வெள்ளி, பிப்ரவரி 03, 2012

மொட்டுக்கள் சில முட்களானதேன் ?



படம் வரையும் கல்வின்.
உகண்டா நாட்டினை சேர்ந்த கல்வின் (Calvin) எனும் சிறு வயதுப் போராளி தன் ஆயுதம் தாங்கிய வலியின் நினைவுகளை தூரிகளை கொண்டு மீட்டிருக்கிறான். Street Child Project எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் காப்பாற்றப் பட்டு வளர்த்தெடுக்கப் படும் இந்த ஓவியனுக்குள் இன்னமும் ஓயாமல் அலை அடிக்கிறது அவன் சிறுவயதில் கண்ட வன் முறைகள். இன்று எல்லாவற்றையும் மறந்து வெள்ளையாய் சிரிக்கிறான் என்றால் அது street child project இன் கர்த்தாக்களான இரண்டு under-grad வெண் பிள்ளைகள். அதில் ஒரு நண்பி என் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். நண்பியாக அறிமுகமாகி சகோதரியாக மலர்ந்திருக்கும் அந்த உறவு பெருமைக்குரியதாய் நான் மெச்சுவது. இந்த பத்தியை எழுதும் தருவாயில் அவர் குழப்பமான அரசியல் மேகங்கள் சூழ்ந்திருக்கும் உகண்டாவில், இந்த மாதிரி பல சிறுவர்களுடன் உறுதுணையாய் நிறைய தியாகங்களுடன் சேவையாற்றி வருகிறார். அந்த தங்கச்சியின் பெயர் ஜென்னி. தங்கச்சி என்பதை தன் ஆங்கில ஓசை நயத்துடன் அவர் உச்சரிப்பதே தனி அழகு.

முள்ளாகுகிற ஒரு மொட்டு......

இந்தப் படம் பார்த்த மாத்திரத்திலேயே என் அடிவயிற்றுக்குள் ஒரு நாக்குளியும் கழுத்துக்குள் ஒரு மிடறும்...... சட்டென்று சொந்தங்களும் நட்புகளும் நினைவில் வந்து போனார்கள். உகண்டா நாட்டில் (உம்) வற்புறுத்தி  இவர்கள் கையில் ஆயுதம் கொடுக்கப்பட்டது. அது வற்புறுத்தியோ விரும்பியோ ஆயுதம் தாங்குகிற பிஞ்சுக் கரங்களுக்கு, ஏன் மனசுக்கும் கூட வலிவு குறைவு. பட்டாம்பூச்சிகளுக்கு இறகுகளை பிய்த்து விடுதல் எத்தனை கொடுமையோ அதனிலும் கொடுமையானது அவற்றை குளவிகளாக்குவது.

ஒரு நல்ல படைப்பை பகிரத் தொடங்கின முயற்சி உலக மற்றும் உள்ளூர் அரசியலை சாடை பண்ணியது தற்செயல். இந்த ஓவியத்தை நான் ரசித்த முறையில் நீங்கள் ரசிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் நான் கவனித்த சில முக்கிய அம்சங்களை வரிசைப் படுத்த விரும்புகிறேன். மேலே வாசிக்க முதல் அந்த படத்தை ஆழ ரசித்து விடுங்கள்.

|
|
|
|
|
|
|
|
|

  1. அந்த சிறுவன் தாங்குகிற ஆயுதம் பெரும்பாலும் A.K.47 போல் தெரிகிறது, அதன் பிடியைப் பாருங்கள், பரிமாணப் படி அது கொஞ்சம் இடறுகிறதா.... இல்லை ஏதும் சொல்கிறதா ?
  2. மடித்து விட்ட சட்டைக் கைகளைப் பாருங்கள், தோள் மூட்டைப் பாருங்கள் - இந்த சீருடை அவனுக்குப் பெரிதில்லையா.....பொருந்தலையே!
  3. கன்னங்களின் மொழுக் மொளுக்கையும் மீறி  கண்களில் தெரிகிறது வன்மம் ?
  4. அந்த உதடுகளில் தொங்கிச் சரிந்து விழாமல் இருப்பது, கேள்வியா? பதிலா? சிரிப்பா? ஏளனமா?...... புரிந்தும் புரியாத அந்த கலவை உணர்வை யாராயினும் எனக்கு மொழிபெயர்க்க முடியுமா?
  5. பினாலே தெரிகிற அந்த ஒற்றை மரம் அல்லது துளிர்க்கும் இளைகளற்ற சிறு மரம் அவன் குறைஞ்ச பட்சம் ஆறு ஒற்றுமை எனக்கு தெரிகிறது....உங்களுக்கு?
  6. ஆ, அந்த நாணல்கள்..... எனக்கு எந்தக் கதையும் சொல்லவில்லை உங்களுக்கு ஆயினும் ஏதும் சொல்கிறதா?


கல்வின் உங்களுக்காய் காட்டுகிறான் தன் படைப்புகளை, உங்கள் அவசரம் அல்லது கவனமின்மை ஒரு நல்ல ஓவியனை ஆயுதமேந்த வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

23 கருத்துகள்:

எஸ் சக்திவேல் சொன்னது…

"வலி" எல்லாப்பக்கத்தாலும்;

வண்ணத்திப் பூச்சிகளின் செட்டைகளைப் பிய்த்தெறியும் சிறுவர்கள் மட்டுமல்ல; பிய்த்தெறியப்படட ஆயிரக்கணக்கான (வண்ணத்திப்பூச்சிகளின்) செட்டைகளும் கண்ணில்.

எஸ் சக்திவேல் சொன்னது…

test

எஸ் சக்திவேல் சொன்னது…

முன்பு ஒரு comment போட்டேன். ஆட்சேபணைக்குரியதாக எதையும் எழுதியிருக்கவில்லை. ஆனால் மேலே வரவில்லை; தூக்கியிருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். என் browser/cache இல் ஏதோ சிக்கல் போல.

(PS தூக்கியிருந்தாலும் குறை நினைக்கமாட்டேன், I respect everyones decision/s)

எஸ் சக்திவேல் சொன்னது…

Test 2- I guess sthing is wrong in your blg; Some comments vanish automatically.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

எது எப்படி என்று என்னால் மட்டுக்கட்ட முடியவில்லை. இது சில அந்நிய சக்திகளின் சதி எண்டு சொல்லிவிடலாமா ?

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
ஜேகே சொன்னது…

நாணல்கள் அவன் தெரிந்தே வரைஇவிருப்பானா என்று தெரியாது ... ஆனால் இரண்டு திசைகளில் சரிந்திருக்கும் நாணல்கள் நடுவில், நடுவில் நிற்கிறோம் என்பது கூட தெரியாமல் நிற்கிறான்!

அந்த தளிர்கள் இல்லாத மரம் ஓவியத்துக்கு தேவையில்லாதது என்று நினைக்கிறேன்.... இயல்பாக இல்லை! தொழில்முறை ஓவியன் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துகிறது. அது இவனுக்கு ஒரு disadvantage!

சின்ன வயசு லாரா போல இல்ல?

எஸ் சக்திவேல் சொன்னது…

>எது எப்படி என்று என்னால் மட்டுக்கட்ட முடியவில்லை. இது சில அந்நிய சக்திகளின் சதி எண்டு சொல்லிவிடலாமா ?

ஹா ஹா; பார்ப்போம். இரண்டுமுறை இதே post இல் பின்னூட்டம் இட்டேன். preview உம் சரியாக இருந்தது. ஆனால் மீண்டும் வந்தபோது காணவில்லை.
(save பண்ணி இருக்கவில்லை. எனவே அதே பின்னூட்டங்களைக் copy/paste செய்யமுடியவில்லை.)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

ஜே.கே, நாணல்கள் விளக்கம் அருமை, எனக்கு தோன்றவில்லை;

சக்திவேல், உங்கள் தொடர் முயற்சிக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

"இது சில அந்நிய சக்திகளின் சதி எண்டு சொல்லிவிடலாமா ? "..
அது சரி இவரு US ஐ ஆள்றாரு China சதி பண்ணுது..!

Ketha சொன்னது…

முதிர்ந்த நாணல்கள் காற்றிற்கு வளைந்து,
பல திசைகளில் நிற்கும்
தளிர்களின் கரங்களில் திணிக்கப்படுகிறது துப்பாக்கி. தாழ்ந்த நாணல்கள் தமக்குள்ள கிசுகிசுக்கும். புயலடித்தால் என்ன செய்வது, பிஞ்சுகள் கூட நிமிரவேண்டியதுதான்.
நாளை புயற்காற்றில் தளிர் ஒடிந்து வீழலாம்,
அதன் கருவி காற்றோடு போகலாம்.
புயல் ஓய்ந்ததும் நாணல்கள் மீண்டும் தலைதூக்கும், சரிந்த தளிரை மூடி வளரும்,
இங்கே நாணல்கள் மட்டுமே இருக்கலாம் என்று காற்று வீசிக்கொண்டே இருக்கும்.
காற்று கொண்டுவரும் மகரந்த மழையில்
நாணல்கள் குளிக்கும்.
காற்றுக்குத்தான் எத்தனை பெரிய மனது.

Ketha சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Ketha சொன்னது…

முதிர்ந்த நாணல்கள் காற்றிற்கு வளைந்து,
பல திசைகளில் நிற்கும்.
தளிர்களின் கரங்களில் திணிக்கப்படுகிறது துப்பாக்கி. தாழ்ந்த நாணல்கள் தமக்குள்ள கிசுகிசுக்கும், "புயலடித்தால் என்ன செய்வது, பிஞ்சுகள் கூட நிமிரவேண்டியதுதான்".
நாளை புயற்காற்றில் தளிர் ஒடிந்து வீழலாம்,
அதன் கருவி காற்றோடு போகலாம்.
புயல் ஓய்ந்ததும் நாணல்கள் மீண்டும் தலைதூக்கும், சரிந்த தளிரை மூடி வளரும்,
இங்கே நாணல்கள் மட்டுமே இருக்கலாம் என்று காற்று வீசிக்கொண்டே இருக்கும்.
காற்று கொண்டுவரும் மகரந்த மழையில்
நாணல்கள் குளிக்கும்.
காற்றுக்குத்தான் எத்தனை பெரிய மனது.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//அது சரி இவரு US ஐ ஆள்றாரு China சதி பண்ணுது..!//

அட ஆமா சார், உங்களுக்கு தெரியாது - ஒபாமா கூட நம்ம ப்ளாக் வாசிக்குறாரு. நம்ம அப்துல் (நான் அப்படித்தான் கலாமை கூப்புடுவன்) தன் அடுத்த வெளிநாட்டு பயணத்தைப் பற்றி என்கிட்டயும் ஜேகே கிட்டயும் சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கார்.

ஆமா நீங்க தான் அந்த கடுப்பை கிளப்புறார் மை லார்ட் சங்க கொ.ப.செ வா ?

பெயரில்லா சொன்னது…

ஆமா ஒபாமாக்கும் அப்துல்க்கும்(ஆமா உங்க Kalam தான் ) என்ன தொடுப்புன்னு புரியேல ..

"என்கிட்டயும் ஜேகே கிட்டயும் சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கார்"
அது சரி ரெண்டு வெட்டி பசங்க டைம் பாஸ்கு just ஒரு visitai விசிட்டை cheena thaanunu discuss பண்ணுவாங்களாம் அதையெல்லாம் ஒரு மேட்டர்னு !!
அட போங்க sir 70 வயது தாதா,சொல்றதை திருப்பி சொல்லுங்கன்னு சொன்னதில என்ன தப்பு?.

He does same thing even in India universities..so nothing there to comment ...

what does mean by கொ.ப.செ ?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//what does mean by கொ.ப.செ ?//
கூடை வசிருக்கிறவங்களுக்கு எல்லாம் லைட்டு குடுக்கிறதில்ல :) பேரை சொல்லுங்க பாஸ்,

கொ.ப.செ: கொள்கை பரப்பு செயலர்

பெயரில்லா சொன்னது…

haha..அது என்ன புது பழமொழி "கூடை வசிருக்கிறவங்களுக்கு எல்லாம் லைட்டு குடுக்கிறதில்ல"

பேரு "பெயரில்லா" :)

இன்னைக்கு டைம் பாஸ் ஆகுது நமக்கு..

ஏ.எ.வாலிபன் சொன்னது…

இந்தக் காமடியில் கேதாவின் கவிதையை மறந்துட்டன்:

தாழ்ந்த நாணல்களின் கிசுகிசுப்பு சிந்திக்க வைக்கிறது

காற்றின் அலகிலா விளையாட்டை 'பெரிய மனது' என்று சிலாகிப்பது - வாளாதிருப்பீர் எனும் நக்கலா இல்லை ஏதும் தத்துவமா ?

Ketha சொன்னது…

மரங்களையும் தளிர்களையும் சாய்த்துவிட்டு,
"என்ன இந்த புல்வெளியில் மரங்களே இல்லையா"
என கேட்கும் பூஞ்சோலைகளிடம் குழைந்து தவழ்ந்து, அவை உதிர்த்துவிட்ட மகரந்தமணிகளை அள்ளி, அதில் கொஞ்சம் வளைந்த நாணல்கள் நிறைந்த தரிசில் தூவி, இனி இங்கெல்லாம் பூக்கள்தான் என்று உலகுக்கு முரசறையும்.
காற்றுக்குத்தான் எவ்வளவு பெரிய மனது.

பெயரில்லா சொன்னது…

அப்போ வாபஸ் வாங்குறீங்கனு அர்த்தப்படுத்தலாமா?
(அட சும்மா தான்..:()

ஏ.எ.வாலிபன் சொன்னது…

கலாமைப் பற்றி அந்த தளத்தில் விவாதிக்கலாம், மற்றபடி 'அந்தாதி' போல 'பெயரிலா' ஓகே நம்பிட்டம் - இண்டைக்கென்ன சுதந்திர தின விடுமுறை டைம் பாஸ் நானா - என்ன கொடுமை சரவணன் இது.

கேதா இதை ஒரு முழுக்கவிதையாய் முயற்சி பண்ணு மச்சி - நல்லாப் போகுது - some deep ideas are there

ஜேகே சொன்னது…

தம்பி கேதா கவிதை அமர்க்களம்!

வாலிபன்/கேதா .. கவிதையில் ஒரு கலந்துரையாடல் ட்ரை பண்ணுவமா? ஒரு shape ஆக்கீட்டு பதிவிடலாம்!

நான் சும்மா ஹன்சிகா அது இது என்று ஜனரஞ்சகமா எழுதலாம்... வாட் டூ யூ தினக்?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

ஜேகே ஓகே! (கவனிக்க சந்தம் ;))

கருத்துரையிடுக