வெள்ளி, மே 04, 2012

ஒரு போராளியின் கதை - II: தேரை நினைவு

முந்தய பாகம்
ஒரு போராளியின் கதை: பகுதி இரண்டு -தேரை நினைவு.




ஊருக்குப் போய்ப் பார்த்தா உற்றாரில் சிலரில்லை
வீட்டுக்கு போய்ப் பார்த்தா உத்தரத்தில் மீதியில்லை
பேருக்கு கூட கோயில் கோபுரத்தில் மிச்சமில்லை
ஆட்டுக்கு மட்டும் கொம்பென்னும் இளைக்கவில்லை


உற்றாரில்லாட்டியும் உறவென்னும் மிச்சமிருக்கு
உத்தரமில்லாட்டியும் நாய்க்கென்னும் சோறிருக்கு
கோபுரம் இல்லாட்டியும் குயில மணி ஓயவில்லை
கொம்பு இளைக்காத்தால வீம்பென்னும் போகவில்லை






காடு மேடு போன கால்கள் கன்னியை தேடுது
நித்திரை மறந்த கண்கள் அவள் சித்திரத்தை தேடுது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது - அவள்
நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது


அவள் நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது.


நினைவில் பூத்த பூ

தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ? - இல்லை
போர் மேகம் வந்ததனால் தொலைவுக்குப் போனாளோ?
நாகை கருங்கூந்தல் நரையோடி இருக்குமோ?
கார்மேகம் என (என்னை) இன்னும் எண்ணி இருப்பாளோ?


தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ?
கார்மேகம் என என்னை எண்ணி இருப்பாளோ?


பிள்ளைப் பராயம் கல்வியோடு போகவில்லை
விடலைப் பருவம் விரும்பியபடி அமையவில்லை
காளைப் பருவமது கடும் யுத்தம் புரிந்தபடி
கடைசிப் பருவம் அவள் கனவுகளில் கழியட்டும்.




தாய் மண்ணை தனயர் நாம் சுமந்திட்ட வரலாறு
பத்து மாதமல்ல பயிற்ரிரண்டு வருடங்களாய்: கரு வயிற்றில் - அந்தப்
புந்தி உடைத்து புகழ் கொண்டார் உலகமெல்லாம் - அந்தப்
பந்திக்குப் போகமால் குளவி செய்வீரோ அக்குருதி ?


பாரெல்லாம் பரந்தவனே - இந்தப்
போராளியின் கதை கேட்டாயா ?
கார் மேக வண்ணா - இனி
போராடா வருவாயா ?


கார் மேக வண்ணா - 
இனிப்போர் ஆட, வருவாயா ?

இனிப் போராடலாம்......


அடுத்த பாகத்தில் போராடலாம் இனி.

11 கருத்துகள்:

எஸ் சக்திவேல் சொன்னது…

இந்தமுறை எதுகை மோனையுடன், தொடருங்கள்.

கவிதை Dept இல் அடியேன் வீக் எண்டா நம்பமாட்டியள். விரைவில் ஒரு கவிதை (மாதிரி ஒன்று) எழுதி நிரூபிக்கிறன்.

(start)
விளக்கம் கேட்பது ,கவிதைக்கு
ஒரு மோசமான குற்றம்.
கொஞ்சம் கொஞ்சம் தட்டித் தட்டி
கவிதை வாசிக்கின்றேன் இப்பதான்
போடுவேன் கொமேன்ற்ஸ் பத்து வரியம் கழித்தும்...
(end)

எப்படி மேலேயுள்ள என் கவிதை (கவுஜ)? (என்னால் இவ்வளவுதான் முடியும் :-)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சந்தம் இல்லாட்டி அது கவிதை குறைவு - ஜேகே அதை கண்டுகொள்ளாமல் கவிதை என்று அடம் பண்ணும்.

உங்க கவிதையை இப்படி எழுதினால் சிறப்பு - இன்னமும்:

விளக்கம் கேட்பது,
ஒரு மோசமான குற்றம் - கவிதைக்கு.
கொஞ்சம் கொஞ்சம்
தட்டித் தட்டி
கவிதை வாசிக்கின்றேன் - இப்பதான்,
போடுவேன் கொமேன்ற்ஸ்,
பத்து வரியம் கழித்தும்...

உங்கள் கவிதையில் ஒரு சிறப்பு ஒவ்வொரு வரியையும் கொஞ்சம் flip பண்ணினாலும் அர்த்தம் அப்படியே.

sivakaran சொன்னது…

"ஊருக்குப் போய்ப் பார்த்தா உற்றாரில் சிலரில்லை
வீட்டுக்கு போய்ப் பார்த்தா உத்தரத்தில் மீதியில்லை"
"காடு மேடு போன கால்கள் கன்னியை தேடுது
நித்திரை மறந்த கண்கள் அவள் சித்திரத்தை தேடுது"

அருமை அருமை உங்கள் வரிகள் மிகவும் அருமை....... :)

எஸ் சக்திவேல் சொன்னது…

>உங்கள் கவிதையில் ஒரு சிறப்பு ஒவ்வொரு வரியையும் கொஞ்சம் flip பண்ணினாலும் அர்த்தம் அப்படியே.

இந்தக் குசும்புதானே வேணாங்கிறது. முதல்ல அப்படி வசனமாக எழுதிவிட்டு, பிறகு flip பண்ணியதுதன் என் கவிஜ. கற்பூர புத்தியையா உங்களுக்கு...

ஜேகே சொன்னது…

வாலிபன் ..

//ஜேகே அதை கண்டுகொள்ளாமல் கவிதை என்று அடம் பண்ணும்//
நீங்கள் சந்தம் தெரிந்து மீறும் கேஸ்! அதில் இருக்கும் அழகை தான் கொண்டாடுபவன். வெறும் கற்பனை ஒன்று வந்துவிட்டது என்று சொல்லி, நாலு வரியில் facebook இல் கிறுக்கி போட்டுவிட்டு லைக் வாங்கும் "வஸ்துகளை" தான் நான் கவிதை என்று ஏற்றுக்கொள்ளுவதில்லை. என் அங்கீகாரம் எழுதுபவனுக்கும் முக்கியம் இல்லை. அது எனக்கு மட்டுமே முக்கியம்!!

//ஆட்டுக்கு மட்டும் கொம்பென்னும் இளைக்கவில்லை//
கொம்புகளுக்கு அறுவடை முன்னமேயே அருவிவெட்டாமே!
அம்புகள் கூட அருகியதால் சொம்புகள் சொர்க்கவாசல்
காட்டுதாமே!
கறிக்கடையில் மறி ஆடு, கடவுச்சீட்டுடன் கிடாய் ஆடு!
பாவம் தனித்துவிடப்பட்ட குட்டிகள்,
மே மே மே என்று சன்னமாய் கத்தினாலும்,
எந்திரனுக்கு அது கறுப்பாடு!
கம்பளி வெட்ட தொழிலாளி இல்லை!
செம்மறிகள் மேதினத்தில் கொடி முல்லை!


தம்பி .. இது சும்மா சந்தமும் இல்லாத பந்தமும் இல்லாத "பன்னி" கவிதை ... திருத்தி போடு! திருத்தாததை விடு திருத்தியது உயர்வேனில் உன்னதென போடு! அப்புறம் என்னது என்று உன்னதை சொன்னால் அது என்னதில்லை உன்னது என்றும் சொல்லமுடியாது.. நம்மது என்று சொல்லும் குணம் கவிஞனுக்கும் கிடையாது!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி தம்பி சிவா.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சக்தி பட் உங்கட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ;)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

அடடா, ஜேகே செமை கவிதை, வி.மா. வில போட்டிருக்கலாம்.
//பாவம் தனித்துவிடப்பட்ட குட்டிகள்,
மே மே மே என்று சன்னமாய் கத்தினாலும்,// தனித்த வரி - சோகம்.

கடைசிப் பந்தி: சொக்கா பொன் எண்டா எனக்கு, அடி எண்டா உனக்கு, செம தருமி ஐயா நீர்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

உங்களை சீண்டியத்தில் இப்படி ஒரு நன்மை - //என் அங்கீகாரம் எழுதுபவனுக்கும் முக்கியம் இல்லை. அது எனக்கு மட்டுமே முக்கியம்!!// ஏன்பா இதெல்லாம் status ஆ போட மாட்டியலே...

ஜேகே சொன்னது…

//கடைசிப் பந்தி: சொக்கா பொன் எண்டா எனக்கு, அடி எண்டா உனக்கு, செம தருமி ஐயா நீர்.//

அகுதே அகுதே!

பெயரில்லா சொன்னது…

//பாரெல்லாம் பரந்தவனே - இந்தப்
போராளியின் கதை கேட்டாயா ?
கார் மேக வண்ணா - இனி
போராடா வருவாயா ?

கார் மேக வண்ணா -
இனிப்போர் ஆட, வருவாயா ?//

இந்த ending தொடர்பு புரியவில்லை?

கருத்துரையிடுக