ஞாயிறு, ஜனவரி 29, 2012

அவலை நினைத்துக்கொண்டு....


இதை எழுதுவதால் ஏதும் நடந்துடும் எண்டோ, நடந்தது திரிந்திடும் எண்டோ எனக்கு நம்பிக்கை இல்லைத்தான்.... இருந்தாலும் எழுதத் தோணுது....
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிற மாதிரி, அப்துல்கலாம், புலம் பெயர்ந்தவர்கள், ப்ளாக்கர்கள், ஏ.ஆர்.முருகதாஸ் என்று எல்லோரையும் சகட்டு மேனிக்கு இடிக்கிறது இப்ப ஒரு பேஷன், செரி என்பங்குக்கு நானும் கொஞ்சம் இடிக்கலாம் எண்டு.....
இதை படிக்க முன் இதை படிப்பது நலம், (எதையுமே படிக்காமல் பிரபுதேவா நயன் பிரிவு பற்றி புலன் விசாரிப்பது இன்னும் நலம்......)
  1. கனவு காணுங்கள் Guys: ஜேகே 
  2. அப்துல் கலாம் இலங்கை வருகையும், புலம்பெயர் தமிழர்களின் நக்கல் நய்யாண்டிகளும். :கோபிதாஸ்

கோபி சொன்ன மாதிரி அப்துல் கலாம் என்ற விஞ்ஞானி அரசியல் தீர்வு தருவார் என்றோ அல்லது தம் சார்பில் இலங்கை அரசிற்கு கண்டனம் தெரிவிப்பார் என்றோ நானும் நினைக்க வில்லை. மேலும் ஜேகே பயந்தது மாதிரி கலாமின் சாதனைகளின் மீது சேறு பூசுவதிலும் இஷ்டமில்லை.

அவர் வந்ததில் - ஒரு உலகறிந்த விஞ்ஞானி வந்தார் , radio cylon கதை மாமா மாதிரி , sun tv சிறுவர் உலகம் மாதிரி ரசனையா நிறைய சொன்னார் , கூடவே நல்லாப் படிக்கவும் சொன்னார். (நாங்களெலாம் ஒரு கதை கட்டுரை எழுதினா அதுக்கு கொமேண்டோ லைக்கோ பாத்து காத்து கிடக்கிறத விமர்சிக்கிற விடேத்திகளா; கலாம் தான் தலைப்பு பற்றி பேசமுதலே சபையிடம் நல்ல இருக்க எண்டு கேட்டதை கவனிக்க.) சந்தோசம்! பாவம் அவருக்கு இந்துக் கல்லூரிக்கும் இந்து ஆரம்ப பாடசாலைக்கும் வித்தியாசம் தெரியாமக் குழம்பிட்டார் போல.
போகிற போக்கில் அவர் மீன் பிடிக்கிறதில இருக்கிற வாய்க்கால் சண்டைய தீர்த்தது "Mind blowing". கொஞ்சம் வெள்ளன வந்திருந்தா மற்ற வாய்க்கால் சண்டைகளையும் தீர்திருப்பர் போல - Just 'u' miss 'u';

கலாம் வந்ததில சந்தோசம், வந்து தந்ததில சில ஆதங்கம் அவளவே.... அவர் தெரியாத விசயங்களில பேசாம இருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாய் இருப்பார். அவளவே.

கோபி :யாழ்பாணத்தில் சும்மா ரோட்டில போறவன் கூட ஒரு பாடசாலை மாணவனை கண்டால், "தம்பி நல்லா படிக்க வேண்டும்" என்று தான் சொல்வான். அப்படியே!
கலாமும் சும்மா ரோட்டில போகேக்க அப்படி சொல்லி இருந்திருக்கலாம் அப்ப, மேடை வேஸ்டோ ?
நேற்றுத் தான் அந்திரட்டி முடிஞ்சது,
முந்த நாள் தான் என்ட அண்ணா தீவிலேயே A/L முதலா வந்தவர்,
எனக்கு பிரச்சனை படிக்கிறதில இல்லை,
 எல்லாரும் இங்க கலாசாரம் கெட்டிடுது,
பெடியள் கேட்டுடானுகள்,
AIDS ரேட் கூடிட்டிது,
கிளப்பும் தியட்டரும் கூடியிட்டுது எண்டு சொல்லுவினம் நம்பதேங்கோ,
ஐயந்தாம் ஆண்டு பரிசு பெறேக்கை பெடியன் என்ன சொன்னவன் எண்டு தெரியுமில்லை, படிக்கிறதில இல்லை எங்களுக்கு பிரச்சனை.
அப்புறம் ? அப்புறம் தான் எங்கட பிரச்சனை....
கோபி புலம் பெயர் தமிழர்களை வறுத்தெடுப்பது பற்றி எனக்கு இன்னொரு பார்வை உண்டு. பெரும் பாலும் புலம் பெயர்ந்தவர்கள் வெறும் dinner talk இக்குள் சுருங்குவதாக குற்றம் சாட்ட முடியாது.
பிரபு தேவா நயன் காதலை விட,
ஹன்சிகாவின் இடுப்பை விட,
திரிஷாவின் டாட்டுவை விட
இது பற்றி பேசுவது ஒன்றும் தப்பில்லை நல்ல விடயம் தானே.
பேச மட்டும்தான் சிலருக்கு முடிகிறது. அவனை அவன் குடும்ப மற்றும் சில இத்தியாதிகள் சூழ்நிலைக் கைதியாக்கி விட்டுள்ளது.
இன்றைக்கும் தான் அடுத்த சந்ததியை தமிழ் படிப்பிக்கிறார்கள், சங்கீதம் நாட்டியம் இன்ன பிற;
புட்டும் கத்தரிக்காய் குழம்பும் இத்தாலியின் இரவு போசனத்திலும் பெரும் போகமாய் கருதும் பெயர்ந்து பிறந்த குழந்தைகள் பல.
சில மாறுதல்கள் இருக்கும்.
சில அபத்தங்கள் இருக்கும்.
ஆனால் நாங்கள் மட்டும் தான் இன்னும் எங்கள் மீது ஒட்டிக்கொண்ட செம்மண் புழுதியையும், சட்டைகளில் தெறித்த இரத்தத்தையும் மேற்கின் குளிர்காலப் பனியில் கழுவ முடியாது தவிக்குறோம்.

டாக்டர் மனோ ஒரு பொத்தம் பொதுவான விமர்சனத்தை வைக்குறார் இப்படி:  "நான் முன்னர் குறிப்பிட்டதுபோல சில குப்பைகளை எழுதிவிட்டு தங்களைத் தாங்களே அரசியல் விமசகர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் கூட்டம் ஒன்று உள்ளது. இக்கூட்டம் தமது புலொக்குகளில் வேலைவெட்டி இல்லாமல் யாரையாவது வைத்து மொட்டை அடித்துவிட்டு தமது ரசிகர் வட்டங்களிடம் இருந்து லைக், கொமென்ஸ் எதிர்பார்க்கும் கத்துக்குட்டிகள். அது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. இவர்களிடம் இருந்து சமூகத்திற்கு தேவையான ஆக்கரீதியான கருத்துக்கள் வரும் என்று எதிர்பார்க்கவுமில்லை, எதிர்பார்க்கவும் கூடாது."

பதிவுலகில் திரட்டிகளில் ஈழம் என்பது ஒரு தனி வகை என்றாக்கியிருப்பது மிக சிறிய எண்ணிக்கையிலான ஈழத்தமிழ் மற்றும் ஈழஆர்வல பதிவுலக நண்பர்களின் கவனிக்கப் படவேண்டிய வெற்றி.
இது ஒரு நல்ல நவீன ஜனநாயக கட்டமைப்பு; எந்தக் கருத்துமே மக்களால் அங்கீகாரம் பெறவேண்டி இருப்பது ஜனநாயக சட்டம். பலவிதமான கருத்துகளும் அதன் விளை கருத்துகளும் ஒத்து மறுத்து பாராட்டி சீராட்டி வளர்த்தெடுப்பது ஜனநாயக யதார்த்தம்.
ஒரு நல்ல ஜனநாயகப் பாரம்பரியத்தை எல்லோரும் சேர்ந்து கட்டி எழுப்பி இருப்பதும் அதை தொடர்ந்து தீவிரமாக கொண்டு செல்லுவதும் நகைப்புக்குரியதல்ல. நோக்கம் புகழாயிருப்பினும் எடுத்துக்கொண்ட பொருள்-சிறப்பு முக்கியம்.
இவர்களை சமூகம் செரியாகப் பயன் படுத்தின் ஆக்க ரீதியான கருத்துக்கள் வரும் (உதாரணம் யாழ் IT). 

கலைஞ்ஞர்களை செரியாகக் கவனியாத சமூகம் களை இழந்து போகும். கொமென்ட் பண்ணுவதும் லைக் பண்ணுவதும் ஒரு சமூகக் கடமை - அப்துல் கலாம் அங்கிருந்து வந்து பாலர்களுக்கு இதைதான் செய்திருந்தார். In return அவர் தான் செய்வது பிடிச்சிருக்கா எண்டு அதையே தான் எதிர் பார்க்குறார்: பசங்க படத்தில சொன்னா மாதிரி "ஒவ்வொரு ஜீவனும் ஏதோ ஒரு அங்கீகாரத்துக்கு தான் ஏங்குது". இதை கொச்சைப் படுத்துவது அழகல்ல டாக்டர். 

என்னுடைய கனவுகளில் என் ஒழுங்கையும் பக்கத்து ஒழுங்கை எல்லாம் சேர்த்தே வருகிறது. அந்தக் கனவை எழுதுகிறேன் அந்தக் கனவை நனவாக்க பகிர்கிறேன்.
நண்பர்களே!
 நிறைய நேரங்களில் நான் என்னுடைய பதிவுகளையும் சில நல்ல மற்ற பதிவுகளையும் பகிர்வது முறையே ஒரு விளம்பரம் மற்றும் கடமை.
இதில் எனக்கு எந்த வெக்கமும் இல்லை.
பலர் படித்தேன் அனால் கொமென்ட் போட: தமிழில் அச்சடிக்க தெரியாது நேரமில்லை விருப்பில்லை தோன்றவில்லை கொள்கை....... என்று ஏதேதோ சொல்கிறீர்கள்.

 "கருத்து" சுதந்திரம் மட்டுமல்ல கடமையும் கூட - ஏதாவது சொல்லுங்கள் ப்ளீஸ். அதுக்காக ஏதாவது சொல்ல வேணும் எண்டு சொல்லாதீர்கள் கலாம் மாதிரி.

"நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
 நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
 அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்"
     
           சொன்னது எங்க தாத்தா மீசை முண்டாசு.

12 கருத்துகள்:

ஏ.எ.வாலிபன் சொன்னது…

Barathi Subramaniam: Super machchi ... I luv to share my thoughts about ur blog other than super/ good , but I am too lazy to type. Thanks for the like button. :)

Ketha சொன்னது…

//பதிவுலகில் திரட்டிகளில் ஈழம் என்பது ஒரு தனி வகை என்றாக்கியிருப்பது மிக சிறிய எண்ணிக்கையிலான ஈழத்தமிழ் மற்றும் ஈழஆர்வல பதிவுலக நண்பர்களின் கவனிக்கப் படவேண்டிய வெற்றி. இது ஒரு நல்ல நவீன ஜனநாயக கட்டமைப்பு; எந்தக் கருத்துமே மக்களால் அங்கீகாரம் பெறவேண்டி இருப்பது ஜனநாயக சட்டம். பலவிதமான கருத்துகளும் அதன் விளை கருத்துகளும் ஒத்து மறுத்து பாராட்டி சீராட்டி வளர்த்தெடுப்பது ஜனநாயக யதார்த்தம். ஒரு நல்ல ஜனநாயகப் பாரம்பரியத்தை எல்லோரும் சேர்ந்து கட்டி எழுப்பி இருப்பதும் அதை தொடர்ந்து தீவிரமாக கொண்டு செல்லுவதும் நகைப்புக்குரியதல்ல. நோக்கம் புகழாயிருப்பினும் எடுத்துக்கொண்ட பொருள் சிறப்பு முக்கியம். இவர்களை சமூகம் செரியாகப் பயன் படுத்தின் ஆக்க ரீதியான கருத்துக்கள் வரும் (உதாரணம் யாழ் IT).//

அருமையாக சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள் வாலிபரே

புலம்பெயர்ந்தவன் எல்லாம் சுகபோகி, கத்துக்குட்டி என்னும் கருத்து மிகவும் மேலெழுந்தவாரியான பார்வை. பதிவுகளுக்கூடாக தம் இருப்பை பதிவுசெய்து கொள்ள முடிந்திருப்பது ஈழத்தமிழனின் ஒரு அடைவு.

கலாம் அரசியல் தீர்வு கொண்டுவருவார் என்று யாரும் எதிர்பார்த்திருந்தால் அது அறியாமை. ஆனால் அவர் அந்த மண்ணின் தனித்துவத்தை தொட்டு, தன் அனுபவங்களை பகிர்ந்து ஒரு விஞ்ஞானியாய் உரையாற்றி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தேசிய கொடியை நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும் அளவுக்கு இன்னும் எங்கள் மண்ணும் மக்களும் தயாராகவில்லை என்பதையாவது புரிந்து கொண்டிருக்கலாம்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

செரியாகச் சொன்னீர் கேதா...
//தேசிய கொடியை நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும் அளவுக்கு இன்னும் எங்கள் மண்ணும் மக்களும் தயாராகவில்லை என்பதையாவது புரிந்து கொண்டிருக்கலாம்.// அதே அதே சபாபதே....

ஜேகே சொன்னது…

தம்பிரி ... முதல்லா டப்பா காமெடி பீஸ் satire எழுதும் ஜேகே யின் பதிவோடு சீரியசான ஆய்வுக்கட்டுரையை ஒப்பிட்டதை கண்டிக்கிறேன்! இதன் மூலம் ஜேகேயை அரசியலுக்குள் இழுக்கும் தந்திரம் பலிக்காது! நாற்று நட்டாயா என்று கேட்பாங்கள். அதனால் தான் நான் புடுங்குவதே இல்லை!

ஈழத்தில் இருந்து எழுதினாலும் தப்பு. புலம்பெயர்ந்து எழுதினாலும் தப்பு. கொஞ்சம் கரணம் தப்பினால் நானும் கருணா தான் இங்கே!

அப்துல்கலாம் மாட்டர். கொண்டாடினால் கடவுள். இல்லாவிட்டால் பிசாசு. மனிசனை மனிசனாய் பாவிக்க பழகும் மட்டும் உலகத்தில எல்லாமே இரத்தம் குடிக்கும் கடவுளும் பிசாசும் தான்!

கடவுளுக்கும் பிசாசுக்கும் சொல்லிக்கொள்ளவேண்டியது, நடந்த குய்யோமுறையால் அழகான ஒரு விவாதம் தடைப்பட்டு நிற்கிறது.

1) மும்மொழிக்கல்வி திட்டத்தில் சாதக பாதகங்கள்! அதன் பின்னரான அரசியல். அதற்கு ஏன் அப்துல்கலாம்? கேதா வீட்டில் பேசும்போது நான் சொன்னதை அவன் கேட்டான், அவன் சொன்னதை நான் கேட்டேன். இரண்டு பேருக்கும் மீடியேட்டரா சீனியர் அக்காவும் இருந்தா. openness முக்கியம்.

2) யாழ்ப்பாணத்தில் ஏன் ஒரு அப்துல்கலாம் உருவாகவில்லை? போரை தூக்கிப்போடுங்கள். நீங்கள் கூட ஒரு researcher தான். ஆனால் முடியுமா? இது ஒரு கலாச்சார சிக்கல். என்னுடைய Yarl IT Hub பற்றிய பதிவில் கொஞ்சம் கோடிகாட்டி இருப்பேன்.

3) அப்துல்கலாம் ஒரு விஞ்ஞானியா? இந்த விஷயம் ஒரு சிறந்த ஆய்வுப்பொருள். Steve Jobs ஐயும Jonathan Ive ஐயும தெரிந்தவர், Steve Wozniyak ஐ குறிப்பிட மறந்தவர் அப்துல்கலாம் பற்றி விமர்சனம் செய்ய தயாரில்லை. Steve Jobs க்கும் கலாமுக்கும் உள்ள வித்தியாசம், Wings Of Fire புத்தகத்தை Walter Isackson எழுதாததே!! Steve Jobs செய்யவில்லையா என்று கேட்கிறார். அது தானே? அமெரிக்க ஈராக்கில் செய்யாத யுத்தக்குற்றமா?


எங்கள் பிரச்சனை. அப்துல் கலாம் இல்லை. மகிந்தா இல்லை. சுமந்திரன் இல்லை. எங்கள் பிரச்சனை இந்த கடவுளும் பிசாசும் தான். எப்போது பகுத்தறிவு வருகிறதோ அப்போது தான் நாங்கள் ஆணியே புடுங்கலாம்! எழுத்தாளர் என்ன புடுங்கினார்கள் என்று கேட்பவர்களுக்கு ஒரே ஆன்சர், அவர்கள் எழுதுகிறார்கள். இங்கே எல்லாத்துக்கும் "அது" தான் தகுதி என்றால், பாவம் சுஜாதா, ஹிந்தி எதிர்ப்புக்கு அந்த உடம்போட ரயிலில படுத்து இருந்தா எங்களுக்கு ஏன் எதற்கு எப்படி?

Mano சொன்னது…

திரட்டுகளில் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிப் பேசுபவர்கள், அவ்வாறான கருத்துக்களை முன்வைக்க முக்கிய காரணம் தம்மையும் தமிழ்த் தேசிய வாதிகளாக அல்லது ஆர்வலர்களாக (பொய்யோ மெய்யோ தெரியாது) காண்பித்து தமிழர்களிடையே தம்மை பிரபல்யப்படுத்துவதற்காகவே. அதைவிட ஈழவிடுதலை தொடர்பான உண்மையான கரிசனை அவர்களுக்கு உண்டா என்பது சந்தேகமே. நிற்க, இவ்வாறு தங்களை தமிழ்தேசியவாதிகளாக அல்லது ஆர்வலர்களாக அடையாளப்படுத்தியவர்கள் சில விடயங்களை தமது வாசகர்களுக்கு முன்வைக்கும்போது (உ+ம்: அப்துல்கல்லாமின் வருகை தொடர்பான பதிவுகள்) அவ்விடயங்களை தர்கரீதியாக ஆய்வுக்குட்படுத்தாமல் உணர்வுபூர்வமாக அணுகுவது தர்கரீதியாக சிந்திக்க முற்படாத வாசகர்களுக்கு ஒரு ஒரு பிழையான செய்தி அல்லது கருத்தியல் சென்றடைய காரணமாக இருக்கும். ஆகவே வலைப்பூக்களில்/திரட்டுக்களில் தமது பதிவுகளை மேற்கொள்பவர்கள் எதையும் உணர்வுபூர்வமாக அணுகுவதை தவிர்த்து அவற்றை தர்க்கரீதியாக ஆய்வுக்குட்படுத்துவது ஆக்கரீதியான கருத்துக்களை தருமென்பதுடன் ஆரோக்கியமான சமூகத்தையும் உருவாக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து....

Gobi Tharmarajah சொன்னது…

மும்மொழி திட்டத்தை அப்துல் கலாம் கொண்டு தொடங்கினால் தமிழர்கள் விழுந்து விடுவார்கள் என்று இலங்கை அரசு கணக்கு போட்டால், காலம் தான் கடந்து பதில் தரவேண்டும்.
இலங்கை அரசு தமிழர்களை வதம் தான் செய்தது, இதை யார் இங்கே மறுத்தார்கள். ஆனால் அதையே காரணம் காட்டி, மண்ணில் இருக்கும் மக்களின் வாய்ப்பையெல்லாம் பறிக்க கூடாது. அங்கெ மாணவர்களுக்கு அப்துல் கலாம் என்றொரு உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியை சந்தித்த மகிழ்வு, பெருமை. இது மட்டும் தான் என் கண்ணுக்கு தெரியும். தூர நோக்கில் பார்க்கிறோம் தூரநோக்கில் பார்க்கிறோம் என, என் பாட்டனும், தகப்பனும் விட்ட தவறை என் தலைமுறையில் நானும் விட தயாரில்லை. 2010 இல் இருக்க வேண்டியவர்களை இப்படி பார்த்து பார்த்து 1970 இல் விடுவிட்டு நாம் 22 ஆம் நூற்றாண்டில் நுழைந்து விட்டோம்.

சிங்களம் படிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது மண்ணில் இருக்கும் தமிழர் எடுக்க வேண்டிய முடிவு. நாமல்ல. அப்துல் கலாம் மாயையில் விழுகிறார் என்பது அவர்களுக்கு தெரியாத என்ன? அவர்களுக்கு வேண்டியது அவரை சந்திக்கும் ஒரு தருணம், அது மட்டும் தான் அவர்களுக்கு தெரிந்தது. இலங்கையரசை அவர் மதித்து அதன் அழைப்பை ஏற்றார், அவர் மீது கொண்ட மரியாதை நிமித்தம் அவர் சொன்னதை இலங்கை கேட்டது (அவர் சொன்ன மீன் பிடி யோசனை இறையாண்மையே தூக்கி சாப்பிடுவது என்பது இலங்கைக்கு தெரியாதா என்ன?, இலங்கை அதை கணக்கிலேயே எடுக்கவில்லை. மரியாதை நிமிர்த்தம் கேட்டது, தமிழர்களும் தான்)

அவர் உண்மையான விஞ்ஞானியா இல்லையா? இந்திய அணு குண்டு சோதனையுடன், இரண்டு தமிழர்கள் உலகின் கவனத்தை ஈர்த்தனர், ஒருவர் இந்திய அணு விஞ்ஞானி சிதம்பரம், மற்றையவர் பிரதமரின் அணு குண்டு சோதனைக்கான இணைப்பாளர் கலாம். இதில் முன்னவரை விட்டு, கலாம் மிக வேகமாக புகழுச்சிக்கு வந்து பிரபலமானார். அதற்க்கு அவர் என்ன செய்தார் என்பது தொடர்பான சர்ச்சை எப்பவுமே இருக்கும். மற்றவர்களது விஞ்ஞான ரகசியங்களை திருடியதாக ஐன்ஸ்டீன் மேல் உள்ள குற்றம் போல, றோயல் சயின்ஸ் அகாடெமியில் நியுட்டன் தில்லு முள்ளு பண்ணியதாக உள்ள குற்றம் போல, சமீபத்தில் Anonymous திரைப்படத்தில் ஷேக்ஸ்பியர் மேலுள்ள குற்றச்சாட்டு போல இருந்து கொண்டே இருக்கும். அதற்காக அவருக்கு என்ன தண்டனை கொடுப்பது? எப்படி அவர் பெயரை கெடுப்பது?

யாழ்பாணத்தில் கலாம் ஏன் உருவாகவில்லை என்பது பொருத்தமற்ற கேள்வி. அறிவு ரீதியில் கலாமுக்கு நிகராக ஏன் அவருக்கு மேலாகவே பலர் உருவாகினர், உருவாகிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லாம் ஏன் கலாம் ஆகவில்லை என்பதற்கு இப்போது பதில் என்னிடம் இல்லை. அது தொடர்பாக தர்க்க ரீதியாக எனக்குள்ளேயே விவாதித்து வருகிறேன். முடிவு எனக்கு இந்த நிமிடம் வரை தெரியவில்லை.

Walter Isaacson எழுதாததே என்று எல்லா இடமும் முடிக்க வேண்டாம். Walter Isaacson எழுதியது, 21 ஆம் நூற்றாண்டில் ஆப்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன என்று தெரிந்தவர்களுக்கு. சரவண பவானில் தாஜ் chef ஐ வைத்து வடை போடா சொல்கிறீர்கள். போடுவோம், கொஞ்ச நாளாகும், இப்பத்தானே எழுந்தே நடக்கிறோம். (http://www.forbes.com/sites/williampbarrett/2011/12/20/steve-jobs-biographer-paid-twice-for-full-time-work/ ,அதுவும் tax கட்டாம, அமெரிக்கா கடன் சுமையில் இருந்து வந்திடும் சார்)

இங்கே வாலிபன் செய்தது மதிலுக்கு மேல நிண்டு எல்லாருக்கும் சாம்பிராணி போட்டது.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

மச்சி சும்மா உன்னை கிண்டினாத்தான் ஒரு கொமென்ட் ஆவது போடுவாய் எண்டுதான் ;) இது எப்படி இருக்கு...

எல்லாக் கருது பொருளும் தர்க்கத்தோடு தான் அணுகவேண்டும் என்றில்லை, எழுத்தாளனின் அழகு அவன் வடிக்கும் உணர்வில் அதன் தாக்கு மற்றும் வீச்சில் உண்டு, எது எப்படியோ கலாம் வருகை தர்கிப்பதே நல்லம்.

ஜேகே சொன்ன (செய்ற) மாதிரி கோபி சொல்லுற மாதிரி, நாங்க அடிக்கடி கதைக்கிற மாதிரி நாங்களே தான் ஆணி புடுங்கி ஆக வேணும்.

பதிவை பிரபல்யப் படுத்துறது ரொம்ப சிம்பிள் மச்சி: உ+ம்:இந்த பதிவுக்கு பிரபுதேவா நயன் படம் போட்டதால ஹிட்ஸ் எகிறிட்டுது. அவ்வளவே. ஆனா கலர்ஸ் காட்டுறதுக்கும் பெடியன் சாமி தானே தூக்குறான் பீடி இல்லையே.... இது ஒரு முக்கிய நற்பண்பாய் எங்கட சனத்திட்ட பார்குறன்...

ஜேகே, நீங்க சொன்னப்போல, மண்டையோட்டு குகைக்குள்ள மாயாவி இல்லை , அட குகையே இல்லை, இருந்தாலும் அவர் புத்தகத்தை தாண்டி வெளியில வந்து ஏதும் செய்ய மாட்டார். அதால மாயவித்தனமா எழுதக் கூடாது எண்டுறது மேற் சொன்ன பரிகாரியிண்டையும் இஞ்சினியரிண்டையும் கோபமான தொடர் வாதம்........என்ன செய்ய எனக்கு இப்பவும் ராணி-காமிக்ஸ் எண்டா பிடிக்குதே....

ஏ.எ.வாலிபன் சொன்னது…

வாங்க கோபி இப்பதானே ஆட்டம் களை கட்டுது,

எல்லாரும் ஏறி விழுந்த குதிரையில கலாமும் ஏறி விழுந்தார் எண்டு சொல்ல வாராய், ஓகே மச்சி ஆனா அவர் ஏறி விழுந்தது யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில, இதில வேடிக்கை என்ன எண்டா, ஜெகேயும் நானும் பரியோவான் நீ இந்துக் கல்லூரி - என்ன கொடுமை சரவணன் இது....

//சிங்களம் படிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது மண்ணில் இருக்கும் தமிழர் எடுக்க வேண்டிய முடிவு.// அதெப்பிடி சேர், நாங்க இங்க குளிர்ல விரைச்சு வேயில கருகி அனுப்புற டொலர் அவைக்கு வேணும் ஆனா நாங்க எங்கட ஊர் பற்றி அதன் நன்மை தீமை பற்றி ஏதும் நியாயம், வேண்டல், ஆதங்கம் சொல்லக் கூடாது. ஆனா விஞ்ஞானி கலாம் சொல்லலாம், ஏனெண்ட அவருக்கு திருக்குறள் தெரியும் - அடப் போங்கப்பா;

எந்த மாயவித்தனத்தை; உணர்ச்சி எழுத்தை; உணர்வுக் கிளப்பலை - உடைக்க சொல்லுறீன்களோ அதே இடத்தில தான் நீ கலமைக் காட்டுறாய் - எங்கட பாலர்களுக்கு; //அங்கெ மாணவர்களுக்கு அப்துல் கலாம் என்றொரு உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியை சந்தித்த மகிழ்வு, பெருமை. // நான் இதை மறுக்கலை, மாயவித்தனமும் உணர்வோடு அணுகலும் நான் நிறையத்தடவை உங்களோடு வாதித்த நீங்கள் முரண்பட்ட விடயம்.....

Gajen Skandarajah சொன்னது…

கொட்டாவி மாதிரியோ குசு மாதிரியோ வாறது கருத்து இல்லையப்பு..... அதெல்லாம் யோசித்துத்தான் சொல்லோணும்....

ஏ.எ.வாலிபன் சொன்னது…

கருத்து, உடம்பின் வாய்வு வெளிப்பாடு மாதிரி இயல்பானது தான் மச்சி , யோசிச்சு சொல்லுறன் எண்டு எதிர் விளைவுகளை எண்ணி ஒதுங்குறது கோழைத்தனம், எங்கட சினிமாப் பிரபல்யங்கள் மாதிரி dont rty be politically correct but be honest, வெளிப்படுத்தி வாதிட்டு தெரிந்து திருத்திக் கொள்வோமே.... பலர் பஞ்சி அல்லது பயத்தால் ஒதுங்குகிறார்கள்.....சிலர் இது வேண்டாத வேலை என்கிறார்கள்..... ஜனநாயக சமூகத்தில் கருத்து வளர்த்தெடுப்பில் பங்கு கொள்வது அவசியம்....இங்கே கருத்து என்பது கேள்வி சந்தேகம் அபிப்பிராயம் இன்ன பிற ....

Mano சொன்னது…

வாலிபனுக்கு ஆக்கள கொழுவவிட்டு வேடிக்கபாக்கிறதில ஒரு இன்பம். ரண களத்திலும் ஒரு கிழுகிழுப்பு.. அதுபோக, அப்துல் கலாம் கூட நாங்க இப்படி அடிபடுவம் எண்டு நினைச்சிருக்கமாட்டார். அவர் இங்க வந்து ஒண்டும் பிடுங்ககேல்லத்தான்.. ஏனண்டா பிடுங்கிறத்துக்கு உண்மையில ஒண்டும் இருக்கேல.. அது அவருக்கும் இங்க வந்த பிற்கு தெரிஞ்சிருக்கும். நம்ம சனத்துக்கும் அது நல்லாவே தெரியும்.. ஆனா என்ன பள்ளிக்கூடத்துக்கு போற பிள்ளைகளுக்கு ஒரு ‘அணு’ விஞ்ஞானியப் பாத்த சந்தோசம் இருந்திருக்கும்.. அது நீண்டகாலத்துக்கு பிறகு பிள்ளைகளுக்கு ஒரு மாறுதலா இருந்திருக்கும். மற்றப்படி அவர்விட்ட அறிக்கைகளை சீரியசா பார்க்கிறது சுத்த வேஸ்ட்.. அது சுத்த அரசியல் ஞானமில்லாத ஒரு விசயம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.. ஆனா உண்மையில அவர மகிந்த இங்க கூப்பிட்ட காரணம் நிறைவேறிற்றோ இல்லையோ, நம்மிட சனத்துக்கு அது ஒரு மனமகிழ்ச்சியான விசயமாகவே இருந்தது.. இப்ப ஆரார எப்பிடி பார்க்கோணும் பயன்படுத்தோணும் எண்டு கொஞ்சம் சனத்துக்கு விபரமிருக்கு...

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//இப்ப ஆரார எப்பிடி பார்க்கோணும் பயன்படுத்தோணும் எண்டு கொஞ்சம் சனத்துக்கு விபரமிருக்கு// நிச்சயமா முன்னைக்கு இப்ப நிறையப் பரவாயில்லை....

மற்ற படி எல்லாம் சிவமயம் எண்டு சொல்லுவினம்....

கருத்துரையிடுக