மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டு கொண்டேன்
ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும் ,
வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதனுஞ் சற்றே இடமிருந்தாக் கூறீரோ ?
- குயில்ப் பாட்டு பாரதி.
கடிதத்தில் வந்த சேதியப் பாத்திட்டு
கக்கூசு, டெலி போன், கலியாணம் எண்டு
அவசரமா கலவரம் செய்வோரே
நீங்கள் கிழித்துப்போட்ட கடிதஉறையில் தான்
அடித்து திருத்தப்பட்ட முகவரி ஒண்டு
address இல்லாமல் கசங்கிப்போய்....
ஆட்டத்தை பாக்க வந்தனியள்
அவளை ரசிக்கலாம்,
தப்பில்லை !
அதுக்குத்தான் அவள் அலங்கரித்து வந்திருக்குறாள்.
ஆனா அவளை மட்டும் ரசித்து விட்டு
ஆட்டத்தை கோட்டை விட்ட கோமான்களே
makeup போட்டு வந்தது அவள்தான்
makeup போடாம வந்தது அவள் கலை
நீங்கள் செய்தீரோ அதை ஒரு கொலை ?
வானொலிப் பாட்டொன்று
வானலைகளை கடந்து வரும்
வெறும் காது கொண்டு அதை உணர்வீரோ ?
வானலையில் கரைந்து போகும்
பருவ நிலா பொழியும் பால் நிலவு
அது தேனிலவு தம்பதிக்கே
எனவெண்ணி
மலராமல் போன அல்லிகளா - அதனால்
நீங்கள் மலடாகிப் போனதறிவேரோ ?
நீங்கள் மலடாகிப் போனதினால்
பால் நிலவு பொழியாமல் போகும்
எண்டு நினைத்தீரோ ?
2 கருத்துகள்:
புரியவில்லை கடிதத்துக்கும் பெண்ணுக்கும் என்ன தொடர்பென்று ..:(
முக்கோணத்திற்க்கும் கடிதத்திற்கும்; முக்கோணத்திற்க்கும் பெண்ணுக்கும் ஏதும் தொடர்பிருக்குதா எண்டு பாருங்களேன்...
என் பாடல்களுக்கு நான் பொழிப்பெழுத கூடாது எண்டு நினைக்குறன், இருந்த போதும் பதில் சொல்லி ஆகோணும்... hint குடுத்து இருக்குறன்...
கருத்துரையிடுக