சனி, நவம்பர் 05, 2011

கனவில் வந்த கவுண்டமணி


டேய் தேங்காய் தலையா எழும்படா டேய்... பாருங்க மகா ஜனங்களே இரவிரவா facebook இல பம்பலடிச்சிட்டு எதோ ரிசேர்ச் பேப்பர் படிச்ச மாதிரி நித்திரை கொள்ளுறன் - டேய் எழும்படா டேய். 

வெளியில நாப்பது டிகிரி பெரநைட்டு, இன்னும் மத்தியான பன்னிரண்டு ஆகேல்லை - போத்திண்டு படுங்க...

மவனே நீ இப்படி சொன்ன எழும்ப மாட்டாய், உனக்கு வேற இருக்கடி... உண்ட பூசை முகம் அட சீ ஆசை முகம் மறந்துபோன நோட்டுக்கு யாரோ கொமென்ட் போட்டிருக்கிரானுக டேய் எலும்பு எழும்பு...

அரக்கப் பரக்க எழும்பி யாரு எண்டு பாத்தா... கவுண்ட மணி... என்ன அண்ணை நீங்களே தானா...

எண்டா உண்ட்ட ரேஞ்சுக்கு பின்ன கொண்டை போட்ட ராய் - கொண்டலிசா ராயா வருவாங்க.. நானே நானேதான்.....   

அண்ணை யாரண்ணை கொமென்ட் போட்டது...அதே பழைய வெட்டி குரூப்பா ? இல்லை புதுசா யாரும் புள்ளைங்க ?

எண்டா டகால்டி மண்டையா... உனக்கே இது நியாயமாடா ? முகம் மறந்து போச்சு மூக்கு மறந்து போச்சு எண்டு நீ விடுற பீலாவுக்கு இந்தெல்லாம் ரொம்ப ஓவர்தான்... மறதி எண்டா வல்லாரை சாப்பிடு யோகா பண்ணு அதை விட்டுட்டு மறந்து போயிட்டனண்டு reminder க்கு ஒரு நோட்டா...

ஒரு விளம்பரம்தான்....கலைக்கு ஒரு விளம்பரம் முக்கியம் அண்ணை ...

டேய் உன்னை எல்லாம் கலைஞன் எண்டு யாரடா சொன்னது... நீயே அறிவிச்சுடுறதா.... அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும் ராஜா... பொழுது போக்கா எழுதிற நீயும் பொழுது புலர எழுதிற அவைகளும் ஒண்டா... அடேய் நூடில்சு, கழுதைக்கும் நாலு காலு யானைக்கும் நாலு காலு ரெண்டும் ஒண்டா... status update இலையே நீ சிலப்பதிகாரம் எழுதலாம் எண்டு நினைக்கிறாய்... கலைஞன் எண்டா மக்கள் ரசிக்கோணும்....

அண்ணை சும்மா தெரியாம பேசாதீங்க... என்ட நோட்டுகளையும் நாலு பேர் லைக் பண்ணுனம்...

ஆமா பண்ணுனம்.... எதுக்கு நீ குடுக்குற ரோதனயில.... நோட்டை எழுதினாமா publish பண்ணினாமா எண்டு விடுறியா.. இல்லையே....நீ இருக்கிற குறுப்பில எல்லாம் ஷேர் பண்ணுறது... அதுவும் வொர்க் அவுட் ஆகேலேண்டா டாக் பண்ணி விடுறாய்... மவனே அதோட விட்டியா... பிரைவட் massege இல அனுப்பிறாய்... அதையும் கவனிக்காட்டி... மட்டவண்ட சிவரில போடுறது...  கோமென்டில கோத்து விடுறது... உண்ட டகால்டி எல்லாம் எனக்கு தெரியும்டா டேய்....

அப்பதான் எங்கட போஸ்ட் முன்னுக்கு வரும் அண்ணை facebook la அப்பிடி ஒரு அல்கோரிதம் வைச்சிருக்கிரானுகள்....

இப்பிடித்தாண்டா தொடங்குவியல், பிறகு உண்ட போஸ்டை நீயே லைக் பண்ணுறது, உண்ட கொமெண்ட நீயே லைக் பண்ணுறது, எண்டு கடசில steve-jibs R.I.P இக்கு கூட லைக் போட்டவனுகள் தெரியுமில்லை....

அண்ணை அவனுகளையும் என்னையும் ஒன்டெண்டு சொல்லதேங்கோ....நாங்கெல்லாம் ஒரு காலத்துல பெரிய விவாதிகள்.... எங்களுக்கெண்டு ஒரு followers இருக்கினம்...

வியாதிண்டு சொல்லு ஒத்துக்கிறன்... ஈரப்பிலாக்காய் தலையா, டிபேட் பண்ணினா ஏ.ல். பாஸ் பண்ணலாம் எண்டு சொன்னவன் தானே நீ... தமிழ் வளக்கவோ இல்லை தலைமைத்துவம் வழக்கவோ டிபேட் பண்ணி இருப்பை எண்டு பாத்தா, சிமிக்கியப் பாத்திண்டு இருந்திருக்கிறாய்... இதுக்கு உனக்கு followers வேறயா ... யார்ரா அந்த கொத்து ரொட்டி மண்டயன் தங்கட காலத்தில சில பெண் விவாத அணிகள்தான் இருந்துது எண்டு கவலைப் படுறான் உண்ட follower ஆத்தானிருக்கும்... எண்டா டீ இல சுகர் இல்லை என்ட மாதிரி டிபேட் இல figure இல்லை எண்டு கவலைப்படுறான்....  டிபேட் இல fire இல்லை எண்டு கவலைப்படாமல்.... 

அண்ணை அரசியலில இதெல்லாம் சகஜமண்ணை....

டேய் என்ட டயலாக் எனக்கேவா... ஒரு பைல் மட்டை, நாலு பென்சில் மாதிரி இருக்கிற உனக்கே அரசியலா, டேய் உடம்பு தாங்காதுடா..... அடேய் வாழ்க்கையின்னா ஒரு என்டர்டெயின்மென்ட், என்கேஜ்மென்ட், ஒய்ல்மென்ட் இதெல்லாம் தேவைதான் ஆனா உனக்கு கவர்னமென்ட் ரேஞ்சுக்கு ஓவர் பில்ட் அப்பா இருக்கே.... அது செரி அந்த ஆசை முகம் உண்மையா இல்லை உட்டாலக்கடியா ?

ஹிஹி... அது கம்பனி சீக்கிறட் வெளியில சொல்லப் படாது....

டேய் பெரிய மைக்ரோ சாப்ட்டு...இந்த டகால்டி எல்லாம் வேணாம் பம்மாம சொல்லு...யாரந்த காந்தக் கண்ணழகி?

முழுசா பொய் எண்டு சொல்லேலாது... ஆனா உண்மையில்லை...

ஏண்டா நீ திருந்தவே மாட்டியா ? அது செரி உலகத்திலேயே கேள்வி கேக்கிறத்துக்கு மனுவல் போட்ட கேப்பமாரி நீ தானே...ஒவொரு பகுதியா - காது, கை கால், கண் எண்டு கடைசியா முகத்துக்கு வருவாயில்லைஅப்ப இருக்குடி உனக்கு ஆப்பு...
டேய் இப்ப நாங்கள் கதைச்சதைக் கூட நீ போஸ்ட் பண்ணுவாய் எண்டு தெரியும் ஆனா மவனே உள்ளதை உள்ள படியே போடவேணும்.. ஏதாவது மாத்தி இருந்தாய் குழாயை வச்சு குடாஞ்சிடுவன்.....அப்படியே இதையும் சொல்லிடு 

மகா ஜனங்களே நோட்ட வாசிச்சா
சும்மா skip பண்ண நினைக்கிறவை லைக் பண்ணுங்கோ,
லைக் பண்ண நினைக்கிறவை share பண்ணுங்கோ ,
ஷேர் பண்ண நினைக்கிறவை ஒரு கோமண்ட போடுங்கோ... அப்பத்தான் கலை வளரும் 


the notes mentioned in this post are:
ஆசை முகம் மறந்து போச்சே....I: 
ஆசை முகம் மறந்து போச்சே....II: 
என்னிடம் கேட்கக்கூடாத கேள்விகள்....: 

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Nice post on social medias' hit rates algorithm
உண்மையாகவே S'Jobs RIP யாரும் like பண்ணினாங்களா :)?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

SEO Optimizers இதை காசை வாங்கிக்கொண்டு செய்யினம், நாங்கள் கலைக்காக செய்யுறம் ;) அவ்வளவே. பாவம் S'Jobs கவுண்டமணியை தெரியாமலே செத்துப் போனார் :(

பெயரில்லா - கவிதையா பெயர்த்திருக்குறான் மொழியை.

எல்லாருமே ஒண்டா வேறயா எண்டுதான் தெரியேல்லை.

செழியன் சொன்னது…

//இப்பிடித்தாண்டா தொடங்குவியள், பிறகு உண்ட போஸ்டை நீயே லைக் பண்ணுறது, உண்ட கொமெண்ட நீயே லைக் பண்ணுறது, எண்டு கடசில steve-jibs R.I.P இக்கு கூட லைக் போட்டவனுகள் தெரியுமில்லை//
இப்ப புதுசா ரண்டு மூண்டு fake profiles create பண்ணி அதால லைக் வேற பண்ணுறாங்களாம்!!!அதையும் சேத்துக்கலாம்!!!:)

கருத்துரையிடுக