வியாழன், மே 31, 2012

யாக்கைகள் கொண்டொரு யாகம்.



நெற்றியின் மத்தியில்
நெரிகின்ற புருவங்களுக்கிடையில்
கனன்று எழுந்தது தீ.
காதின் மடல்களில்
ஊர்ந்தன ஓராயிரம் அக்கினி குஞ்சுகள்.

கன்னம் கதப்பில் வெந்தது.

வியர்வைக் குளியலிலும்
அடங்காத வெம்மை.

சுமார் முப்பது இலட்சம் வீரர்கள்,
பெரும் படை எடுப்பு,
கெதிப் பாச்சல்,
ஒரு வீரனையாவது
எதிரியின் எல்லைக்கப்பால் சேர்க்க.



நாளைக்கு என்று சேர்க்கும்
பெரும் சொத்து.

இயற்கை எல்லா உயிர்க்கும்
பிழைப்பு சொன்ன வழி.

இரண்டு உயரமுக்க மண்டலங்களில் இருந்தும்
புயல் வீசியது.
வெள்ளம் பெருக்கெடுத்தது -
ஓராயிரம் ஊற்றுக் கண்களில் இருந்து.
சட்டென்று பெய்தது மழை,
உள்ளே ஓடியது ஒரு மின்னல்.
கன்னங்களில் வெய்யில்.



என் கன்னிமையும் உன் கன்னிமையும்
களவாடிக் கொண்டோம்,
அனால் இது கற்பியல்
களவியல் அன்று.

ஒரு பெரும் பூக்குவியல்,
இரண்டு பூங்குன்று,
இரண்டு கருவண்டுகள்,
ஒரு மரமும் அதன் வேர்க்கான வழிகளும்.
பூக்களைத்தான் பறியுங்கள் என்ற அழைப்பும்.



குரங்கின் கைப் பூமாலை – சீ… சீ…
காட்டுப் பன்றியும் கத்தரிப்பூ தோட்டமும் – சீ… சீ…
இது ஒரு புரட்சி!
அங்கொரு தீண்டலும், இங்கொரு சிணுங்கலும்,
மேதினி எங்குமாய் ரதோற்சவம்,
அடக்கி வைத்ததெல்லாம்
பொறுக்காமல் வெடித்தது.
வெந்து தணிந்தது காடு - இது ஒரு புரட்சி.



முதிரை தாளம் போட்டது,
வாய்கள் மௌத் ஒர்கன்,
மூக்கு ஒத்து ஊதியது,
இன்னும் சில………..
பெயர் தெரியா…….
(வாத்தியங்கள் கருவிகள் )
இச்சை வற்றிவர
ஒரு இன்னிசைக் கச்சேரி.


அந்த தொழிற்ச்சாலையில்
இரண்டு தொழிலார்கள் மாத்திரம்.
ஏற்றுமதி இறக்குமதி.
உயிர்த் தொழிற்சாலை.


உயிர்த் தொழிற்சாலை.
ஏற்றுமதியும் அதுவே
இறக்குமதியும் அதுவே.
இருவரும் ஒரு முதலாளிக்கு
தேர்வு நடத்துகின்றனர்.



நான் என்னை உனக்கு காமிக்க,
நீ உன்னை எனக்கு காமிக்க, – இல்லை
நான் உன்னை உனக்கு காமிக்க,
நீ என்னை எனக்கு காமிக்க, -
இல்லை இரண்டுமாய் – அது காமம்.

13 கருத்துகள்:

சதீஷ் செல்லதுரை சொன்னது…

அழகான ரசம் சொட்டும் கவிதை..அனுபவங்களை சிலாகித்து கொள்ள தூண்டுகிறது.பாராட்டுக்கள்.

எஸ் சக்திவேல் சொன்னது…

காமம் பொங்கி வடியுது. இதைச் share பண்ணினால் பெரிய பிரச்சினையாகிப் போகும் , ஏற்கெனவே சுகந்தியோடை பட்டபாடு போதும்... :-)

எஸ் சக்திவேல் சொன்னது…

யாக்கை என்றால் என்ன? (உண்மையாகத் தெரியவில்லை)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி சதீஸ். வந்தத்துக்கும், வார்த்தைகள் சில தந்ததுக்கும்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

யாக்கை எண்டா உடம்பு, "யாக்கை திரி" ஆயுத எழுத்து பாட்டு கேட்டதில்லை?

ஜேகே சொன்னது…

//சுமார் முப்பது இலட்சம் வீரர்கள்,
பெரும் படை எடுப்பு,
கெதிப் பாச்சல்,
ஒரு வீரனை எதிரியின் எல்லைக்கப்பால் சேர்க்க"

ச்சா ... Saving Private Ryan பற்றி செருகியிருக்க அருமையான வாய்ப்பு .. நழுவ விட்டுவிட்டீர்கள் :(

//ஓராயிரம் ஊற்றுக் கண்களில் இருந்து.
சட்டென்று பெய்தது மழை,//
அய் . வியர்வை .. நானும் என்னமோ ஏதோன்னு ..

//ஒரு மரமும் அதன் வேர்க்கான வழிகளும்.
பூக்களைத்தான் பறியுங்கள் என்ற அழைப்பும்.///

போதாது போதாது .. அதேன் .. அந்தக்கட்டம் வந்தவுடன் மட்டும் அவனும் அவளும் புதருக்கடியில் மறைகிறார்கள் .. அல்லது இல்லாத இரண்டு பூக்கள் முத்தமிடும் காட்சி .. அதான் கட்டம் வந்திட்டல்லோ!

தம்பி .. எனக்கு ஏமாற்றம் .. சோப்பு போட்டுவிட்டு அரைவாசியில் துவாயை துவட்டிக்கொண்டு ஓடுவது .. கவிஞனுக்கு அழகில்லை .. !

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//Saving Private Ryan// எதுக்கும் எதுக்கும் லிங்க் கொடுக்குறீங்க - சாப் இந்த முசலு பழக்கம் போகவே போகாதா ?

//போதாது போதாது .. அதேன் .. அந்தக்கட்டம் வந்தவுடன் மட்டும் அவனும் அவளும் புதருக்கடியில் மறைகிறார்கள் .. அல்லது இல்லாத இரண்டு பூக்கள் முத்தமிடும் காட்சி .. அதான் கட்டம் வந்திட்டல்லோ!// வாய் விட்டு சிரித்தேன் - வழமை வர்ணிப்புகளில் - புதர், குகை எண்டு போகும், இல்லை இல்லை எண்டு சொல்லலாம் - ஆலிலை சிவக்க அங்கமும் துடிக்க - அது பழசு (அதிலும் பழசு இருக்கு) - செரி விடுங்க நம்மளை அப்புறம் ஒரேடியா கூசிளிவு ஆளாக்கிடுவாங்க.

ஜேகே சொன்னது…

அது . கூசிளிவு இல்ல .. கூசிழிவு .... கூசிழிவு என்றாலும் அதிலும் இலக்கண சுத்தம் முக்கியம் :)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

அடடா, ஆச்சர்யக்குறி :p

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//அய் . வியர்வை .. நானும் என்னமோ ஏதோன்னு ..//
ஜேகே கமா முற்றுப்புள்ளி கவனித்து வாசியுங்கள் - நீங்கள் நினைத்த என்னமோ எதோதான். என்னமோ எதோ எண்ணம் வளருது - நல்ல பாடல்.

Mano சொன்னது…

//சுமார் முப்பது இலட்சம் வீரர்கள்,
பெரும் படை எடுப்பு,
கெதிப் பாச்சல்,
ஒரு வீரனை எதிரியின் எல்லைக்கப்பால் சேர்க்க.//
ரசனைக்குரியது...

//எதிரியின் எல்லைக்கப்பால்// எதிரி என்பது சற்று உறுத்தலாக இருக்கிறது..

Mano சொன்னது…

//எதிரியின் எல்லைக்கப்பால்// ஓகோ.. இதுதான் எல்லை தாண்டிய பயங்கரவாதமோ..? :)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

மனோ நல்லகாலம் ஜேகே பாத்தா behind the enemy lines பற்றி இங்கே இழுத்து விட்டிருக்கும். எதிரி என்பதற்கு ஒரு பொருத்தப் பாடு உண்டு. சிலதை நேயர்களின் கற்பனைக்கு விடுவதே நல்லது எண்டு நினைக்குறேன்.

கருத்துரையிடுக