திங்கள், ஏப்ரல் 23, 2012

காதலிக்க நேரமில்லை. III வேலை

முந்தய பாகம்

வேலை


கடைசியாகக்
காதலிக்கலாம் என்று தீர்மானித்தேன்
அதற்காக இவ்வளவு நாளும்
"காதல் வேண்டாம்" என்று தவம் கொண்டிருக்க வில்லை.



இனி காரட்டை சாப்பிட்டே ஆவது என்று முடிவெடுத்தேன்.
கவிதை எழுதி கன நாள் ஆயிட்டுது.
என்னைப் போலத்தான் என் நண்பன் ஒருவனும்.
இனிக காதலிப்பது என்று தீர்மானமாக இருக்குறான்.
அவன் வெள்ளிக்கிழமை தவறாது கோவிலுக்குப் போகிறான்.

என்னையும் வரச் சொல்வான்.
எனக்கும் விருப்பம் தான்.
அனால் வேலை அவசரத்தில் வெள்ளி மறந்துவிடும்.
அதற்குப் பிறகு சனி ஞாயிறு மச்சம்.
செவ்வாயும் போகலாம் தான்.
அதென்னமோ வெள்ளி விசேசம்தான்.

கவிதை எழுதி கன நாள் ஆயிட்டுது.

முற்றும்

எழுதியது: செப்டெம்பர் 2005 


மச்சம் என்பது கடலுணவுகளை குறிப்பினும் மாமிச உணவுகள் என்று பொதுமைப் படுத்துவது எங்கள் பேச்சு வழமை.

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Argg.. பொட்டென்டு முடிஞ்சு!

எஸ் சக்திவேல் சொன்னது…

இன்னொரு முறை காதலித்து வெற்றி பெறுவீர்கள் - பிறகு கவிதையே எழுத மாட்டீர்கள்.

எஸ் சக்திவேல் சொன்னது…

மச்சம் = நான் வெஜ் என அரும்பதவுரை போடவும்.

எஸ் சக்திவேல் சொன்னது…

The picture is 'really' classic.

ஜேகே சொன்னது…

//கவிதை எழுதி கன நாள் ஆயிட்டுது.//

நானும் எழுதுறது எல்லாம் கவிதை என்று நினைச்சு கொஞ்ச நாளுக்கு பிறகு பார்த்தா அது வெறும் எழுத்துக்குப்பை ... இனியாவது கவிதை எழுதுவம் எண்டா, எங்கே அதுவும் இன்னும் கொஞ்ச நாளுக்கு பிறகு குப்பையாயிடுமோ எண்ட பயத்தில நல்ல கவிதைக்கு கற்பனை தேடி தேடி .. நாக்கு வறண்டு தொண்டை உளர்ந்து .. கடைசில டேக்ஸ்வில்லர் பாலைவனத்தில இருக்கிற சின்ன நீர்குட்டைய கண்டவுடன் அதை அப்பிடியே குடிப்பம் எண்டா பக்கத்தில விஷ போத்தில், தக்காளி யாரோ நான் சாகட்டும் எண்டு கலந்துவிட்டிருக்கிறாங்க எண்டு தெரிஞ்சு குடிக்காம உருண்டு ஓடி தலையால் நடந்து கைலாயம் போனால் அங்கே அவள் சிவனை பார்த்து கேட்கிறாள்
"எம் பெருமானே! தலையினால் நம்மை நோக்கி நடந்துவரும் இப் பெண் யார்?"

ஏ.எ.வாலிபன் சொன்னது…

பெயர் சொல்ல நண்பருக்கு வணக்கம், பொட்டென்று முடுஞ்சுதுதான். அனா அதுதான் இதுக்கு பொருந்தும் என்று நான் நபுகிறேன், பருவ உணர்ச்சிகளை சிலாகிப்பதல்ல இந்த தொடரின் நோக்கம்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சக்தி அண்ணை இது என்ட கதை எண்டு நீங்களும் முடிவெடுத்தது கொஞ்சம் வருத்தமே, சுகந்தி அக்கா கோவிக்க மாட்டாகளா ? தொடர்ந்து என்னை ரசிப்பதற்கு நன்றி.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

அரும்பத உரை உக்திக்கு நன்றி சக்தி அண்ணை.

எஸ் சக்திவேல் சொன்னது…

>சக்தி அண்ணை இது என்ட கதை எண்டு நீங்களும் முடிவெடுத்தது கொஞ்சம் வருத்தமே

நான் கவிதையின் கதாநாயகனுக்கே அதைச் சொன்னேன்.

BTW ஒன்றுக்கு மேற்பட்ட சுகந்திகள் உண்டு. எனவே எந்தச் சுகந்தியைச் சொல்கிறீர்கள்? :-)

பெயரில்லா சொன்னது…

இதெல்லாம் ஒரு கவிதை எண்டு உங்களுக்கு இது சரிவராது பேசாமல் அடுத்தவண்ட ஆக்கத்துக்கு comment போடுங்கள்

எஸ் சக்திவேல் சொன்னது…

அமரர் கல்கி- "ஏதாவது எழுதினால் நாலுபேர் பாராட்டவேண்டும். இல்லாவிட்டால் திட்டவாவது வேண்டும்"

வாழ்த்துக்கள் வாலிபன் :-)

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சக்தி அண்ணை உங்கள் அனுபவம் சமாளிப்பில் தெரிகிறது. உங்கள் ஆதரவுக்கு நன்றி.

இதை கவிதை எண்டு நானும் சொல்ல மாட்டேன் பெயர் சொல்ல விரும்பாத நண்பரே, உங்கள் ஆலோசனைக்கு நன்றி. நேரம் வாய்ப்பை பொறுத்து நான் comment பண்ணுறன். கவிதை என்று நீங்கள் ஏம்மாற்றம் கொண்டது பற்றி என் வருத்தங்கள்.

கருத்துரையிடுக