (?)
அந்த நாயிற்க்கும் மட்டும் - தெரிந்த காதலை
தெரியாத்தனமாய்
காலி வீதியை நிரப்பி நிற்கும்
கடல் காற்றிடம் சொல்லி வைத்தேன்.
காதலை யாரும் காற்றிடம் சொல்லாதீர்கள்.
'ஊ' என்ற பேரிரைச்சலுடன்
ஊருக்கே சொல்லிப் போனது
அந்த மூடக் காற்று.
சாப்பிடு விட்டு ஊரே தூங்கிக்கொண்டிருந்த மத்தியானம் மூன்று மணி அது.
ஒரு விடுமுறை நாள்.
காற்றில் வந்த எந்தன் காதல் கிசுகிசுவை கேட்க்க யாருமில்லை.
கேட்க்க வேண்டிய நீயே கேளாத மாதிரி நடிக்கும் போது,
யாரோடு நோக?
யார்க்கெடுத்து உரைக்க?.
சூரியன் இத்தனை பிரகாசத்தைக் கொட்டியும்,
உன் முகத்தில் இருந்து வீசுகிற ஐொலிப்பை மறைக்க முடியாத ஆற்றாமையில் வெம்மையை கொட்டித் தீர்த்தான்.
ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பின்னழகும்
அதற்க்கு முன் மிகச் சில நொடிகளுக்கு மட்டும் முன்னழகும்.
அவ்வளவே....... பஸ்சிலிருந்து நீ இறங்கி கடக்கும் வரை.
ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பின்னழகும்
அதற்க்கு முன் மிகச் சில நொடிகளுக்கு மட்டும் முன்னழகும்.
அவ்வளவே.......
இரண்டு ஸ்கூப் ஐஸ்-கிரீமும் அதன் மேல் ஒரு செர்ரிப் பழமும் போல,
தகிக்கும் அந்த வெயிலுக்கு இதமாய்.
ஏன் பெரும்பாலும் பெண்கள்
சின்னதாக ஒரு செயின்
அதில் குட்டியாக ஒரு பென்டன் அணிகிறார்கள் ?
அதைக்கூட சட்டைக்குள்ளே ஒளித்து விடுகிறார்கள்.....
சொல்லாத காதல் போல
நீண்டு நெடிகிறது செயின்
அதில் சொல்லி சேர்ந்த காதல் போல
ஜம்பமாய் ஒரு பென்டன்.
(இதுக்கு மேல இதை விவரிச்சா சென்சார்ட்)
உனக்கு ஏன் அத்தனை அவசரம்,
வகுப்புக்கு நேரமிருக்கே - கொஞ்சம் மெதுவாய்த்தான் போவேன்.
உன் கூட வருகிற அந்த குட்டச்சி தான்
எதோ குடு குடுத்துக் கொண்டே (குடு குடுப்பை)
குடு குடுத்தாள். (குடு குடு வென ஓட்டம்)
போகிற போது சும்மா போகக்கூடாது ?
எதற்கு
உந்தன் கன்னத்து முடிக்கற்றை ஒன்றை
காதுக்கு பின்னல் பத்திரப்படுத்துகிறாய்.
வெளிச்சென்று தெரிகிற காது
நெருச்சென்று எங்கேயோ தைக்கிறதே,
அந்த ஒற்றைக் கல் காதோரத்தில்
ஊஞ்சலாட வந்த என் மனது சும்மா இராதே
முன்னே கொஞ்சம் சருக்கீஸ் விளையாட விரும்புமே.
தெரிஞ்சு செய்கிறாயா ?
இல்லை
தெரியாமல் செய்கிறாயா ?
காதிலிருந்து கண் எடுத்தால்,
பிரச்சனை இன்னும் 'பூதாகரமாகுதே'.
"இடையின் பின்னழகில்
இரண்டு குடங்கள் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்"
- (இது டீஆர் எழுதினது நம்மட வரிகள் எண்டு டென்சன் வேணாம்)
'கூட்டி' 'ஆட்டி' என்று போடாமல் மீட்டி என்று போட்டதில் ஒரு நயமிருக்கு,
தம்புராவின் தந்திகள் இடமிருந்து வலம் மீட்கயிலே...
ஒவ்வொரு தந்தியும் ஒவ்வொரு நாதத்துடன்.....
அழுத்திய விரலிரிந்து மெலெளுமே.....
சட்டையை மடித்து மடித்து சுருக்கு தைத்திருப் பார்களே,
அந்த ஒவ்வொரு மடிப்பும் ஒரு தந்தி....
இனிமேல் இரவில் 'நேற்றைய காற்று' கேட்க்க கூடாது.
(மேலதிக விவரங்களை உ.. ஊ.. ம ப த ப மா பாடும் ஜேகே வைக் கேட்கவும் )
இன்னும் சில நொடிகள் தான் திரும்பி விடுவாள் - உருத்திரா மாவத்தைக்குள்.
எந்தன் பேர்சை தட்டிப் பார்த்துக் கொண்டேன்.
அதுக்குள் தான்
எழுதப்படாத காதல் கடிதம் ஒன்று
இன்னமும் இருக்கிறது.
கடிதம் எழுதத் தான் அந்த காகிதம் வாங்கினேன்.
எழுத அமரும் போதெல்லாம்
அந்த அழகான காகிதத்தில்
அவள் முகமே தெரிகிறது.
எந்தன் அறியாமையை அதில் வடித்து
அந்தக் காகிதத்தின் அழகை கெடுக்க விருப்பில்லை.
அவள் பார்த்தாளா இல்லையா ?
dts surrounding இல் எந்தன் heart beat கேட்டது....
பாவி பார்த்தாளா இல்லையா ?
அந்த ரோட்டுத் திருப்பத்தில் திரும்பும் போது
கைகள் கன்னத்து முடியை காதுக்குப் பின்னல் ஒதுக்கி
கண் பீரங்கிகளுக்கு வழிவிட.....
பார்த்தாளா இல்லையா ?
சட்டென்று கடந்து விட்டாளே....
பார்த்தாளா இல்லையா ?
உங்களுக்கு தெரியுமா ? நீங்கள் கவனித்தீர்களா ?
அவள் பார்த்தாளா இல்லையா ?
எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாதமாதிரி மௌன சாட்சியாக இருந்தன அந்த பஸ் ஸ்டாண்டும், நாயும்.
ஊ என்று ஊளையிடும் காற்று பார்த்தாள் என்கிறதா இல்லை என்கிறதா.....
27 கருத்துகள்:
எந்த ஆண்டு இது தல?
இடைக்கிடை கவிதை எல்லாம் எழுதுறீங்க போல?
சட்டிக்குள்ள ஒளிக்கிற அளவுக்கு எழுத கட்ஸ் இருக்கு. சென்சாரும் விட்டிருக்கு போல!!
இதுக்கு மேலயும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு சொல்ல நான் ரெடியில்ல! அடுத்த அணுகுண்டு ஒப்பந்தம் ஒண்டில சந்திப்பம்!!
//எந்த ஆண்டு இது தல?//
கதையிலேயே ஹின்ட் இருக்கே....
சென்சார் எண்டு சொல்லுறதே சென்சார மீறி கற்பனையை கொண்டு போகத்தானே....
மீனவர் பிரச்சனையா ? அப்படி எண்டா ?
machan antha manusanayavathu vittu vai
அயே... அது சட்டை ஜேகே.... திருத்திட்டன்...
//சொல்லாத காதல் போல
நீண்டு நெடிகிறது செயின்
அதில் சொல்லி சேர்ந்த காதல் போல
ஜம்பமாய் ஒரு பென்டன்.//
என்ன ஒரு உவமான சிறப்பு. சொல்லா காதல்களின் நினைவெல்லாம், மீட்டி பல கவிதை வார்த்து, இந்த இதழ் நிறையும். தொலைவில் தெரியும் விண்மீன், மிளிரும் அழகில் கிறங்கி, அதன் அழகில் இதயம் மயங்கி, அந்த உணர்வில் கொஞ்சம் கிறங்கி, இதய கிடங்கில் இறங்கி, புது கவிதை நடையில் தாரும். அருகில் போனபின் சுடலாம், அதனால் வறண்டு விடலாம். எதற்கும் கொஞ்சம் பொறும். ஆதலால் இன்னும் சற்று தனித்திரும்.
//அருகில் போனபின் சுடலாம், அதனால் வறண்டு விடலாம். எதற்கும் கொஞ்சம் பொறும். ஆதலால் இன்னும் சற்று தனித்திரும்.// இதை அவுக கவனிப்பாகளே, பரவாயில்லையா ? ஏதும் உள் குத்து இருக்காதா ?
கவிதை, கவிதை, அபிராமி அபிராமி..... என்னே ஒரு சந்தம் என்னே ஒரு வருணணை...
பார்த்தாளா இல்லையா ? பார்த்து தான ஆகணும்
வாங்க தம்பி, உங்க பெர்சனாலிட்டில அவளவு நம்பிக்கையா ?
சுடலாம். சுடவேண்டும் என்றில்லை.பயபுள்ள என்னமாதிரி கோர்த்து விடுது.
திருக்குமரன் சேரிட கிளாஸா............... வேண்டாம் மச்சி....... நமக்கும் வயசு போட்டுது......
தொர (துரை) இதெல்லாம் வேற பண்ணீருக்காப்போல...
கஜன், நமக்கு வாலிப வயசு மச்சி....
வாங்க வலசு, எவ்ளோ பண்ணியிருக்கம் இதப் பண்ண மாட்டமா ? அட எழுதுறதை சொன்னான் பாஸ், நீங்க வேற.....
1999 முதல் 2001 வரை இதுதான் நடந்ததா???? :-o
//உன்னோடு உன் இரண்டு தோழிகள்.
உன்னோடு வரும் போது
அவர்கள் தெரிவதில்லை - எண்டு
தெரியுமா அவர்களுக்கு?//
ஆனாலும் அவங்க செய்யிற குசும்புகள் எண்டா... ஏதோ தாங்க தான் காவலர்கள் போல.. :P
ஒப்பின் டாக் நிறைய பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல...
/அதைக்கூட சட்டிக்குள்ளே ஒளித்து விடுகிறார்கள்.....!!//
எனக்கு பிடித்த வரிகளை நீக்கிய கவிஞருக்கு என் கண்டனங்களை இக்கணம் பதிவு செய்கிறேன்!
//அதைக்கூட சட்டிக்குள்ளே ஒளித்து விடுகிறார்கள்.....//
சுந்தரகாண்டத்துக்கு பின்னர் தமிழ் இலக்கிய உலகில் மிளிர்ந்த ஒரே ஒரு இலக்கிய வரிகளை நீக்கிய கவிஞருக்கு என் வன்மையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்!
ஏங்க பெட்ரோல் மக்ஸ் லைட்டே வேணுமா ? இந்த பந்தம் எல்லாம் கொளுதிக்க கூடாத....
//உந்தன் கன்னத்து முடிக்கற்றை ஒன்றை
காதுக்கு பின்னல் பத்திரப்படுத்துகிறாய்.//
இது பொல்லாத, பெண்கள் காட்டும் புரியாத மொழி நண்பரே. நாமும் ஒருதடவை ஒரு கவியில் இவ்வாறு எழுதினோம்.
"சட்டென சிதறிய பூங்குழல் இருள்திரையில் வெட்டித்தெறித்த மின்னலாய் புன்னகை வதனம்."
இவளோ தூரம் வந்திட்டு, கவிதை எல்லாம் சொல்லிட்டு பெயரை சொல்லாமல் போட்டிங்களே,
கவிதையில் ஓட்டம் நல்லா இருக்கு, ஆனா ஒரு டவுட்டு: அந்நியன் முடி அமைப்பா அவாக்கு ?
நானும் வெள்ளவத்தையில் காலாற, வேலை வில்வட்டி இல்லாமல் நடந்து திரிந்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, மீதியைச் சொல்லி வம்பில் மாட்டாமல் விடை பெறுகிறேன்.
சந்தோசம் சக்திவேல், உங்கள் வம்புகளை எங்களையே கற்பனை செய்து கொள்ளச் சொல்கிறீர்கள் அப்போ.... நல்லது....
"இடையின் பின்னழகில்
இரண்டு குடங்கள் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்"
Correction: It was Not VM ithu T.Rajendran Varihal from 'Mythilli Ennai Kathali' movie ( 1 Ponn Manai..''
தப்புத்தான் பாபு, செரியான தகவலை பரிமறினதுக்கு நன்றி.
அது சரி பேசாம போகிற சொறி நாயை ஏனய்யா கவிதைக்குள் இழுத்தீர்???
//எனக்கும்,
உனக்கும் (?)
அந்த நாயிற்க்கும் மட்டும் - தெரிந்த காதலை
தெரியாத்தனமாய்
காலி வீதியை நிரப்பி நிற்கும்
கடல் காற்றிடம் சொல்லி வைத்தேன்.//
எனக்குப் பிடித்த வரிகள்!!
//போகிற போது சும்மா போகக்கூடாது ?
எதற்கு
உந்தன் கன்னத்து முடிக்கற்றை ஒன்றை
காதுக்கு பின்னல் பத்திரப்படுத்துகிறாய்.
வெளிச்சென்று தெரிகிற காது
நெருச்சென்று எங்கேயோ தைக்கிறதே,
அந்த ஒற்றைக் கல் காதோரத்தில்
ஊஞ்சலாட வந்த என் மனது சும்மா இராதே
முன்னே கொஞ்சம் சருக்கீஸ் விளையாட விரும்புமே.//
வாலிப வயசு!!எங்கெல்லாமோ (சறுக்கீஸ்)விளையாடச் சொல்லும்!!:)
நன்றி செழியன். இப்படி தேடி தேடி வாசிக்குற அன்புக்கு நன்றி.
//இடையின் பின்னழகில்
இரண்டு குடங்கள் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்"
- (இது வைரமுத்து எழுதினது //
சிறு சந்தேகம்!! இது வைரமுத்து எழுதினது தானா???
இந்த வரிகள் “சலங்கை தாளொரு மாது” என்ற பாட்டில்(”மைதிலி என்னைக் காதலி”திரைப்படம்) டி ராஜேந்தரின் இயக்கத்தில் அவராலேயே எழுதப்பட்ட பாடல்!!என்று நினைக்கிறேன்! படம் வந்த காலம் டி.ஆர் உச்சத்தில் இருந்த காலம்!!! தகவல் சரியா என உறுதிப்படுத்துங்கள்!!
அது டிஆர் தான், பின்னூட்டத்தில் ஏலவே அந்தத் தவறுக்கு வருந்தி இருக்குறேன்.
கருத்துரையிடுக