வெள்ளி, அக்டோபர் 19, 2012

சோகமா ஒரு வாரம்


ஓரடி மாலை,
ஒரு ரோசாப் பூ,
கொஞ்சம் இயக்கப் பாடல்,
சோகமா ஒரு வாரம்.

கிரடிட் கார்ட் பில்,
காஸ் விலை ஏற்றம்,
மன அழுத்தம்,
மெல்ல மறந்து போகும்.

ஓரடி மாலை,
ஒரு ரோசாப் பூ,
கொஞ்சம் இயக்கப் பாடல்,
சோகமா ஒரு வாரம்.

வடை பாயசம் படைச்சு
விரதம் இருக்க
மாவீரர் ஒண்டும்
நல்லூர் முருகனோ
சுடலை வயிரவரோ இல்லை அடா!

கடைசியில்
அடிச்சது விட்டு,
அடிக்காம விட்டு,
அகப்பட்டு செத்ததெல்லாம்;
அம்புட்டுத்தானா?

நீ வாழ செத்தவன் சொல்கிறேன் கேள்
யாராவது வாழ நீ வாழப்பா.
என்னை நீ நினைத்திருப்பாய் 
என்பதற்கா என் சாவு - இல்லையடா
ஏதோ ஒன்றை நடந்திடாதா 
என்பதற்காய் என் சாவு.

அள்ளுப் பட்டுப் போய்
கொத்துக் கொத்தா செத்ததெல்லாம்
நீ அழுது முடங்க வல்ல.

கண்கள் துடைத்து எழுந்துவா -
கைகள் தேய்த்தவடி.
வெட்டி முறித்து வேலை செய்.
அதை கொட்டி களித்துக் கொண்டாடு -
தப்பில்லை.

பாதி வயித்துக் கஞ்சிக்கு
பார் பார்த்து நிக்கும் உந்தன் முட்டைக்
கோது வயித்துக் குஞ்சுக்கு
கொஞ்சமாவது கொடுத்து அனுப்பு.

அள்ளி முடிச்சு அறுவடை செய்
சீவி முடிச்சு சிங்காரி - அதுக்கு முதல்
பள்ளிக்கு கொஞ்சம் பகிர்ந்தனுப்பு.

கட் அவுட் கொண்டு வந்தால் -விகிதாசாரப்படி
கட் அவுட் கொண்டு வந்தால்
கட் - அவுட் ஆயிடுவமோ

துள்ளி எழு
துடை விளக்கு சிமினி
அள்ளிக் கட்டி
அளவில்லாமல் படி
அறுவடைக்கு காலம் வரும்

அண்டைக்கு

கட்டு படைக் கோயில் - எமக்கு
கனகு, மல்லி எண்டு
கொட்டு பூக்குவியல்.
பாடு புதுராகம்.
கொண்டாடு - 
சோகமா ஒரு வாரம்
சுகமாக.7 கருத்துகள்:

எஸ் சக்திவேல் சொன்னது…

அருமை.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சக்தி அண்ணை செல்லாது செல்லாது.

எஸ் சக்திவேல் சொன்னது…

இது எப்படி?

"இதுவன்றோ படைப்பின் உச்சம்"

ஏ.எ.வாலிபன் சொன்னது…

இப்ப ஓகே பரவாயில்லை. ஆனா அந்த பீல் கொஞ்சம் காணாது , ரெண்டாவது பல்லவியில சுருதி கொஞ்சம் விலகிட்டுது அதை மட்டும் பாத்துக்கோங்க.

பெயரில்லா சொன்னது…

Great,another view,we all reject to think like this..

ஜே கே சொன்னது…

இந்திய தத்துவஞான மரபிலக்கியத்தில் ஒரு மைல் கல்?

anyway jokes apart, இந்த கவிதை ஓரளவுக்கு எதிர்பார்த்தான் .. ஆனா இவ்வளவு நயத்தை அல்ல ... "வழமையான" வாலிபனை விட கொஞ்சம் மெனக்கெடல் தெரியுது. வாழ்த்துகள்!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//இந்திய தத்துவஞான மரபிலக்கியத்தில் ஒரு மைல் கல்?// எனக்கு சிவஞானம் வாத்தியையும் மயில்வானம் வாத்தியையும் தெரியும் - நம்மளை மிரட்ட முடியாது.

jokes apart ? ஆணியே புடுங்க வேணாம் - அருமைக்கும் அருமைக்கும் வித்தியாசம் தெரியாம நானே குழம்பிப்போய் இருக்கன்.

/ "வழமையான" வாலிபனை விட கொஞ்சம் மெனக்கெடல் தெரியுது. // செரி இனிமே மினக்கெட்டு மினக்கெட்டு எழுதுறன் - இல்லையா எழுதாம இருந்துர்ரன் - ஆனா இதுவும் ஒரு புளோவில வந்ததுதான் மினக்கடல் எல்லாம் நம்ம உடம்புக்கு ஒத்துக் கொள்ளுமா தெரியேல்லை - ஆனா திரும்பவும் சொல்றன் : இனிமே மினக்கெட்டு மினக்கெட்டு எழுதுறன் - இல்லையா எழுதாம இருந்துர்ரன்.

கருத்துரையிடுக