சனி, பிப்ரவரி 25, 2012

சொல்லொணா.....



வாழ்க்கை
என்னை விட்டு
தூரச்செல்வதாக உணர்கிறேன்...
என்னை சுற்றி வெறுமை சூழ்ந்திருந்தது ...
அந்த அறையில் எல்லாப் பொருட்களையும்
தின்று நின்றது வெறுமை!
என்னிலிருந்து ஓரடி தள்ளி
வட்டமாய்
சில பாராட்டுப் பூங்கொத்துக்கள்....
நிஜமலர்களும் காகித மலர்களும்.....
இடையில் இருந்த அந்த ஒற்றை முள்ளை
வெறித்தவாறு நான்.....

--------- --------- ---------
  

என் சந்நிதிக்கு பூக்கள் கொண்டு
வரும் பக்தர்கள் எல்லாம்
கூடவே கோரிக்கைகளும்
கொண்டு வருகிறார்கள்;

என் நுகர்வின்பமே மகிழ்ச்சி
என்று யாரும் பூக்களை அர்சிப்பதில்லை.
'முத்தனாதன்கள்' பரவாயில்லை,
மெய்ப்பொருள்1 ஆகா சாமானியன் நான்.

---------         ---------         ---------    

அக்கரைப் பச்சைகளுக்காய் 
நான் தேர்ந்தெடுத்த பாதைகளெல்லாம்
ஒற்றையடி.
இந்த ஒற்றையடியில்
அவ்வப்போ குறுக்கே கடந்து போகும்
நெடுஞ்சாலைகள்
நடை பாதைகளில்லாமல்.

சந்திக்கு சந்தி
முச்சந்தி முரளிகளும்,
சோக்கல்லோ சண்முகங்களும்;
உலகின் எல்லா சித்தாந்தங்கள் பற்றிய கிண்டல்களுடன் முரளிகளும்
உலகின் எல்லாக் கேள்விகளுக்குமான பதில்களுடன் சண்முகங்களும்.

எனக்கும்,
எப்பவும் எதோ ஒரு வழி சொல்கிறார்கள்,
நான் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும்.

அந்த சந்தியை தாண்டாமல் அவர்கள் அங்கேயே.
நான் மட்டும் நகர்ந்த படி.
முன்னேயோ... பின்னேயோ...
நான் மட்டும் நகர்ந்த படி.


4 கருத்துகள்:

ஜேகே சொன்னது…

தம்பி ரெண்டு தரம் வாசிச்சன் .. விளங்கேல்ல .. விளங்கோனும் எண்டு எழுதியிருந்தா ரெண்டு தரத்தில விளங்கியிருக்கலாம். இல்லாட்டி விளங்கோனும் எண்டு வாசிச்சு இருந்தாலும் விளங்கியிருக்கலாம். ஆனால் எனக்கு இந்த கவிதை விளங்கும் டீ இன்னும் வரேல்ல .. உரை ஏதும் இருக்கா?

நீங்க ஏதோ பீல் பண்ணினாப்ல .. நல்ல காலம் கவிஞராய் நான் இல்லை! கவிதை விளங்கவில்லை என்று பயமில்லாம சொல்லலாம்..

சூப்பர் கவிதை!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நன்றி ஜேகே, முதல்ல உங்களுக்கு நிஜமாயே புரியலையோ என்று நினைத்தேன், //நீங்க ஏதோ பீல் பண்ணினாப்ல// என்று கழிவு இரக்கம் காட்டியதும் கொஞ்சம் சுதாரிச்சன் அப்புறம் //சூப்பர் கவிதை!// என்றவுடன் புரிந்தது உங்களுக்கு புரிந்தது என்று.

ஜேகே சொன்னது…

பாஸ் உண்மையிலேயே புரிய இல்ல .. சீரியஸா!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

இதுக்கு பதில் எழுதப்போய் அது நீண்டு பதிவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். (எங்கயோ கேட்டமாதிரி இருக்கா)

http://athens-valiban.blogspot.com/2012/03/blog-post.html

கருத்துரையிடுக