எதோ ஒரு தருணம்
இறந்து தொங்கிக்கொண்டிருக்குறது.
அந்த புகைப் படத்தின் மூலையில்
நிறமிழந்த பகுதிக்குள் ஒளிந்திருக்கு
என்னைத் துரத்தும் இருட்டு.
ஆணியில் தொங்கும்
அந்த மரச் சட்டங்களுக்குப் பின்னால்
ஒரு சிலந்தி இல்லாத வலையில்
யாருக்காக என்று தெரியாமல் இறந்து கிடந்தது
ஒரு கட்டெறும்பு.
மரச்சட்டங்களுக்கிடையில்
ஒரு நீர்க்காட்டின் படம்.
இங்கே ஒரு நீர்க்காடு இருந்தது என்பதை
நிலவரிக் கோடுகள் சான்று சொன்னது.
நீர் வற்றி காடு ஒற்றை மரமாய்.
நீர்க்காட்டின் நடுவே நின்ற
அந்த ஒரே மரத்திற்கு எஞ்சிய சில கிளைகளில்
மிஞ்சி இருந்தன சில இலைகள்
எந்த சூரியனுக்காகவோ ?
மூலையில் நிறமிழந்து போனது
சூரியனாய்க் கூட இருக்கலாம்.
தலைவாருகிற போது
எதிரே நிலைக்கண்ணாடியில் ஒரு நீர்க்காடு.
என் கண்ணோரம் ஒரு அருவி,
அரிச்சந்திரன் கட்டின தாலி மாதிரி எனக்கு மட்டும் தெரியும்.
என் நெஞ்சோரம் ஒரு நெருஞ்சி,
சகுந்தலை மோதிரம் மாதிரி எனக்கு மட்டுமே நினைவிருந்தது.
அரசனாய் இருந்து வெட்டியானாய்,
வெட்டியானிலிருந்து மீண்டும் அரசனாய்.
ம்கூம் , கலி என்னை விட்ட பாடில்லை.
துரத்திக் கொண்டே இருந்தது அந்த அந்தகாரம்.

ஏடும்
எழுத்தாணியும்
சில கவிதைகளும்
நானும்;
கூடவே அந்த இருட்டும்.
16 கருத்துகள்:
ஆணியில் தொங்கும்
அந்த மரச் சட்டங்களுக்குப் பின்னால்
ஒரு சிலந்தி இல்லாத வலையில்
யாருக்காக என்று தெரியாமல் இறந்து கிடந்தது
ஒரு கட்டெறும்பு.
- மனதைத் தொட்ட வரிகள்... நல்ல கவிதை.. நன்றி
அழகான வரிகள்.
Life =துறத்தல் ->Success+வெறுமை
"நீர் வற்றி காடு ஒற்றை மரமாய்"
அந்தகாரக் கவிதை அழகு!
அழகான வரிகள்.
நன்றி கோவி. வந்ததும் தந்ததும் அன்பும்.
பெயரிலா நண்பர்களே நன்றி. நல்ல ரசனை.
நன்றி வலைஞ்ஞன்.
"எல்லாப் படங்களிலும்
எதோ ஒரு தருணம்
இறந்து தொங்கிக்கொண்டிருக்குறது."
ஆழம்.
நன்றி கேதா. அது தனித்து ஒரு கவிதை இல்லையா...
நன்றி விச்சு.
//நீர்க்காட்டின் நடுவே நின்ற
அந்த ஒரே மரத்திற்கு எஞ்சிய சில கிளைகளில்
மிஞ்சி இருந்தன சில இலைகள்
எந்த சூரியனுக்காகவோ ?//
இலைகள் ஏன் சூரியனுக்காக காத்திருக்கவேண்டும்? சரி மரம் தான் காத்திருக்கிறது என்றால், அது சூரியனுக்காகவா? மழைக்காகவா? நீருக்காகாவா? நீர் வற்றிப்போனதுக்கு மழையில்லை, மழையில்லை என்பதற்கு சூரியனை காரணம் சொல்லுரீறோ? எல்லாமே வறண்டு இருக்கும் நிலையில் சூரியன் வந்தால் இருக்கும் சொட்டு கூட வற்றிவிடாதா?
//ஏடும்
எழுத்தாணியும்
சில கவிதைகளும்
நானும்;
கூடவே அந்த இருட்டும்.//
இருட்டுக்கு நண்பனாகாதவன் எழுத்தாணி நன்று ..பிடிக்கமுடியாது என்பது என் தாழ்மையான எண்ணம்! இதில் சந்தோஷமா துக்கமா என்று தெரியவில்லை .. இருட்டினாப்பிறகு வெளிச்சத்துக்கு அலைவதில் ஒரு சுகம் என்றால், ஆந்தையை இருப்பதில் இன்னொரு சுகமும் கூட!
//இலைகள் ஏன் சூரியனுக்காக காத்திருக்கவேண்டும்?// உணவு செய்ய - இந்த உலகத்திற்கே.
படத்தில் - நிழலில் தான் சூரியனின் பிம்பம் சுரண்டப்பட்டு இருட்டாகியதாக ஒரு பிரமை - நிஜத்தில் எல்லாம் சுழன்றுகொண்டே இருக்க பகலும் இரவும் மாறி மாறி.
//இருட்டுக்கு நண்பனாகாதவன் எழுத்தாணி நன்று ..பிடிக்கமுடியாது என்பது என் தாழ்மையான எண்ணம்! // இருட்டுக்குல்லேயே இருந்து விடக்கூடாது என்பது என் தாழ்மையான எண்ணம் - வெளியே வருவது எழுத்துக்கும் நல்லது.
பிறப்பே ஆந்தையானால், ஓகே காகம் ஆந்தையாவது, ஒரு அனுபவத்திற்க்காய் இருட்டுக்குள் வாழப்பழகலாம், மீண்டும் பகலிலும் வாழ்வது - எழுத்து அந்த திராணி தரும்.
Sylvia Plath தெரியுமா சுஜாத்தா கூட அது சுற்றி ஓரி திரில்லர் எழுதி இருப்பாரே.
எது எப்படியோ, வாழத்தானே வாழ்க்கை......
////இலைகள் ஏன் சூரியனுக்காக காத்திருக்கவேண்டும்?// உணவு செய்ய - இந்த உலகத்திற்கே.//
நான் சொல்லவந்த கருத்து .. இலை கொட்டி நா வறண்டு போயிருக்கும் நிலையில் தண்ணீருக்கு அலைவேனா இல்லை நாளைக்கு சோறு கிடைக்க நெல்லு விதைப்பேனா? என்பதே ..
இந்த இருட்டு மாட்டர் ..
வெளிச்சத்துக்காக பெரிதாக பழக்கபடுத்திக்கொள்ள தேவையில்லை .. இருட்டு அப்படியில்லை .. இருந்தால் மாத்திரமே அது புரியும் இல்லாவிடில் மிரட்டும் .. இருட்டை அப்படி ஈசியாக எழுதிவிட முடியாது என்று தான் சொல்லவந்தேன் தலைவரே!
ஜேகே நீங்கள் இந்த உவமானத்தை வேறு கோணத்தில் பார்க்குறீர்கள், அட உங்களுக்கு அதே புளப்பாய் போச்சு.
இது ஒற்றைப் பரிமாணத்தில் சிந்திப்பவர்களுக்குப் புரியுமா? அல்லது வேறு தளத்தில் சிந்திக்கவேண்டுமா :-) ?
நீங்கள் எதுவுமே சிந்திக்காட்டி சும்மாவே விளங்கும், இல்லை விளங்கிடும்.... :)
கருத்துரையிடுக