வெள்ளி, நவம்பர் 18, 2011

எனக்கும் அரசியல் தெரியும் ? - 7ம் அறிவு இருக்கு ?

எழாம் அறிவுடை நம்பி  எனும் ஜேகே இன் பதிவும், இன்ன பிற எழாம் அறிவு படம் உருவாக்கிய சர்ச்சைகளின் விளைவுக் குழப்பத்தில் நான் பதிந்தது

எழாம் அறிவுடை நம்பி என்னுள், அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் , அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன் எண்டு இரண்டு துருவங்களை, உண்டு பண்ணி, ஒரு பெரிய பட்டி மண்டபம் நடந்து கொண்டிருக்கு - ஏலவே இங்கு (blog மற்றும் FB இல்) நடப்பதையும் தாண்டி, நடுவர் தீர்ப்பு சொன்னால் - ஒரு முடிவான கருத்தை நேரம் பொறுப்பது பொறுத்து பதியுறன். 
நானே எனக்குள் சில தெளிவு கொள்ளாததால் - என் உணர்வுகளை ஆட்கொள்ளும் சுழல்களை முடிந்த வரை பகிர்கிறேன் - இது கொஞ்சம் சிக்கல் - இடியப்பதிலிரிந்து சிக்கல் எடுக்குற மாதிரி - will c. 

பொதுவா இந்த மாதிரி கதைகளும் கவிதைகளும் இன்னொமொரு கோணத்தை வாசகனுக்கு அடையாளப்படுத்துகின்றன, தவிர முடிவு என்று பரிந்துரைப்பதில்லை - அது அதன் நோக்கமல்ல. முடிவு வாசகனின் உள்வாங்கல் மற்றும் அனுபவம் + கொள்ளளவு பொறுத்தது. ((என்) பதிவுகளை எப்படி வாசிக்க வேணும் எண்டு இங்க ஒரு கவிதை சொல்லி இருக்குறன்.)

நிற்க, எழாம் அறிவு ஒரு விடியலை பெற்றுத்தரும் எண்டோ; சினிமா நடிகர்களின் நடிப்புக்கும், மேடை நடிகர்களின் நடிப்புக்கும் உணர்விழக்கும் கூட்டம் (உணர்ச்சி வசப்படல் என்பது வேறு வகை) எங்கள் 'நாளையை' வடிவமைக்கும் எண்டோ நான் நினைக்கவில்லை. ஆயினும் பெரும்பான்மை ஆகி நிற்கும் அந்த தமிழ் பேசும் (எழுதும் வாசிக்குமா எண்டு தெரியேல்லை) நல்லுலகம் (?) 'நாளையை' - இன்றைய ஜனநாயகத்தில் தீர்மானிக்கிறது என்பதே நிஜம். தமிழ்நாட்டின் அரசியல் 'நாளை' - தமிழினது நாளையிலும், ஈழதமிழர் நாளையிலும் ஒரு முக்கிய செல்வாக்கு காரணி எண்டு நான் நினைக்குறன்.

ஒரு entertainer + உணர்வாளன் தன் எல்லைகளுக்குள், தன் கொள்ளளவுக்குள், தன் உணர்வை பதிந்திருக்குறான் எண்டே நான் எழாம் அறிவை பார்க்கிறேன்.

வாழ்வு முழுவதையும் அறிவு கொண்டு வாழ்ந்திடலாமா - முடியுமா ? + தேவையா ?, உணர்வாதல் பிழையா - என் சுழல்கள்.

என் நண்பன் ஒருவன் சொல்வது மாதிரி, போர் முனைகளில் புத்தனையும் காந்தியையும் தேடுதல் செரியா, போரை புத்தத்தையும் காந்தியத்தையும் கொண்டு ஆராய்தல் முறையா - என் சுழல்கள்.

களத்திற்கு தேவையான போது, கத்தி செய்து குடுக்காத நான், கத்தி எடுத்து களம் போகாத நான், கத்தி ஊரைக் கூட்டாத நான், கடமையே கண்ணா படிச்சுக் கொண்டிருந்த நான், கெட்ட பின் சூரிய நமஸ்காரமா, சந்திரனுக்கு அபிசேகமா, ஜடாயுவுக்கு அருச்சனையா எண்டு ஆராயலாமா தெரியேல்லை. 


நானும் சம்பந்தப்பட்ட ஒரு பெரும் தவறில் நியாயம் சொல்ல எனக்கு அருகதை இல்லை எண்டே நம்புகிறேன். என்னுடைய நியமங்கள் எனக்கு மட்டும், உங்களையும் அந்த வட்டத்துக்குள் வாருங்கள் எண்டு அழைக்க என் வட்டம் பற்றி எனக்குள் ஒரு தெளிவு இன்னமும் வரவில்லை.

என் அறிவும் தர்க்கமும் கொண்டு என்னால் ராமனுக்கு சூர்பனைகயை கூட கட்டி வைச்சிட முடியும். அதனால் 'இறந்த'-காலத்தை ஒரு மௌன சாட்சியாக பார்த்தபடி, தொலைந்து போன நித்திரையில், அடிக்கிற மாதிரி துடிக்கிற இதயத்தில், பனிக்கிற கண்களால், கனவொன்றை கட்டி வைச்சிருக்குறன், தவிர்க்க முடியாமல் அதன் நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள். அந்த கனவு நனாவாக்க 'நாமார்க்கும் குடியல்லோம்' எண்ட என் கிழவனின் உரப்புக்காய் வேண்டுகிறேன். 

இது ஒரு வாக்கு மூலம், யாரையும் எடை பார்க்கும் எண்ணமோ, கொள்கைப் பிரச்சாரமோ கிடையாது. எழுதுவதும் வாசிப்பதும், கூட உணர்ச்சி வசப்படுதலும் எண்டுதோடு நிண்டுவிடுகிறேன் (இந்தக் கதையில் வாற குமரன் மாதிரி) எண்ட என் நண்பன் கோபியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடச்ச பிறகு நானும் இதுதான் எண்டு ஒண்டை இது பற்றி சொல்லுவன் - அதுவரை கனவுகளும் அதை நனவாக்கும் கனவுகளும் நானும்....

4 கருத்துகள்:

ஜேகே சொன்னது…

அட நான் கூட ஒரு பதிவு போட்டேன் .. நீங்களுமா .. Same Blood boss!!

மூன்று நிமிடங்களுக்கு மேல் எடுத்து கொண்டதால், வாதங்களையும் தொகுப்புரையையும் நிறைவு செய்யலாம் என் நினைக்கிறேன்!!!

சொன்னாப்ல நாங்களும் ஏர்போர்ட் தாண்ட வேண்டும் தானே ;)

http://orupadalayinkathai.blogspot.com/2011/11/will-c.html

ஏ.எ.வாலிபன் சொன்னது…

என்னுடைய referensukku இதை பந்திந்தேன். மற்றபடி எங்களுக்கு வேறேதும் புதுசா சொல்ல இல்லைத்தான். இந்த அளவளாவல் ஒரு இன்பம் - உண்ண உண்ண தெவிட்டாத தெள்ளமுது. கடந்த வாரத்திற்கு இனிமை சேர்த்த உங்களுக்கு என்ட சந்தோசங்கள்.

பெயரில்லா சொன்னது…

"ஒரு entertainer + உணர்வாளன் தன் எல்லைகளுக்குள், தன் கொள்ளளவுக்குள், தன் உணர்வை பதிந்திருக்குறான் எண்டே நான் எழாம் அறிவை பார்க்கிறேன்."

செயல்கள் பிழைத்திடினும் நோக்கம் சரியானால் அது பாராட்டப்படவேண்டியதே..

Think Why Not சொன்னது…

/*.. சொன்னாப்ல நாங்களும் ஏர்போர்ட் தாண்ட வேண்டும் தானே ;) ..*/

/*... அதனால் 'இறந்த'-காலத்தை ஒரு மௌன சாட்சியாக பார்த்தபடி, தொலைந்து போன நித்திரையில், அடிக்கிற மாதிரி துடிக்கிற இதயத்தில், பனிக்கிற கண்களால், கனவொன்றை கட்டி வைச்சிருக்குறன்..*/

பலரின் நிலை இதுதான்....

குற்ற உணர்ச்சிகள் அவ்வப்போது குத்தி கிழித்தபடி இருந்தாலும், வெறும் உணர்ச்சி வசப்படுதலோடு இருதலைக்கொள்ளி எறும்பாய் மௌனித்து விடுகிறது எல்லாம் கடைசியில்....

கருத்துரையிடுக