உயில் - எழுத மறந்தது எனும் ஒரு அல்பத்தினை நானும் எனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து உருவாக்கி இருந்தோம். அதில் இடம்பெற்ற ஒரு பாடல் இது. தயாபரன் மற்றும் தீபனது இசையாக்கத்தில் கிரிசாந்த் பாடியபாடல். அன்றைய நிலைமையில் sound-engineering அறிவும் budget உம் கட்டுபடி ஆகாததால் மெருகில் குறை பொறுக்க. முன்னே காட்ச்சியை விரிக்கும் குரல் ரமணன் அண்ணாவினது.
முன்னே வந்தென்னை காட்டச் சொன்னாள்
கை பார்த்ததும் அவள் வளை பார்த்ததும்
வளை கழன்றோட முன்னே கை சேர்க்கச் சொன்னாள்
இடை பார்த்ததும் அவள் மேல் பார்த்ததும்
கை இழுத்து போர்த்த சேலை விலக்கச் சொன்னாள்
மார் பார்த்ததும் அவள் பார் பார்த்ததும்
நான் மார் பார்த்ததும் அவள் பார் பார்த்ததும்
சேலை கரையிழுத்தென்னை விலக்கச் சொன்னாள்
கண் பார்த்ததும் அவள் தாள் பார்த்ததும்
விரல் எழுதிய சித்திரத்தில் காதல் சொன்னாள்
தாள் பார்த்ததும் அவள் தோள் பார்த்ததும்
தன்னை இழுத்து அணைத்து பொருதச் சொன்னாள்
விண் பார்த்ததும் அவள் கண் பார்த்ததும்
விண்ணை விட்டு தன்னைப் பார்க்கச் சொன்னாள்
கண் பார்த்ததும் அவள் கண் பார்த்ததும்
நான் கண் பார்த்ததும் அவள் கண் பார்த்ததும்
வார்த்தை இல்லாதொரு பாடல் சொன்னாள்
இமை பார்த்ததும் அவள் இரவி பார்த்ததும்
வில்லை வளைத்து நாண் ஏற்றச் சொன்னாள்
இ . த.
இதை விட ரசனையான ஒரு பாடல் பற்றிய வேறு பதிவு: மாணிக்கவாசகர், ஆண்டாள் மற்றும் குணா
கை இழுத்து போர்த்த சேலை விலக்கச் சொன்னாள்
மார் பார்த்ததும் அவள் பார் பார்த்ததும்
நான் மார் பார்த்ததும் அவள் பார் பார்த்ததும்
சேலை கரையிழுத்தென்னை விலக்கச் சொன்னாள்
கண் பார்த்ததும் அவள் தாள் பார்த்ததும்
விரல் எழுதிய சித்திரத்தில் காதல் சொன்னாள்
தாள் பார்த்ததும் அவள் தோள் பார்த்ததும்
தன்னை இழுத்து அணைத்து பொருதச் சொன்னாள்
விண் பார்த்ததும் அவள் கண் பார்த்ததும்
விண்ணை விட்டு தன்னைப் பார்க்கச் சொன்னாள்
கண் பார்த்ததும் அவள் கண் பார்த்ததும்
நான் கண் பார்த்ததும் அவள் கண் பார்த்ததும்
வார்த்தை இல்லாதொரு பாடல் சொன்னாள்
இமை பார்த்ததும் அவள் இரவி பார்த்ததும்
வில்லை வளைத்து நாண் ஏற்றச் சொன்னாள்
இ . த.
இதை விட ரசனையான ஒரு பாடல் பற்றிய வேறு பதிவு: மாணிக்கவாசகர், ஆண்டாள் மற்றும் குணா
15 கருத்துகள்:
நான்தான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையா? பாட்டு ஏதோ காமம் சொல்லுகிறமாதிரி இருக்கிறது. போட்ட படங்கள் கோவில் /சாமி என்று...
//கண் பார்த்ததும் அவள் தாள் பார்த்ததும்
விரல் எழுதிய சித்திரத்தில் காதல் சொன்னாள்
தாள் பார்த்ததும் அவள் தோள் பார்த்ததும்
தன்னை இழுத்து அணைத்து பொருதச் சொன்னாள்//
சரியான இசை அமைந்தால் இன்னும் சட்டப்படி இருந்திருக்கும். வரிகளில் இருக்கும் உண்மை... நெஞ்சை நக்குது
Beauty .. seriously ... சந்தத்தை விட்டு தள்ளுங்கள். அந்த மெலடியான காதல் ... நேற்று தான் கேதா "கல கல வென பொழியும் மேகம்" பாட்டு காரில் போகும்போது சிலாகித்துகொண்டு வந்தான். ஞாபகம் வருகிறது. பெரிய ஆள் தான் நீங்கள் பாஸ்!
//மார் பார்த்ததும் அவள் பார் பார்த்ததும்
சேலை கரையிழுத்தென்னை விலக்கச் சொன்னாள்//
ஐயோடா .. என்ன இது காதல்?
//இமை பார்த்ததும் அவள் இரவி பார்த்ததும்
வில்லை வளைத்து நாண் ஏற்றச் சொன்னாள்//
incidently, நானும் தீபனுக்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்! (இன்னமும் வெளிவரவில்லை), அந்த பாடலில் "இந்தை இப்பிறவி" வருகிறது. நாங்கள் கம்பரை விடமாட்டோமோ?
பாடல் மெலடி வழமை போல கிளாஸ். sound engineering வழமை போலவே டப்பா. தீபன் இப்போது அதில் கொஞ்சம் அதிகம் மினக்கெடுகிறான். அவனோடு சேர்ந்து வேலை செய்யும்போது கொஞ்சம் நாங்கள் speed braker ஆக இருக்க வேண்டும். நம்ப பசங்கள் பாடும்போது கமகம்கள் தேவையில்லாமல் வரும். குரலில் பேஸ் வருவதற்காக செய்வது. பிருந்தனுக்கும் இந்த சிக்கல் இருக்கு. தீபனுக்கு இன்னமும் இருக்கு.
எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு, நாங்கள் சேர்ந்து ஒரு அல்பம் செய்து சூட் பண்ணலாம் (கேதா இருக்கிறான்) ... தீபனை கன்ட்ரோல் பண்ணும் ரசிகர் வேண்டும். அப்போது பின்னுவான் .. பார்ப்போம்.
aio aio
// தீபன் இப்போது அதில் கொஞ்சம் அதிகம் மினக்கெடுகிறான். // எங்களுக்கு நேரமும் பணமும் நிறையவே குறைவாய் இருந்தது - இந்த அல்பம் ஒரு நிஜமான பொருளாதார ஹிட்.
சாதாரணன் மற்றும் ஜேகே உங்கள் அன்புக்கு நன்றி. நான் தொடர்ந்து எழுதலாம் எண்டு தோணுது.
சக்திவேல் இதை நான் கற்பிதம் பண்ணிய களம்- நல்லூர்த் திருவிழா அரசடி வீதி, பாரதி சிலைதாண்டி, சயிக்கில் பார்க் பண்ணிட்டு நடந்து போகேக்கை - scouts and St. Johns ambulance கடமை கண்ணியம் கட்டுப்பாடு - கூட்டம் - mostly பின்னேரத் திருவிழா - சப்பரம் எண்டு வைக்கலாம் - தலைவி முன்னே போகிறாள் தலைவன் பின்னே தொடர்கிறான் -
ச்சே ஒரு எழுத்துப்பிரச்சனை எப்படியெல்லாம் அர்த்தத்தை மாத்துது...
சந்தோசம் பிலாசபி பிரபாகரன், இதில சில சிலேடை இருக்கு ஆனா நீங்க எதைக் குறிப்பா சொல்லுறீங்க எண்டு புரியல.....
>சக்திவேல் இதை நான் கற்பிதம் பண்ணிய களம்- நல்லூர்த் திருவிழா அரசடி வீதி, பாரதி சிலைதாண்டி
கவிதை விளங்கிக்கொள்வதில் நான் மண்டுதான் போலுள்ளது.
(மற்ற விடயங்களில் என்னவாம் என்று என்னைச் சங்கடப்படுத்தக் கூடாது )
சக்தி உங்கள் கவிதைப் புரிதலும் வாசிப்புப் பரப்பும் அனுபவக் கொள்ளளவும் அதன் ரசனையான வெளிப்பாடும் வேப்பம் தோப்பில் (http://www.ssakthivel.com/) தெரியுது - இத்தனை தன்னடக்கம் என்னை சங்கடப் படுத்துது. நல்லூர்த்திருவிழா வெளிப்படையா கவிதையில் தெரியாது - வாய்ப்பே இல்லை, நான் ஏன் அந்தப் படங்களைப் போட்டேன் என்று சொல்லவே களம் விவரித்தேன். கவிதைக்கு அது தப்பாட்டம், எங்கிருந்து கவிதை பிடித்தேனோ அதையும் தாண்டி கவிதை பொருந்தலாம் - களம் பொருள் கவிஞனே சொல்லல் நல்லதல்ல என்பது என் அபிப்பிராயம் - அனால் இது பாடல்.
விழி பார்த்ததும் பின் மொழி சேர்த்ததும்
அவள் விழி பார்த்ததும் கவி மொழி சேர்த்ததும்
இனி விழியே ஏன் மொழியென்று விழியால் கேட்டாள்
நீர் கோர்த்ததும் அதை நான் பார்த்ததும்
கவி நீர் கோர்த்ததும் அதை நான் பார்த்ததும்
கவி நீயே இனி யார் என்று கூவச்சொன்னேன்
பெண் பர்க்ககவும் புது பெண் பார்க்கவும்
தமிழ் வழிகின்ற காதல் இதை மண் பார்க்கட்டும்
பின் பார்த்ததும் அவள் முன் பார்த்ததும்
தெருவெல்லாம் நாய் தொல்லை என்று தோழி சொன்னாள்
மார் பார்த்ததும் அவள் பார் பார்த்ததும்
நான் மார் பார்த்ததும் அவள் பார் பார்த்ததும்
கால் செருப்பை கையில் எடுத்து வெளுத்துப்போட்டாள்
தாள் பார்த்ததும் அவள் தோள் பார்த்ததும்
அவள் கழுத்தை ஓடித்தொரு முறைப்பை தந்தாள்
விண் பார்த்ததும் அவள் கண் பார்த்ததும்
உதை விட்டிட்டு வேலைவெட்டி பார்க்க சொன்னாள்
யார் பார்த்ததோ இந்த ஊர் பார்த்ததோ
இனி சனி மாற்றம் என்வாழ்வில் நான் பார்ப்பதோ
// விண் பார்த்ததும் அவள் கண் பார்த்ததும்
விண்ணை விட்டு தன்னைப் பார்க்கச் சொன்னாள் //
அற்புதம். கவனம் எப்போதும் அவள் மேலே இருப்பதுதான் எதிர்ப்பார்ப்பு :)
இசை மிகவும் நன்றாக இருந்தது. மெலடி அற்புதம்!
சிலேடையாவது கிலேடையாவது... பதிவோட முதல் வரியை படிங்க...
கேதாவின் கவிதை - குறும்புப் பா
Shanker Bharadwaj: வந்ததும் ரசித்ததும் பகிர்ந்ததும் - மகிழ்ச்சி
கருத்துரையிடுக