சனி, நவம்பர் 19, 2011

மனிசப் பூ மாலையிட்டா மரியாதை ஆகாது !


சோலை, குயில், காதல், சொன்ன கதை அத்தனையும்
மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே 
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டு கொண்டேன்
ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும் ,
வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க 
யாதனுஞ் சற்றே இடமிருந்தாக் கூறீரோ ? - குயில்ப் பாட்டு: பாரதி

புரியாமல்ப் போனாலும் - என்னெழுத்து 
புரிந்து கொண்டார் கோமகனார் 
பெரியண்ணா
எந்தன் 
உருவாகி 
அறிவாகி 
திருவாகி
நின்ற நீர் 
கருவான கதை எண்டறிந்தும்,
பவிசேதும் பாராது,
பாராட்டி சீராட்டி 
என் கனவுக்கு கிட்டே 
கை பிடிச்சு வந்த கணம்
யுகம் யுகமாய் இருவருமே சேர்ந்து பிறந்த கதை சொன்னதுவே,

சொன்ன கதை சிலதிருக்க 
தலையை சொறிந்தபடி 
புனகையில் கண்ட கண்கள் 
சொல்லாத கதைகளெல்லாம் 
சொல்லிப் போன சுகமிருக்கே - நாளை
என் 'பள்ளி'ப் பாடத்தில் 
படிப்பேனா தெரியலையே.

ஆட்டுக் கல்லினிலே 
அம்மாவாய் இருந்தபடி 
பீட்ரூட் தீத்தினது நினைவிருக்கும்.
பேசாம பீற்றூடே திண்டபடி இருந்திருக்கலாம் 

இளந் தேங்காய்ப் பூ,
இறுகப் பிடித்த புட்டு 
உள்ளிருக்கும் 
கள்ளிருக்கும் பீட்ரூட் துண்டு;
திருவலையில் இருந்தபடி 
வாய் திறந்திருந்த எனக்குள்ளே
மன அறையில் ஒரு ஆசையுண்டு,
அந்த ஆட்டுக்கல்லேறும் தகுதி 
எனக்குத் கடைந்தேறுமா எண்டு.

இந்த சிட்டுக்குருவி பறக்க
வானமாய் வந்தீர் 
வானமளக்கும் ஆசை 
வந்ததென்ன குருவி தப்பா ?


இது ஆசை + மோகம் = மடம் என்ற கதை தொட்டு அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் , அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன் என்று பிரிந்து நின்று முரண்டது வரைக்கும் தொட்டு, துழாவி (ஜே.கே. இன் "கடவுள்கள் துயிலும் தேசம்", "காதலிகள்", "எழாம் அறிவுடை நம்பிகள்" மேலும் சில ) திளைத்தபிறகு , என் அண்ணா ஒரு பெரிய sms அனுப்பி 2hrs video call கதைச்ச பிறகு, பழைய நினைவுகளில் அந்தரித்த போது எழுதியது. இந்தியன் ஆமி பிரச்சனைக்  காலத்தில் சில காலம் பீட்ரூட் மட்டுமே புட்டோடு சாப்பிட காலத்தை, இந்த சிட்டுக்குருவிக்கு போதி மரமாய் வந்து நிண்ட பெரு வெளியை, அதில் நான் கண்ட வெயில், மழை, வானவில் என்பவற்றை நினைவுகளில் அந்தரித்த அவைஸ்தையில் அவதரித்தது இந்தக் கவிதை. வானவில்லில் பச்சை நிறமாக வந்ததிந்த குயில் பாட்டு. 


இந்த நல்ல தருணம் அமைய வழிகோலிய ஜேகே அண்ணைக்கு 90 நாட்களை தாண்டிக் காதலிக்கும் மைதிலி அக்கா(க்கள்) அமைய நல்லூரானே காப்பு. 
இந்தப் போர், ஜேகே மாதிரியான திறமையான ஆளுமைகளை எங்கள் செம்மண் புழுதியிருந்து கடத்தி சென்று மெல்போர்ன் குளிருக்குள் விறைக்க விட்ட விதியை அண்ணா நிறையவே நொந்து கொண்டார். 


அண்ணாக்கள் எனக்கு சொன்ன கதைகளிளிருந்தே என் கனவுகள் வந்திருக்கு...
உங்களுக்கு எப்படி ?

2 கருத்துகள்:

ஜேகே சொன்னது…

தலைவரே ..
அண்ணாவும், பிரஷாந்தன் அண்ணாவும், ஜெயநிதி அண்ணாவும் நல்லை ஆதினத்தில் முதன் முதலில் அறிமுகமான பட்டிமண்டபத்தை இடப்பற்றாக்குறையால் வெளியில் நின்று பார்த்தவன். இடை நடுவில் மின்சாரம் போய் விட, செல்வவடிவேல் ஆசிரியர் மைக் இல்லாமல் ஜோக் அடித்தார்! அண்ணாவை கேட்டு பாருங்கள்!!

கவிதையில் சிவசங்கர் அண்ணா, ஜெயசீலன் அண்ணா போன்றவர்கள் ஒரு தலைமுறை மாற்றத்துக்கு அடிகொலினர். பிரஷாந்தன் அண்ணா ஆரம்பத்தில் கவிதை துறைக்கு வந்திருக்கவில்லை. அவர்களின் கவியரங்கங்கள் பார்த்த பின் கவிதை எழுதலாம் என்று இருந்த கொஞ்ச நஞ்ச சிந்தனையும் தொலைந்து போனது. உங்கள் கவிதையை பார்த்து விட்டு .. இனி ஆணியே புடுங்குவதில்லை என்று தீர்மானித்துவிட்டேன்..!!!

"அந்த ஆட்டுக்கல்லேறும் தகுதி " அதை காலம் தீர்மானிக்கும் .. எம் கடன் பணி செய்து கிடப்பதே.. தகும் என்றால் ஏற்றுவார்கள்!! தகாதேனில் அதே கல்லை மண்டையில் போடுவார்கள்!! இப்போதைக்கு ஏர்போர்டில் போடாதவரைக்கும் எனக்கு ஓகே!!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நான் அந்த பட்டிமண்டபத்தை உள்ளே நெருக்கிக் கொண்டு பார்த்தேன். அண்ணா கவிதையில் தான் நீண்டகாலமாக தங்கி இருந்தார், கொஞ்சம் கழித்தே பேசத் தொடங்கினார்.

ஹாஹா //உங்கள் கவிதையை பார்த்து விட்டு .. இனி ஆணியே புடுங்குவதில்லை என்று தீர்மானித்துவிட்டேன்..!!! // But, உங்கட காமெடி எனக்கு பிடிச்சிருக்கு.

கருத்துரையிடுக