வெள்ளி, நவம்பர் 19, 2010

மாணிக்கவாசகர், ஆண்டாள் மற்றும் குணா II

மாணிக்கவாசகர்.............. ஆண்டாள்.................... குணா............. 

உலகெங்கிலும் உள்ள கோடானகோடி ரசிகப்பெருமக்களின் வேண்டுகோளுக்கிணங்க நிறைவுப் பாகத்தை எழுதுகிறேன்... (சும்மா மன்னிச்சு விட்டுடுங்க..)

 (இந்தப் பகுதியை முதல் பகுதியின் தொடர்ச்சியாக வாசிக்கவும் இது அடுத்த பகுதி அல்ல, அடுத்த பக்கம் )

தேவியை கண்ட குணாவின் பரவசம்...துள்ளல் ...ஏலவே சொல்லப்பட்டது...
அந்த துள்ளலுக்கு முன் பக்தனின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும் போது எல்லோரும் போல ராஜா கி போர்டு இன் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு வந்திருப்பார்,

இப்போது தேவியின் புன்னகை, பக்தனின் குதியாட்டதைப் பார்த்து மகிழ்ந்து, மேல்லிதான நாணத்துடன் , கண்கள் கர்வம் கொள்ள , தன் கர்வத்தையும் களிப்பையும் காட்டிக்கொள்ளாமல், வாய்க்குள் குமிழும் சிரிப்பு.

குமிழும் சிரிப்பு எண்டால் , வாய் நிறைய காற்றெடுத்து , அது தொண்டையை அடைக்கும் போது வெடித்து வெளிவரும்.

குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிண் சிரிப்பும் - உபயம் கை தட்டும் ராக்கம்மா
இந்த இரண்டுக் குமுண் சிரிப்புக்கும் வகையில் ஒன்றானாலும் வாகில் ஒன்றல்ல , புரிந்தார்க்குப் புரியும், காதல் தெரிந்தால் புரிவதற்கான நிகழ்தகவு அதிகம்.

ராஜா இதுக்கு என்ன மியூசிக் போடலாம் ?

இது தேவியின் சிரிப்பு, பாகத்துக்கு போட்ட மாதிரி போட முடியாது, வேற மாதிரி எண்டா....
ம்ம்ம்... அது என்ன சிரிப்பு ஆ.. குமிண்... குமிண்...

குமிண்  எண்டா .... எங்கயோ கேட்ட மாதிரி.... ஆ...
வளி குமிழி...
ஓகே...இந்த காத்து குமிழி தண்ணிக்கயிருந்து வெளி வந்து உடயிறமாதிரி மியூசிக் ...
குமுளுதல்...குமிழும் ஒலி...
காதுக்கு கேக்காத சத்தத்தை எப்படி காற்றோடு சேர்ப்பது...

ஒரு கோடிளுத்த மாதிரி ஒரே நோட்ல ஒரு கீயில் 
கீ வேணாம்..குழல்.. இல்லை வயலின்...ம்கும் ...நரம்பு வாத்தியத்த விட காற்று வாத்தியம் தான் வளிக்குமிழ் ஒலி தரும்...

குழலோட சலங்கை சலசலக்க குழல் உச்சம் தொட தாளம் மேளம் சேர்ந்து வெடிக்க ...
குமிண் சிரிப்பு செரியா வருமா ?

ம்கூம் ..இது மகிழ்ச்சி கொப்பளிக்கிற மாதிரி , ஆனா எங்களுக்கு வேற மாதிரி வேணும்...வாய்க்குள்ளேயே நமட்டு சிரிப்பு , அடி வயிற்றில் இருந்து ஒரு சந்தோசக் குமிழி மேலெழுந்து கட்டுக்குள் அடங்காது வாய்க்குள்ளேயே அதை யாருக்கும் தெரியாமல் உடைத்து... அகா மாட்டிக்கிட்டியா என்ற மாதிரி ஒரு அசட்டு கர்வம்...
சந்தோசம் + வெட்கம் + கர்வம் + இத்தியாதி + இத்தியாதி + ....

என்னைய்யா இது ஒரே பேஜர் சிரிப்பயிருக்கு....

ம்ம்ம்......... ஓகே இப்படி வெச்சுக்கொள்ளலாம் வெற்றிக் களி நடம்...

சுப்பர் அதே தான் ... ஆனா வெளியில் காட்டக் கூடாது.. அமுக்கமா....

சங்க நாதம் ஆனா ஜதி அலட்டாம மெதுவா நிதானமா...
ஒரு பக்குவமான வெற்றி களிப்பு நடனம்...

அப்டியே வச்சுக்கொள்ளலாம்....


பக்தனை ஆட் கொள்வதில் தேவிக்கு அத்தனை பிரியம்.நாடகம் ஒன்று அரங்கேற்றி தானே பரீட்சை வைத்து , அவன் வெல்ல வீணும் அன்று அவாப்பட்டு , வெல்லப்போகிறான் எனத் தெரிந்ததும் , மகிழ்ந்து , மெலிதான கர்வத்துடன் , பெரிதாகக் காட்டாமல்...திருவிளையாடல்...அபிராமி அபிராமி அபிராமி...

வெற்றிக்களி நடம் , சங்க நாதம், வெற்றிக் களி கொள்ள ஒரு நடம் ...
தோம் தத் தீம கிட ...
தோம் தத் தீம கிட ...

மீள ஒருதடவை இந்த இடத்துக்காக அந்தப்பாடலை பாருங்கோ ...
http://www.youtube.com/watch?v=JJEyj_QAN3k
பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க....
காத்திருந்த காட்சி இங்கு காணக்கிடைக்க....
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே!
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே!
                                                                                             - வாலி 
கடைசி ஓவர்ல ஒரு ரன் எடுக்க வேணும், இரண்டு விக்கட் இருக்கு , form ல இருக்கிர batsman...
எவளவு நிதானமா ஆடுவரோ அவளவு நிதானம்..வெற்றிதான் உறுதியாயிட்டுத்தே....

பார்த்து பார்த்து கண்கள் இரண்டும் பூத்தனவே ...நீ வருவாய் என...
அப்படி பூத்த கண்கள் உனைப் பார்த்த பின்பும் பூத்தே இருக்கின்றது...
தேடி தேடி பூத்திருந்தத கண்கள் ... சிவந்து காய்ந்திருந்த கண்கள் உனைக்கண்டதும் குளிர்ந்து உன் திவ்விய தரிசனத்தை அள்ளிப் பருக அகலத்திறந்து பூத்திருக்கின்றன ...இரண்டு பூத்தலுக்கும் வேறு பாடு உண்டு. காத்திருந்த காட்சி கண்ட பிறகும் ஏன் பூத்திருக்கு ....காத்திருந்த காட்சி இங்கு காணக்கிடைத்திருப்பதால்....

ஒரு நல்லா விளையாட்டு வீரனுக்கு அழகு என்ன ....
தான் தோற்கப் போகிறேன் எண்டு தெரிந்தாலும் பந்து வீச தயாராகும் எதிரணி வீரனிடம் மேற் சொன்ன வெற்றிக்கு தயாராகும் பட்மனுக்கு ஒரு பரிதாபம் வரவேணும்....
இந்த வெற்றி எனது மட்டுமல்ல உனக்கும்தான் இருவரும் சேர்ந்து ஒழுக்கமுற சிறப்பாக விளயடியதே வெற்றி எனும் எண்ணமே அழகு.... Jhonins always play the game

ஊன் உருக உயிர் உருக தேடின், தேன் தரும் தடாகம் அபிராமி ...
ஊனும் உயிரும் உருகுமாறு சுவை கொண்ட தேன் தரும் தடாகம் அபிராமி ...
(ஒரு வகை சிலேடை)

இந்த மதி வருக வழி நெடுக ஒளி நிறைக; எல்லோர் வாழ்விலும் மதி வருக வழி நெடுக ஒளி நிறைக....
(இங்கே பக்தன் தனக்கு வேண்டுகிறான ஊருக்கு வாழ்த்துகிறனா என்பது வாலிக்கே வெளிச்சம்)

இதுக்கு மேலே வயது வந்து, விளக்கமும் இருக்கிறவை மட்டும் முறையா ரசிக்கலாம்... மற்றவை வாசிக்கிறது அவை அவயிண்ட விருப்பம்...

இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை 
நடம் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி வேதப் பரிபுரையே.
                                                                                                                  - அபிராமி அந்தாதி 42
முதலில் இந்தப் பாடலின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம்.....

இது ஒன்றும் சிக்கலான பாடல் அல்ல, அர்த்தம் நேரடியானது தான்....

பரிபுரையான தேவியின் அழகை அழகாக சொல்லும் பாடல்...

தேவியின் ஒவ்வொரு கொங்கையும் ...
இடம் கொண்டளவு விம்மி ...தனக்கிணையான மறு கொங்கையுடன் இறுகி.. (கொஞ்சம் பௌதிக அறிவுடன் கற்பனை செய்யுங்கள்..அருகருகே உள்ள இரு பலூன்களுக்கு காத்தூதும் போது வலதுள்ளது இரு புறமும் விம்மும் போது இடது புறம் மற்ற பலுனால் இறுக்கப்படும்...)
இப்போது இந்த தனங்களை எப்படி வாரி அள்ளிக்கட்டுவது ? முத்து மாலை கொண்டு தான்... அனால் ..தனங்கள் முத்தின் அழுத்தத்தை தாங்குமா ? அதனால் இளக்கி கட்டி...

அட ஆண்டவா இந்த வரிகளை எழுதியவன் பக்தனா.....

இப்படிப்பட்ட சிறப்பு பொருந்திய கொங்கைகள் சிவனை சும்மா விடுமா ?
இந்த மலை மார்பு அதன் மதர்ப்பு அந்த மலை மார்பனை, மலையான் மருகனை (முருகன் சிவன் இருவருமே மலையான் மருகர்களே... இங்கே சிவனை குறிக்கின்றது.. மலை மார்பன் என்பதுஇறைவன் வலிய நெஞ்சை (குறிக்கும்) ஆட்டுவிக்கின்றது...( நெஞ்சை நடம் கொண்ட நாயகி )

தேவி இறைவனை ஆட்டுவிக்கிறாள் என்றால் , அது நல்லெண்ணத் தோடன்றி , வழக்கமான விளக்கமல்ல... "கொள்கை நலம் கொண்ட நாயகி" ஆகையால் இந்த நாயகி சொல் படி ஆடுதல் இறைக்கு ஒன்றும் இழுக்கல்ல.

நல்லா பாம்பு படம் போன்ற அல்குல் உடையவளே....(இது இன்றைய சினிமா பாட்டில் என்றால் சென்சார்...) (மேலதிக விளக்கத்திற்கு ஒன்லைன் மதுரை தமிழகராதியில் அல்குல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்...) (பாம்பு படம் உவமை நயம் புரிகிறதா ? )

நண்பன் பாரதி சொன்ன பிறகுதான் அல்குலிற்க்கு இடை என்கிற அர்த்தம் பெரிதும் பொருந்தும் போலிருக்குறது. "பாம்பை அரையில் வடம் போல கட்டிய இடை" நன்றி நண்பா.....ஆனால் வடம் என்றால் நல்லபாம்பு படம் என்று நயம் சொன்னால் தப்பா .... அது ஒரு அழகிய உவமானம்.

பணிமொழி :- குளிர் வார்த்தைகள்
வேதப் பரிபுரை: வேதங்களே அவள் சிலம்பு...
(அபிராமி அந்தாதி முழுமையாக விளக்கத்துடன் இங்கே)

இனி குணா...

தேவியின் விழிகளை பார்த்த படி வழிப் போனவன் அவள் அருள் பிரசாதம் பெற காதிருக்கப்பணிக்கிறான்... அருகில் தேவி...முத்துமாலை அணிந்த தேவி....ஜேக ஜோதியென ஜொலிக்கும் தேவி (பாடலில் கதாநாயகியின் உடை அலங்காரத்தை காண்க இப்பாடலுக்கான பொருத்தம் புரியலாம்...) 

இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடம் கொண்ட கொங்கை மலை கொண்டு

இந்த வரிகளுக்கான விளக்கம்; காட்சியே சாட்சி; பார்க்க


பாடலின் மீதி வரிகளுக்கான அர்த்தம் இடம் கொண்டு " பாடல் முடிந்த பின் வரும் interlude ல் காண்க
பக்தன் தேவியை சேர்வதை இசையும் நடமும் காட்சியும் சேர்ந்து பிரமிக்க வைக்கும்....

அதில் சிவலிங்க விளக்கமும் சேர்ந்து தரப்பட்டிருக்கும்...

அர்த்தநாரீஸ்வரர், சிவன் என்பதை காட்சி சாட்சி சொல்ல விளையும்..

இதை பற்றி மட்டும் தனியாக ஒரு பகுதியை எழுதலாம்.. அனால் இதுவரை தந்த முன்னுரையுடன் உங்கள் கற்பனைக்கு மீதியை விடுவதே சிறப்பென கருதுகிறேன்...

இந்த வாசிப்பு உங்களை மீள ஒரு தடவை குணா படம் பார்க்கவோ அல்லது அபிராமி அந்தாதி படிக்கவோ தூண்டினால் மகிழ்ச்சி.

-இ.த

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல காலம் சங்கராபரணம்/கல்யாணி விமர்சனமில்லை..எங்கே பஞ்சமமும் தைவதமும் உச்சத்தில் ஏறுது இறங்குது என்று சொல்லவில்லை
Interesting comparison..

BTW, Kamal was great in a great movie..

பெயரில்லா சொன்னது…

ஆமா கேக்க மறந்துட்டேன்..சங்கீத ஞானமுண்டா.. இல்லை தவளை ஞானம் தானா :)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

பரியோவான் கல்லூரியில் பாட்டு வகுப்பில் பாட்டு பாடச்சொன்னா பாட்டை கவிதையா சொல்லி முதுகு பழுத்த வரை சங்கீத 'ஏதோ' உண்டு.

ரசனை மட்டும்தான் ஞானம் எல்லாம் இல்லை....

கருத்துரையிடுக