"நான் கவிதை எழுதி நிறைய நாளாயிட்டுது" எண்டு கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். இன்னமும் நான் ஏதும் அண்மையில் கவிதையாய் எழுதவில்லை. இது ஒரு பழங்கவிதை. எழுதி பல வருடங்கள் இருக்கும்.
இன்னமும் நான் எழுதியதில் முழுமையான கவிதை என்று நம்பும் ஒரு சிலவில் இது ஒன்று.
எனக்கு கவிதை என்பது
பிள்ளையார் பிடிக்கிற மாதிரி
பிள்ளையார் தவிர வேறு
எல்லார் மாதிரியும் வரும்
நான் எதை பிடிக்க முயன்றேன்
என்பதை சொல்லாத வரை
எல்லாம் கவிதை என்று
நம்ப சிலர் இருக்குறீர்கள் என்ற நபிக்கையுடன்.
இது ஒரு போராளியின் காதல் கதை!
நல்லை ஊருத் திருவிழாவில்,
தொல்லை தீர்க்கும் கந்தன் தேரில்,
உன்னை (அவளை) என்னை கூட்டி வைச்ச கூட்டம்;
என்னை சுட்ட பின்னும் நிக்காத கட்டம்.
நல்லை நகர் மண்ணு மேலே,
நான் உருண்டு போகையிலே,
சுத்தும் பூமி கொஞ்ச நேரம் நிக்கும் - மனசு
முத்தும் வேலு மட்டும் நிக்கும்.
அடி மேல அடிவைச்சு,
அடி அழிச்சு போகையிலே,
அழிச்சது அடி என்றா நினைச்சே - எந்தன்
ஆறடி உருவத்தையே கலைச்சே.
சுண்ணாம்பு சுவர் மேல சுகமாக சாஞ்சபடி,
சினேகிதர்கள் சூழ்ந்திருக்க சிங்கம் நான் காத்திருக்க,
சிங்காரி வந்தாளே முன்னே - அட
சிரிப்பிலே கொன்றாளே என்னை.
மாமனோட கலியாணம்,
ஆசையோட ஆரவாரம்,
ஆசையோட அணைச்சுக்கிட்டா உன்னை (அவளை) - என்னை
ஐயிரண்டு மாசம் சுமந்த அன்னை.
துப்பாக்கிகள் பூப் பூப்பதில்லைதான்.
பூப் பூத்திருந்தவன் துப்பாக்கி தூக்கினேன்.
இது ஒரு போராளியின் கதை!
இது ஒரு காதல் கதை!
காளை மாடு கன்னுக்குட்டி
கட்டி வைத்த தொழுவம் தட்டி
கைவிட்டுப் போனோமே சும்மா - அது
கண்ணுக்குள்ள நிக்குதடி யம்மா.
புத்தகம் பிடிச்ச கைகள் துப்பாக்கி தூக்கியது,
களனி மிதிச்ச கால்கள் காடுமேடு ஓடியது.
வெள்ளை உடுப்பெல்லாம் வரிவரியாய் மாறியது.
வெள்ளை உள்ளத்தில் பழி முள்ளாய் உறுத்தியது.
ஓடி ஓடி அடிச்சுப் பார்த்து,
பறந்து பறந்து பேசிப் பார்த்து,
ஆடி ஆடி வந்ததிந்த நிலைமை - அதிலே
பலருக்கும் இருக்கும் கவலை.
ஈழத்திலே இன்று சண்டை ஓய்ஞ்சிடிச்சு,
ஈன்று பெற்ற தாயின் வலியிருக்கு,
இருந்த போதும் பாறை மனசுக்குள்ளே,
இருந்த தேரை நினைவு கிளறியது.
தேரை நினைவு தொடரும்......
6 கருத்துகள்:
பரவாயில்லை கவிதை நல்லாவே இருக்கு..! அது சரி..நல்லூர் கோயில்ல இப்பிடி கமலினி முகர்ஜி மாதிரி வடிவான ஒரு பெண்ணை நான் இதுவரைக்கும் காணேல்லையே... :(
கடைசி படம் மூண்டும் சூப்பர் கலக்கல் மச்சி. கவிதை நன்றாக இருக்கு.
வாலிபன் .. முதலாம் .. இரண்டாம் தளம் கூட விளங்குது .. ஆனா மூன்றாவதா ஏதோ உருவகம் இருக்குது போல .. விளங்கேல்ல..
//இருந்த போதும் பாறை மனசுக்குள்ளே,
இருந்த தேரை நினைவு கிளறியது.//
எனக்கு இடிக்குது .. உங்களுக்குமா .. நான் தனியன் இல்லையா ... தனியனாய் இருந்தால் தான் எழுதலாம் .. உங்கள் நீங்கள் வடக்கு வீதி என்றால் .. நான் கிழக்கு வாசல் :(
மிக்க நன்றி முன்பனிக்காலம், வந்ததோடு நில்லாது உங்கள் அபிப்பிராயத்தை பகிர்ந்ததுக்கும்.
நன்றி கோபி, "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டன்" என்பதை கவிதைக்கு தலைப்பா போடலாம் எண்டு கூட யோசிச்சன்...
உருவகம் எல்லாம் இல்லை ஜேகே, நீங்களா ஏதாவது ஓணானை பிடிச்சு என்மேல விடாதேங்கோ.
கவிதைக்கு பொய் அழகு, கவிஞருக்கும், கலைஞருக்கும் அதே - அட அரசியல் இல்லப்பா.....
கருத்துரையிடுக