நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ட
பள்ளிப்பருவத்து நண்பன் ஒருவனை
ஆரத் தழுவ முடியவில்லை
நெஞ்சில் நெருடுகிறது ஒரு பல்லுக்காயம்
நண்பரோடு கூடைப்பந்து
ஆடிக் களைக்கலாம் எண்டால்
ஓடி வழியும் வியர்வை
நகங்களின் கூர்மை சொல்லிச் செல்கிறது
சமூக அநீதி கண்டால் கோபம் ?
ஊகும், தள்ளிப் போகிறது
மிருதுவானவற்றோடு சேர்ந்து
நானும் மிருதுவாகிப் போனேன் போலும்.
செங்கொடி மேடைகளில்
உறுத்துப் பேச முடியாதபடி
உதடுகள் கடிபட்டுப் போய் இருக்கின்றன
நண்பர்களுடனான அதீத அரட்டை
ஆடிக்கொண்டிருக்கும் உந்தன் முத்துச்சிமிக்கியை
நினைவுக்கு கொணர்கிறது
சற்றே தாமதமாகும் அலுவலக கூட்டங்கள்
ஆவி பறந்து ஆறிப்போய்க் கொண்டிருக்கும்
ஒரு குவளை தேநீரையும்
இரு குவளைக் கண்களையும்
படம் காட்டுகின்றன
ஆடி அசைகின்ற உந்தன் பின்னல்
ஆக்சிலேற்றரோடு எந்தன் கால்களை - ஒரு
ஆசுவாச உடன்பாட்டிற்கு சம்மதிக்க வைத்திருக்கிறது
எந்தன் பருவத்தில் கொண்ட கோலமெல்லாம்
உந்தன் புருவத்தின் மையில் கரைந்து போகின்றன
அகந்தை அகற்றிய ஆத்மாவை
பரமாத்மா ஆட்கொள்ளல் போல
நான் இழந்த நிற்கும் (எந்தன்) மிச்சத்தை
நீயே முழுதும் ஆட்கொண்டிருக்குறாய்.
அடையாளம் தொலைத்த இந்த நிலையை - எல்லாரும்
அடையாளப்படுத்திக் கேலி சொல்கின்றார்
பின்னூட்டங்-களையும் விருப்பு-களையும்
தாண்டிய ஒரு வாசிப்புக்காகவே
இப்போதெல்லாம் எழுத முயல்கிறேன்
குனிந்த மர நிழலும் குனித்த புருவமும் - கண்ட பிறகு
குதிரைகளின் கனைப்பும்
நரிகளின் ஊளையும் ஒன்றே.
இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்
அந்த பள்ளிக்கூட ஹொக்கி அணியின் நிழல் படத்தில்
பின் வரிசையில் நடுவில் நிற்கும் இளைஞனுக்கும்
எனக்குமான வித்தியாசம் மகிழ்வையே தருகிறது
இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்,
நீக்கமற!
---------------------------------------------------------------------------------
இதை நான் அந்த சம்பவத்து மொன்னமே எழுதினான் எண்டு சொன்னா நம்பவா போறீங்க ?
---------------------------------------------------------------------------------
9 கருத்துகள்:
சரி, ஒரு 10 வருடம் கழித்து இதை எப்படி எழுதுவீர்கள் என்று ஊகிக்க முடிகிறது. ஆனால் என்னால் கவி (அல்லது கவிஜ கூட) புனைய முடியாது :-(
அப்புறம் நமக்கு பழகிடுமா இல்லை வீரம் பிறந்திடுமா?
பழகிடும். பிறகு அப்பாவையும் புரியத் தொடங்கிவிடும். 'மனிசன் பாவம்' என்று ஒரு பரிதாப அன்பு வரும்....
சீரியஸ் ஆகப் பேசினால், இந்த அன்பும் பிரியமும் இருக்கும்வரை என்ன கவலை?
(இரண்டாவது வரி எழுதியது பின்னுக்குக் காலடிச் சத்தம் கேட்டபோது :-))
//பிறகு அப்பாவையும் புரியத் தொடங்கிவிடும்.// - நச்
ஆனாலும் உங்கள் சிவாஜிகணேசன் காலத்து நடிப்பை பார்க்கும் போது எனக்கு அவ்வப்போ சந்தேகம் வரத்தான் செய்கிறது.
இதுக்கு ஏதாவது கொமெண்ட் எழுதினா ரெடிமேட்டா "உனக்கென்று ஒரு கலியாணம் காச்சியான விளங்கும்" என்று எவனாவது ஒருத்தன் போட்டு கடுப்பேத்துவான் என்பதால்,
"கவிதை நன்று, கற்பனைகளில் புனைந்த நிஜம் நன்று, அதை வடித்த வாலிபன் நீ, இனி இல்லை வண்டு" என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி அமைகிறேன். வணக்கம்!
>ஆனாலும் உங்கள் சிவாஜிகணேசன் காலத்து நடிப்பை பார்க்கும் போது எனக்கு அவ்வப்போ சந்தேகம் வரத்தான் செய்கிறது.
எல்லாரும் சொல்லி வைச்சுக்கொண்டுதான் அடிக்கிறாங்களா? தாங்கமுடியல்லை சாமி..
நின்னையே கதி என்று சரணம் எய்தினேன் என்று முண்டாசுக்காரர் சொன்னது போல மூழ்கி இருக்கிறீர்கள் போல. கவிதை அருமை. வாழ்க்கையில் இந்த மாற்றம் ஏராளம் சுகங்களையும், புரிந்து கொள்ள முடியாத வலிகளையும் ஒரே நேரத்தில் கொடுத்துவிடுகிறது. நியாயம், தர்மம் எனும் சிகரங்களுக்கு முன்னாலுள்ள நடைமுறை சாத்தியம் என்ற சமவெளி இப்போது அழகாய் விரிகிறது. மெல்ல மெல்ல இந்த சமவெளியை அழகாய் மூடும் பனிப்போர்வை அந்த சிகரங்களை மறைத்து விடுகின்றது. கவிஞனையும் கவிதையையும் பிரித்துபார்க்கவேண்டும் எனும் விதிப்படியே இதை நான் ரசிக்கிறேன். ஆனால் எல்லா மானுடனும் இந்த படிகளை கடந்தே வருகிறான். சிலர் பனிவிலகும் பொது மீண்டும் சிகரம் நோக்கி நடக்கிறார்கள், சிலர் பார்வை இழந்து போகிறார்கள். பனி விலகுவது மட்டும் நிச்சயம்.
//மூழ்கி இருக்கிறீர்கள் போல// என்ன இவன் நம்மளப் பார்த்து சட்டுன்னு இப்புடிக் கேட்டுட்டான் - ஓம் எண்டு சொன்னாலும் சிக்கல் இல்லை எண்டு சொன்னாலும் சிக்கல் - விளக்கு மாதத்துக்கும் மாத்து விளக்குக்கும் நடுவில நம்ம சிக்கல்.
இதில இது வேறயா - // கவிஞனையும் கவிதையையும் பிரித்துபார்க்கவேண்டும் எனும் விதிப்படியே இதை நான் ரசிக்கிறேன். // நல்லா அடிக்குறாய் தவில் இரண்டு பக்கமும்.
இதுல பெண் ஏன் ஒரு ஒரு உவமான உருவகமா இருக்கக் கூடாது ? வாழ்வின் லௌகீகங்கள் எல்லாத்துக்கும் இது பொருந்தும் இல்லையா.
கொஞ்சம் சர்ச்சையும் ரசனயுமான உவமானங்கள் பலமா பலவீனமா தெரியாது - எனக்கு பெரும்பாலும் அடிதான் - அதில் இந்த முயல் எடுக்குற மனுஷன் இருக்கே.
சரி விடு எனக்கு(ம்) இது புதுசல்ல. (அந்தாளுக்கும் இது வழமை தான்)
அப்புறம் மச்சி அந்த சாம்பார் ரெசிப்பிய அனுப்பிவிடு - நீ நல்லா வைப்பாய் எண்டு உன்ட மனிசி என்ட மனிசிட்ட சொன்னதில இருந்து இங்க ஒரே புகைச்சல்.
அருமையான படிமக்கவிதை. மூண்டு வருசமா ஒரே ஒரு தக்காளி குழம்பை வைச்சு நானே பிழைப்பை கொண்டுபோறன், இதுக்குள்ள சாம்பார் சட்டினி எண்டுகொண்டு.
கருத்துரையிடுக