செவ்வாய், நவம்பர் 15, 2011

அழகான தீவுக் காரர்கள்ஒரு அழகான தீவுக் காரர்கள் நாங்கள்
வாழ்க்கை எங்களுக்கு என்றும் வண்ண மயமானதே 
ரத்தமும் சதையுமாக எங்களை சுற்றி சாவு மலிந்த போதும்
துக்கத்தையும் கொண்டாடும் வழமை எங்களது
எங்களை பிச்சு எந்த மலையில் போட்டாலும் 
கடலை தேடி ஓடும் நதிகள் நாங்கள் 
வாழ்க்கை எங்களுக்கு என்றும் வண்ண மயமானதே 

எவளவு அடித்தாலும் குனியத் தெரியாது
எங்கள் முதுகேலும்புகளுக்கு....

கூடி வாழ்வது என்பது எங்கள் வாழுவியல்
மொழி எங்களுக்கு முன்னுரிமை...

எதற்கு எடுத்தாலும் நாலு பேர் தேவை எங்களுக்கு ...
வம்பளக்க , தோசை மா நல்ல வந்தா பரிமாற,
கம்பெடுத்து பாம்படிக்க , கதை பேச,
காற்றின் சாளரங்களுக்கு பட்டம் கொண்டு சீலை செய்ய 
பொங்கல் வைக்க , பொம்மை கொண்டு விளையாட ,
சம்பல் அரைத்து , அவித்த வெண் -புட்டு தேங்காப்பூ பங்கு போட 
எதற்கு எடுத்தாலும் நாலு பேர் தேவை எங்களுக்கு ...
கூடி வாழ்வது என்பது எங்கள் வாழுவியல்

நண்பர்களே ,
உயர உயரப் பறந்தாலும் இது ஊர்க்குரருவியே ,
இதான் வால் வண்ணார்பண்ணை நோக்கியே நீளும்
கைச் சிறகுகள் கைத்தடியை நோக்கியே விரியும் ...
கொன்கிரீட் காடுகளின் உயர்ந்த மரத்தின் முப்பதாவது மாடியில்
நாளை இந்தக் குருவியை யாரும் விருந்துக்கு அழைக்கலாம் 
ஆனால் இது பனைமரக் காடுக்குள் ஒரு நாவல் மரத்தில் கூடு கட்டவே ஆசைப்படுகிறது ....
எல்லாம் இருந்தும் ஏதோ இல்லாத உணர்வு ,
எல்லாம் இல்லாத போது ஏதோ இருந்ததாக நினைவூட்டுகிறது ...
அந்த 'எதோவை' நினைவு படுத்திய இந்த ஒன்று கூடலுக்கும்
அவ்வப்போ ஆறுதல் கரம் நீட்டும் நட்ப்புக்கும் 
ஊருக்கு வந்தா ஒடியல் கூழும் கருவாட்டுப் பொரியலும் செஞ்சு தாறன்...

பெரு மூச்சுடன் ...

7 கருத்துகள்:

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி சொன்னது…

எல்லாம் இருந்தும் ஏதோ இல்லாத உணர்வு .....மனதை குளிரவைத்த வரிகள்...

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி சொன்னது…

எல்லாம் இருந்தும் ஏதோ இல்லாத உணர்வு .....மனதை குளிரவைத்த வரிகள்...

ஏ.ஏ.வா சொன்னது…

வந்ததுக்கும் ரசித்ததுக்கும் நன்றி , தமிழ்ப் பைங்கிளி: நல்ல பெயர், தென்காசியோடு ஒத்திசைக்கிறது.

சாதாரணன் சொன்னது…

//எல்லாம் இருந்தும் ஏதோ இல்லாத உணர்வு ,
எல்லாம் இல்லாத போது ஏதோ இருந்ததாக நினைவூட்டுகிறது//

கடல்தாண்டிய எல்லா ஊர்க் குருவிக்கும்
எல்லை தாண்டி வரும் இச் சோகம்!

ஏ.ஏ.வாலிபன் சொன்னது…

சாதாரணன் வந்ததுக்கும் தந்ததுக்கும் நன்றி, உண்மைதான் கடல் தாண்டிய எல்லாக் குருவிகளுக்கும் இந்த கவலை உண்டுதான். எப்ப சேர்ந்தாலும் நானும் என் கூட்டக் குருவிகளும் ஊர் ஆலமரத்தை பற்றித்தான் பேசுவம்.

தமிழ் பிரியன் சொன்னது…

எவளவு அடித்தாலும் குனியத் தெரியாது
எங்கள் முதுகேலும்புகளுக்கு.... nice

ஏ.ஏ.வாலிபன் சொன்னது…

நன்றி பிரியன் , வந்ததுக்கும் சொன்னதுக்கும்.

கருத்துரையிடுக