புதன், அக்டோபர் 24, 2012

விண்ணைத் தாண்டி வருவாயா ? !


அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

அந்தச் சிக்கலை
அவுழ்க்கவும் ஆகாது
வெட்டவும் ஒண்ணாது
மனதும் மூளையும்
மயங்கிக்கிடக்கிறது

நீ
கைப் பையை திறந்தாலோ
நான்
பர்சை திறந்தாலோ
கதை சுபம்தான்

உள்ளே தூங்கி கிடக்கு
எங்களுக்கான காதல் கடிதங்கள்.

முடறு வரை
வந்தவார்த்தை
முழுங்கப் படுகிறது
தடுப்பது
சுயமா பயமா
தெரியவில்லைவிளிம்பில் நிற்கிறது மனசு
எட்டிப் பார்த்தல் விழுந்து விடும்
ஒரே கிண்ணியில் எதிர் எதிராக இல்லை
இரு வேறு கிண்ணிகள் அருகருகா - பயம்
நான் முதலா ? நீ முதலா ? - தயக்கம் (சுயம்)

அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

இரண்டு கெட்டிக்காரர்களுக்கு
காதல் கடினமாகிறது
காதலில்
கெட்டித்தனத்தை காட்டுவதால்
காதலிப்பதில்
காட்ட வேண்டியதை
காதலிக்கப் படுவதில்
காட்டுகிறார்கள்

அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

அந்தச் சிக்கலை
அவுழ்க்கவும் ஆகாது
வெட்டவும் ஒண்ணாது
மனதும் மூளையும்
மயங்கிக்கிடக்கிறது

6 கருத்துகள்:

எஸ் சக்திவேல் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
எஸ் சக்திவேல் சொன்னது…

கொஞ்சம் தேநீர்
அர்த்தமான பார்வைகள்

அருகில் வந்தாள், மென்று விழுங்கினாள்
கன்னம் சிவந்தாள்
பயந்து பயந்து நோட்ஸ் ஐ விரித்தாள்,
"இந்தக் கடதாசியைச் சயந்தனிடம் கொடுப்பியளா" என்றாள் பாவி!

உடைந்திருந்தது தேநீர்க் கிண்ணத்தின் கைப்பிடி

--- மொக்கைக் கவிஞன் நொந்த கோபால்

(சும்மா ஒரு முயற்சி ஹீ ஹீ !)

எஸ் சக்திவேல் சொன்னது…

சிக்கலை வெட்டினால் இந்தத் திரில் எல்லாம் போய்விடும். (என்றாலும் சிக்கலை வெட்ட வாழ்த்துக்கள் )

ஏ.எ.வாலிபன் சொன்னது…

இப்படி போட்டால் எப்படி ?

கொஞ்சம் தேநீர்
அர்த்தமான பார்வைகள்

அருகில் வந்தாள்
மென்று விழுங்கினாள்
கன்னம் சிவந்தாள்
பயந்து விரித்தாள் - நோட்ஸ்ஐ

கொன்னாளே பாவி - மனசை
ஒத்தை சொல்லாலே,
"கொடுப்பியளா கடதாசி சயந்தனிடம்"
என்ற ஒத்தை சொல்லாலே !.

உடைந்தாது கைப்பிடி.
உடைந்தது கையோடு பிடி.

எஸ் சக்திவேல் சொன்னது…

நன்றாகத்தான் இருக்கிறது. (முன்பே சொன்னேன் அல்லவா 'நான் கவிதை' டிபார்த்மேந்து இல் வீக் என்று "

பெயரில்லா சொன்னது…

If true, poems make so mess.Say directly to her. congratz!

கருத்துரையிடுக