செவ்வாய், ஜூலை 03, 2012

ஆனந்தி பகுதி III

முந்தய பாகம்

காட்சி IV: மந்திராலோசனை, 1985, அதிபர் அலுவலக அறை - பரியோவான் கல்லூரி.

அதிபர் ஆனந்தராஜா
சேர் பேசாம விட்டுடுங்கோ,

அதெப்படி சேர் இன்விடேஷன் லெட்டர் வந்திருக்கு, ப்ரோப்பேர் ரிப்ளை அனுப்ப வேணும்.

ஆனா அதுக்கு ஆமிக் காரங்களோட, வேணாம் சேர்.

ஏன் சேர் வேணாம், இட் இஸ் ஜஸ்ட் கிரிக்கெட், வாட் இஸ் ராங் இன் இட் ?

இல்லை சேர் இப்ப எக்ஸாம் வருது….

அதிபர் ஆனந்தராஜா தன் நாற்காலியில் பின்னே சாய்ந்து கொண்டார், அந்த வயதான உதவி அதிபரை கூர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னார், சனிக் கிழமை விளையாடக் கேட்டிருக்கு, மோர் ஓவர் கிரிக்கெட் ஹாஸ் நத்திங் டு டூ வித் எக்ஸாம்.

உதவி அதிபருக்கு எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற வேகம், எதோ ஒரு ஆபத்தை உணர்த்த இடது கண் துடித்துக் கொண்டிருந்தது - அவரை அது மேலும் படபடப்பாக்கியது.

மற்றயவர்கள் இதில் பேசிப் பயனில்லை என்பது போல் அமைதி காத்தார்கள்.

இந்த நேரத்திலை இது வேணாம் சேர் அடுத்த டேர்ம் வைச்சுக் கொள்ளலாம்.

கேட்ட திகதியில இருந்து இரண்டு மாசம் கழிச்சு எண்டா நல்ல இருக்காதே சேர்.

அந்த உப அதிபருக்கு இந்தக் காரணங்கள் எடு படாது என்று புரிந்திருந்தது, ஆனால் ஏதாவது ஒரு காரணத்தில அதிபரை ஒப்புக்கொள்ள வைக்க வேணும் எண்டு போராடினார்.

வேறு வழியில்லை உடைத்துப் பேச வேண்டியதுதான்,

சேர், இங்க இப்ப நிலைமை செரி இல்லை, இயக்கங்கள் பல இருக்கு அவனுகள் ஆமிக்காரனுகள் போலீச எண்டு அங்கங்கை சொறியுரானுகள், எதுக்கு வீண் பிரச்சனை.

ஆனா இது வெறும் கேம் தானே சேர், எங்களை எங்கட சனத்துக்கு நல்லத் தெரியும், ஜே.ஆர் கல்வித்திட்டத்துக்கு எதிராக் குரல் கொடுத்தது, கொழும்பில இருந்து சனம் அடிவாங்கி ஓடி வரேக்கை உதவினது எண்டு எங்கட ஸ்டாண்ட் என்ன என்பதில் ஒரு குழப்பமும் இல்லையே.

இனி வேற வழி இல்லை, கடைசி ஆயுதத்தை கையில் எடுத்தார் உபஅதிபர்.

சேர் உங்கட டிசிசன் மொத்த JHONIONS மேல ஒரு பிம்பத்தை உருவாக்கும். யோசியுங்கோ சேர், அவசரப் பட வேணாம்.

அதிபர் ஆனந்தராஜா இந்தப் பதிலால் எந்த சலனமும் அடையவில்லை, அந்த அறயில் இருந்த ஏனயவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சி, இப்படி ஒரு போட்டை உப-அதிபர் போடுவார் எண்டு அவை எதிர் பார்க்கவில்லை.

தன முன் வழுக்கை தடவிக்கொண்டு ஒரு புன்னைகையோடு அதிபர் ஆனந்தராஜா சொன்ன வார்த்தைகள்,

“Johnians! Always play the game.”முற்று வைக்கப்பட்டது.

முந்தய பாகம்

அதிபர் C.E. ஆனந்தராஜா பரியோவான் கல்லூரியின் மறக்க முடியாத குறிப்பிடத்தக்க அதிபர், யாழ்ப்பாணத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமை மிக்க கல்வியாளர். இலங்கை இராணுவத்துடன் கல்லூரி அணி ஒரு கிரிக்கட் போட்டி விளையாட ஒப்புக் கொண்டதால் அவர் கொல்லப்பட்டார். இந்த ஜூன் மாதம் இருபத்தி ஆறாம் திகதி அவரது இருபத்திஏழம் வருட நினைவு நாள். என் செவி வழி செய்திகளை கொண்டும் இணைய உசாத்துணைகளைக் கொண்டும் இந்தக் கதையை சிருஸ்டித்துள்ளேன், தரவுகளில் ஏதும் பிழை இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் - இது என் நினைவு தெரியாத காலத்து நிகழ்வு.

குறிப்பு: Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும்; பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன,
Your Alma Mater's ancient name,  
Johnians !Always play the game


உசாத்துணைகள்:

14 கருத்துகள்:

Gobi சொன்னது…

ஏராளம் எழுத்துப்பிழை வாலிபன். தமிழை தாங்கள் தான் காப்பாத்துறம் என்று கொலைவெறியோட திரியுற சனம் உந்தப்பக்கம் வரப்போகுது.

Gajen சொன்னது…

கொன்றவர்கள் யாரென்பதைச் சொல்லவில்லை............

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி கோபி, திரும்ப திரும்ப வாசித்து திருத்துகிறேன்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி கஜன், இந்தக் கதைக்கு யார் கொன்றார்கள் என்பது எங்களுக்குள் யாரோ என்பதே போதுமானது. நிற்க உசாத்துணைகள் இது விடுதலைப் புலிகள் என்று உறுதி படக் கூறுகின்றன.

எஸ் சக்திவேல் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
எஸ் சக்திவேல் சொன்னது…

கொன்றதுவும் கொல்லப்பட்டதுவும் நம்மவரே. இது நடந்தபோது நான் இளைஞன்/விடலைப் பருவத்தினன். புலிகளே இதைச் செய்ததாக உரிமை கோரினர் என்பது ஞாபகத்தில் உள்ளது.

http://en.wikipedia.org/wiki/List_of_assassinations_of_the_Sri_Lankan_Civil_War#Academics

ஏ.எ.வாலிபன் சொன்னது…

தகவலுக்கு நன்றி சக்தி அண்ணை.

Jina சொன்னது…

சிங்கம் போன்ற நடை உடை
கொண்ட எம் அதிபரை
புலித்தோல் போர்த்திய நரி
ஓட விட்டு கொன்றதை
ஒருபோதும்
மன்னிக்கவே முடியாது...!
அதிபர் மட்டும்தானா...!
இப்பிடி எத்தினை பேர்?
இப்ப கொக்கரிக்கும் ஐநா ய்
அப்ப எங்கே ஊளையிட்டது...!
தீவிரவாதத்தை ஆதரித்தால்
எலும்புக்கூடுகளே மிச்சமாகும்...!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

ஜினா உங்கள் கருத்து சூடு நிறைய, வாலிபனை வாசிப்பவர்கள் குறைவு இல்லையில் ஒரு கலவரம் இங்கே வெடித்திருக்கும். நீங்கள் நிறைய சமைப்பீங்கள் என்று தெரியுது. வந்ததுக்கு நன்றி.

நான் இதை ஒரு சமூகத்தின் குற்றம் என்றே பார்க்குறேன், ஐநா வரும் வரை காத்திராது சமூகம் வெளிப்பட்டு இருக்க வேண்டும். அப்ப விட்டுட்டு பிறகு குய்யோ முறையோ எண்டால்......

ஜேகே சொன்னது…

Jina, LTTE was a banned organization in most of the countries for the same reason during th time. UN wasn't silent by then. That's kinda selective amnesia I wd call.

ஆதித்த கரிகாலன் சொன்னது…

இவர் கொல்லப்பட்ட ஆண்டுதான் தமிழ் மக்களுக்கு எதிராக படுகொலைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆண்டாகும்.குறிப்பாக குமுதினி படகு , வல்வெட்டித்துறை, தம்பட்ட மற்றும் கிளிவெட்டி படுகொலைகள் நடத்தப்பட்டு சிலவாரங்கள் கூட கழிந்திராத நிலையிலையே இந்தபோட்டி ஒழுங்குசெய்யப்பட்டு, மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_Sri_Lankan_government_forces

இருநூறு தமிழ் மக்கள் கொலப்பட்டும் அரசுபடைகளுக்கு கிடைக்காத அபகீர்த்தியை இவரது படுகொலை புலிகளுக்கு ஏற்படுதிவிட்டதுதான் கடைசியில் நடந்தது

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//இருநூறு தமிழ் மக்கள் கொலப்பட்டும் அரசுபடைகளுக்கு கிடைக்காத அபகீர்த்தியை இவரது படுகொலை புலிகளுக்கு ஏற்படுதிவிட்டதுதான் கடைசியில் நடந்தது// நச் கரிகாலன். இது பற்றி விரிவாக நிறைய ஆராயலாம் - என்னைக் கேட்டா இது ஒரு சமூகமே பொறுப்பேற்க வேண்டிய குற்றம்.

ANBU J சொன்னது…

I think that what our principal did was wrong.. Being a principal of most reputed college, he must have some concerns about community too.. Since it was clear that the cricket match was arranged to divert the people and to show everything ok, He shouldn't stick with the concept "Johnians always play the game".. No we don't play games when our people die.. We tend to protect, fight back or at least support the people morally..

ANBU J சொன்னது…

jina:
//தீவிரவாதத்தை ஆதரித்தால் எலும்புக் கூடுகளே மிச்சமாகும்..//
மற்றவர்கள் அதைக் கூட மிச்சம் வைக்காமல் அசிட் ஊற்றி அழிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

கருத்துரையிடுக