வியாழன், ஏப்ரல் 19, 2012

காதலிக்க நேரமில்லை. II கம்பஸ்

முந்தய பாகம்.
கடைசியாக
காதலிக்கலாம் என்று
தீர்மானித்தேன் !

அதற்காக
இவ்வளவுநாளும் காதல் வேண்டம் என்று
தவம் கொண்டிருக்கவில்லை.

இனி காதலை தேடி அலைந்தாவது
கைப்பற்ற தீர்மானித்தேன்.


இங்கு எல்லாமே புதிதாக இருந்தது,
புதிராகவும்....
எதுவும் செய்யக்கூடாது என்றார்கள்
நீயாச் செய்யோணும் எண்டார்கள்.
நாங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளவும் செய்தார்கள்.
நாங்கள் சொல்வதாலேயே மறுக்கவும் செய்தார்கள்.

இங்கு எல்லாமே புதிதாக இருந்தது,
புதிராகவும்....


கொஞ்சம் ஆசை
கொஞ்சம் அன்பு
கொஞ்சம் குறும்பு
கொஞ்சம் கண்டிப்புடன் சில அக்காமார்
அத்தோடு லிமிட் தெரிந்து நெருங்கும் சிங்கள நண்பிகள்
மற்றும் நண்பிகள்.

நான் தெரியும் வரைக்கும்
அதிகம் நனையாமல் இருந்தேன்.
தேன் சுவை அறியாக் கரண்டி.....


நான் தெரியும் வரைக்கும்
அதிகம் நனையாமல் இருந்தேன்.
நீங்கள் தான் "உதயா அண்ணாவா?" என்று ஒரு குயில் கூவும் வரை.

அந்தக் கடற்கரையில்
எந்த சுனாமியும்
அண்மையில் வந்ததை தெரியவில்லை.

அடிக்கடி முரண்பட்ட கல்யாணிக்கும்
இவளுக்கும்
அதிகம் வித்தியாசம் இருந்தது.



இவள் அழகு என்று சொல்லமுடியாது
அவளைப் போல்
இவள் அழகு என்று சொல்லமுடியாது
அனாலும் இவளிடம் ஒரு attraction இருந்தது.

இவளும் முரண்பட்டாள்,
அனால் எப்போதும் அல்ல.
ஏற்றும் கொண்டாள்.
சில சமயம் இதுவுமன்றி அதுவுமன்றி.

புரியவில்லை என்றாள்,
புரிந்து கொள்ள முயற்சிசெய்தாள்.
புரியவைத்தாள்.

ஆத்தாளை
அந்த அபிராமவல்லியை
அங்கமெல்லாம் பூத்தாளை,
என் புவி அடங்கக் காத்தாளை,
அங்குச பாசங்குசம் கரும்பும் அங்கை சேர்த்தாளை,
முக்கண்ணியை - முக்கனியை
தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையோ ?

எனக்கு
இந்த தேவாரத்தையும்
அபிராமவல்லியையும் பிடித்துப் போயிற்று.

அவலை பார்க்கிற போது
நினைக்கிற போது எனக்குள் ஒரு பாடல்.
அப்போ அச்சர சுத்தமாய் ஒலித்தாலும்
பிறகு இருந்து வார்த்தை தேடியும் கிடைக்க வில்லை.

ஓரிரு ஏகாந்த வேளையில்
எங்கள் வீட்டு தலை வாசலில் தொங்கும் சிப்பி சோகிகளை
அசைத்து தென்றல் என்னை அழைத்து செல்லும்.
மூடில் இருந்தால்
அந்த தென்னை மரத்துக் குயில்
அந்தப் பாடலைப் பாடும் போது
எடுத்த குறிப்புகளை ஒன்று திரட்டி வைத்திருந்தேன்.



டிரேனிங்கோடு அதுவும் காணமல் போனது.
Training இக்கு பிறகு
கலைவிழா தமிழருவிப் புத்தகத்தில்
"சிலுவைக்கு செய்வோம் சங்காபிடேகம் "
என்ற கவிதையை அபிராம்சன் என்பவன் அல்லது என்பவள் எழுதியிருந்தான்/ள்.
எனக்கு யாரென்று அறியும் ஆர்வம் நேரத்தோடு வற்றிற்று.
தேவையுமில்லை என்றாகியது.
பிறிதொருநாள் கண்டீனில் கண்டுகொண்டேன்.


எழுதியது: செப்டெம்பர் 2005
இனி வேலை....

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

>பெயர் சொல்லிய வம்பில் மாட்டுவானேன். எனக்கும் இழந்த காதல் அனுபவம் உண்டு :-)
அடுத்த இனிங்சில் ....

ஜேகே சொன்னது…

அண்ணே சூடு பிடிக்குது .. கருமம் பிடிச்ச கவுஜய விடுங்க .. உங்க கதை சூப்பர் தல! இன்னும் கொஞ்சம் டீடெயிலிங் இருந்தா நாங்களும் நெருக்கமா பயணிப்போம்ல ;)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

டீடெய்லிங்க் இருந்தா கதையாகிப் போயிருக்குமே, ஏற்கனவே நண்பர்கள் கொலை மிரட்டல் வரை போயிட்டர்கள், உண்மை தகிப்பதால் ;). என் நோக்கம் வேறு அது புரியக் (வைக்க) கொஞ்சம் கடினம் - நான் அதை இதில் வெளிப்பட்டு பேசலை.

ஆனா டீடெய்லிங்க் சுவையைக் கூட்டி இருக்கும் - மறுப்பில்லை. வெறும் காதல் கதையாகிப் போயிருக்கும்.

எஸ் சக்திவேல் சொன்னது…

வெறும் கதையாக்காமல் பின்நவீனத்துவம் எல்லாம் கலந்து ஒரு கலக்கல் கலக்குவதுதானே?

ஜேகே சொன்னது…

தம்பி .. எழுத்தில் எப்போதுமே உண்மை இருக்கவேண்டும். என்னை கேட்டால் நீங்கள் பெயர் ஊர் கூட மாற்றாமல் பக்கா டீடைலாக எழுதினால் தான் அது இலக்கியம். கதையா கவிதையா என்பது முக்கியம் இல்லை தல... விடுப்பு தான் எங்கட நோக்கம்!

BTW ... புதுக்கவிதையில் நாவல் எழுதினால் அதை எப்படி அழைப்பார்கள்?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

'பின்'நவீனத்துவம் 'நெயில்' நவீனத்துவம் எல்லாம் அதிகம் அண்ணை.... நாம சும்மா ஒருக்கா சொறிஞ்ச மட்டர் இது.

ஜேகே இதை கவிதை என்று சொல்ல முடியாது, அனா இது வெறுமே காதல் என்று ஒரு உணர்வு சுற்றி எழும் கதையாகக் நான் கருதவில்லை - அப்படிக் கருதி நான் எழுதவில்லை.

நானும் நான் பார்த்த பலரும் காதலை காரணம் காட்டி படிப்பிலிருந்து ஓடி இருக்குறார்கள், அல்லது படிப்பைக் காரணம் காட்டி காதலில் இருந்து ஓடி இருக்குறார்கள்.

எங்களுக்கு அறிமுகப்படுத்திய வெற்றிகள் எல்லாமே பொய்மான் - சீதையை தனி இருத்தி மானைத் துரத்தவும், வீழ்த்திய பின் துரத்திய மான் பொய் என்று முடிவு கட்டி கைவிட்டுப்போன சீதைக்கான புலம்பலுமாய் என் இன்றைய நண்பர் குழாத்தை கண்டு, இற்றைக்கு பல வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு குழப்பத்தை பகிர்கிறேன்.

டீடெயில் பண்ணாததர்க்கு காரணம் அந்தளவுக்கு இந்தக் கதை நாயகன் காதலுக்குள் பூரவில்லை - அந்த துணிச்சல் இல்லாத ரிஸ்க் எடுக்காத பயல். அல்லது காதலை வேறு எதுக்கேல்லாமோ (கரட் / பொன்மான்) உதாசீனப்படுத்திய பெம்மான். இன்னொரு வகையில் நான் ஒரு சோம்பேறி - தீவிர எழுத்தாளன் இல்லை. இறங்கி ஆழ எழுதும் திறனும் சக்தியும் பொறுமையும் இல்லாப் பெருந்தகை தலைவ. என் புளோக்கில் நிறைய தொடர்கள் எடுத்த எடுப்பில் நிறு போயிருக்கும்.

காதல் ஈர்ப்பில் இருந்தே பரிணமிக்கிறது, எடுத்த எடுப்பில் காதல் வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை - ஈர்ப்பை பத்திரமாய் காதலாக்கி கல்யாணம் செய்து ஒரு வெற்றி இல்லறம் காண நிறைய உரப்பும் திறனும் தேவை - இந்த வாழும் கலையை உட்கார்த்தி சொல்லித்தர வழி சமைக்காத சமூகம் ஆகிவிட்டோம் இல்லையா.

பெயரில்லா சொன்னது…

சுத்தம் :(

இலங்கைத்தமிழன் சொன்னது…

இப்ப latest இழந்த காதல் தான் top trending போல..? விஷயம் பத்தாது

பெயரில்லா சொன்னது…

ராசா உனக்கு கவிதை சரிப்பட்டு வராது விடு

செழியன் சொன்னது…

அட்டகாசமாக தொடங்கி கடைசியில இதயம் முரளி மாதிரி காதலை சொல்லாமலே கோட்டை விட்டுட்டீங்களே!!!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

:)

கருத்துரையிடுக