வெள்ளி, ஜனவரி 13, 2012

என்னை வாசிக்க முன்

இது ஏலவே இந்த blog பிறந்தநாளில்எழுதிய முன்னுரையில் தீட்டிய சித்திரம்தான் அதன் widescreen original view என் பழைய கவிதை கிறுக்கல்களில் இருந்து உங்களுக்காக தோண்டி எடுக்கப்பட்டு பதியப்படுகிறது. இது எழுதி ஏழெட்டு வருசமிருக்கும்.

ஒரு பருவப்பெண்ணை
சபைக்களைத்து வரும்
தந்தை போல,
என் கவிதைகளை
அரங்கேற்ற அழைத்து வருகிறேன்.

குறுகுறு பார்வை
எட்ட நின்று இடக்காகப் பேசல்
கிட்ட வந்து சட்டெனச் சொல்லி சிட்டெனப் பறத்தல்
அழுக்கு jeans
அரக்கை சட்டை
முள்ளு முள்ளாய் மீசை

பயத்துடன் தான் அழைத்து வருகிறேன்

மங்கிய வெள்ளி
மெல்லிய வெளிச்சம்
சூரியனோ
சந்திரனோ
யாராயிரிப்பினும்
மல்லிகைப் பந்தல் கீழ்
எட்ட ஒரு வேம்பு
கிட்ட ஒரு பலா
அமைதியாய் சலசலக்கும் ஓடை - பெண் சேலை
ஆரவாரமில்லாமல்
கவிதையாக
காதலிப்பீர்களா
என் கவிதையை ?

ஒரு பருவப்பெண்ணை
சபைக்களைத்து வரும் தந்தை போல,
என் கவிதைகளை
கைபிடித்து வருகிறேன்.

அந்த வாசனை எங்கிருந்து வருகிறது ?
சந்தனக் குச்சி ?
வாழைப்பழம் ?
பலகாரம் ?
மல்லிகைப் பூ ?
அவள் நெருக்கம் ?
உறவின் சம்மதம் ?
உற்றார் உவப்பு ?
பெற்றார் பெருமை ?
மற்றார் புகைச்சல் ?
அந்த வாசனை எங்கிருந்து வருகிறது ?

அவளின் வெட்கத்தை ரசித்தபடி
பதட்டமில்லாத நிதானத்துடன்
அனுபவிப்பீர்களா
எந்தன் கவிதையை ?
பயத்துடன் தான் அழைத்து வருகிறேன் 

தாய்க்கும் மகளுக்கும் வேண்டுமானால்
வாயும் வயிறும் வேறாயிருக்கலாம்,
எனக்கும் என் கவிதைக்கும் ஒன்றுதான்.

வாசிப்பதாலேயே நீங்கள் வாசகராகி விட முடியாது.
ஆதலால், வாசிப்பவர்களே !
ஒரு வேண்டுகோள்.
எந்தன் கவிதைகளை
யார் முன்னும் சத்தம் போட்டு படிக்காதீர்கள்.
அது பலாத்காரம் மாதிரி.

என் முன்னேயா ?
அடப்பாவிகளா...
மாமன் முன்னேயே
அவன் மகளை முத்தமிடிவீரோ ?

ஒரு பருவப்பெண்ணை
சபைக்களைத்து வரும் தந்தை போல,
என் கவிதைகளை
கைபிடித்து வருகிறேன்.
ஆதலால் காதல் செய்வீரோ ?

                                                      - இ.த

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

thaankal vibasaaram seija villaije

willswords m சொன்னது…

சற்றுமுன் பூத்திட்டத் தாமரை! உன் - முகம்! கரிய இருட் சோலை! உன் - முடிக்கற்றை! ஒளிச் சொட்டும் கூர் பிறை! உன் - நெற்றி! வான் சிமிட்டும் தாரகைகள்! உன் - இமைகள்! ஆண்கொத்திப் பறவைகள்! உன் - விழிகள்! பஞ்சு மிட்டாய் மென்மை! உன் - கன்னங்கள்! விரிந்து மூடும் பூ இதழ்கள்... உன் - உதடுகள்! வெண்பா தோரணம்! உன் - பற்கள்! பூத் தெளிக்கும் தேன் துளிகள்! உன் - எச்சில்! மதுச் சொட்டும் தேன் கூடு! உன் - நா(க்கு)! வான் முயங்கிடும் கனிகள்! - உன் எழில்கள்; சுகம் வழியும், அதிரச அட்சயப் பாத்திரம், உன்… வசீகரா; பெண்ணே! இப்படி வர்ணனைச் செய்து கடிதம் எழுதி காலத்தை வீணடிக்கும் பொறுமை எனக்கு இல்லை! நான் உன்னைக் காமுகிக்கவில்லை!

பெண் என்பவள்...!
கருவாகி, உருவாகி, காலத்தில், சிசுவாகி;
மெருகாகி, மெருகாகி, மகரந்த மலராகி ;
பருவத்தில் கனியாகி, பாயாகி, தாயாகி;
உருகிக் கிழமாகி, ஓர்நாளில் மறைகின்றவள்!
பெண் - வாழையடி வாழை! கவிதைகள் - மாமல்லபுரம் கலை(யா)ச் சிற்பங்கள்!
Web site names/
Web site addresses:

1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in

2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com

3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in

கருத்துரையிடுக