வெள்ளி, அக்டோபர் 08, 2010

மாணிக்கவாசகர், ஆண்டாள் மற்றும் குணா





சைவ நாற் குரவர்
 சைவ சமயம் இறைவனை உணரும் வழிகளாக நான்கு பாதங்களைஅடையாளம் காட்டுகிறது.

  1. சரியை 
  2. கிரிகை 
  3. யோகம் 
  4. ஞானம் (சீதாவை தேடிய ஞானம் இல்லை ) 
இதில் ஞானம் என்பது தனி வகை. சாதாரணர்களோடு வாழும் அல்லது வாழப் பணிக்கப்பட்ட அசாதாரணர்களே இவ்வழி இறை உணர்ந்தவர்கள். உணர்ந்த வழி காதல்.... மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல..... அதயும் தாண்டி புனிதமானது!


மாணிக்கவாசாகர்

Bio-Data:

பிறப்பிடம்: வாதாவூர் (மதுரையில் இருந்து சுமார் ஏழு மைல்)
தொழில்: அமைச்சர்
                   பிரதான அமைச்சகம்
                   பாண்டிய அரசு
                   மதுரை.
மணிவாசகரின் காதல் தனித்துவமானது. (புரட்சிகரமானது எண்டும் சொல்லலாம், இல்லாட்டி கொஞ்சம் விவகாரமானது எண்டு சிலர் சொன்னாலும் ஆச்சரியமில்லை)

தன்னை தலைவியாக வரித்து , இறையை தலைவனாக நினைத்து கவிதை செய்த முதல் பெம்மான்.

அந்தக் காலத்திலேயே தன் கவிதை எழுத assistant வைத்த கவிஞ்ஞர்.
உதவியாளர் பெயர் சிற்றம்பலம்.
அவர் ஒரு பெரிய dancer. அம்பலத்தில் தான் perform பண்ணுறவர்.
அம்பலம் ஏன்டா சும்மா இல்லை அது golden stage.

எது எப்பிடியோ மணிக்கு தெரியாது தான் காதலிக்குறது சிற்றம்பலம் எண்டு. சிற்றம்பலம் மணி இன்ட கவிதைல ஒரு இது. அதான் மணிக்கு தெரியாம assist பண்ணினவர்.

தமிழ் காதல் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பாடல்களுக்க சொந்தக்காரர் மணிவாசகர்.

இறையை கை கால்கள் கொண்ட மனித உருவுக்குள் கற்பனை பண்ணி ஒரு உறவு வைத்து அழைத்து அதில் உணர்வு மிக வாழ்தல் ஒண்டும் தமிழுக்கு புதிதல்ல. அந்த உறவு காதலாகி கனிவது கொஞ்சம் rare தான்.

ஒரு ஆணே ஆணின் பேரழகில் மயங்கி , அந்த அளப்பெரும் சோதியி சேர்வதற்கு தனக்குள் இருக்கும் பெண்ணை தேடுவது கொஞ்சம் புதுமையே. அந்தக் காலத்தில் இது புதுமை, அதுவும் கவிதைக்கு இந்தக் காலத்தில் ......

சாம்பிள் மாணிக்கம்:

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155


start உம் end உம் இல்லா ஒரு rare light நம்ம அண்ணாச்சி அண்ணாத்தை பற்றி நங்கள்லாம் சும்மா speaker பூட்டு பெரும்ம்மாய் பேசோக்கை ,சும்மா சோக்கா blade கணக்கா கண்ணு இருக்க பொண்ணு நீயி இன்ன மட்டயயிடிய ?ஏன்மா காதுல ஈயத்த கரைச்சு ஊத்திடய்ங்கலா ?

சாதரணமா அண்ணாத்தை பேர தூரக்கா கூவினகா கூட feel pannuviye....இன்னைக்கு என்னாச்சும்மே ?நல்ல கீதே கதைஇன்னிக்கு இவ்ளோ நடந்தும் எதுவுமே நடக்காத கணக்கா silenta இருக்கியே ?

என்ன அண்ணாத்தை நினபில dreamz ஆ ? ? ?



(மணி மன்னிப்பாராக....)

ஆண்டாள் 

தமிழ் கவிதை உலகில் காதலை பெண் பதிவு செய்த தொன்மையான பாசுரங்கள் ஆண்டாள் நாச்சியாரது திருப்பாவை.

மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!............ இது எல்லோருக்கும் தெரிந்த பாசுரம் எனினும்

பதினைந்தாவது பாசுரம் மேற் சொன்ன மணி வாசகர் பாடல் போல இருக்கும்...




எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?*
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்*
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்*
வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக*
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை*
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்*
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை* மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.


பொருளை தேடி தெரிந்து கொள்க....எல்லாப் பொருளையும் தேடி தெரிவதே வாழ்க்கைக்கு நல்லது

குணா






பைத்தியம் என்பது சார்புத் தத்துவத்தை எடுத்துக்காட்டும் நல்ல உதாரணம்.

சாதாரணர்கள் (நாங்கள்) மத்தியில் பைத்தியத்தின் frame (of mind) அசாதாரணமானது ஆதலால் எங்களுக்கு அந்த அசாதாரணம் பயித்தியம். (புரியா விட்டால் பார்க்க படம் போராளி)

கால ஓடத்தில் பயித்தியங்கள் சில பரமார்த்த குருக்களாக அறியப்ப்பட்டதுண்டு. ஜனநாயக உலகம் தங்கள் frame (of mind) ஏ சரியானது / இயல்பானது என முடிவு கட்ட காரணம் அதே frame (of mind) ல் பெரும்பாலோனோர் இருப்பதே.

காலம் ஒவ்வொரு frame க்கும் கிடைக்கும் / குடுக்கும் அங்கீகாரத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது.

தாய் சொல் தட்டாத ஒரு குழந்தை. தனயன் வயது முப்பதுகளின் ஆரம்பத்தில். பெரும்பாலானோர் அவனை பயித்தியம் என்பர்.

ஏலவே குறிப்பிட்ட இருவரும் (மணி மற்றும் ஆண்டாள்) ஆரம்பத்தில் பயித்தியம் என்று தண்டனை வரை போனவர்கள்.

இதோ இவனும் காதலிக்கிறான்.....

இதுவரை புராணங்கள் பிராட்டியை சபித்து உலகனுப்பி ஈசனை காதலிக்க வைத்திருக்கிறது. ஆனால் முதன் முதல் பிராட்டியை ஒரு 'பிராந்தன்' காதலிக்கிறான் ....

அபிராமியை காதலிக்கிறான் இந்த குணா...

இந்த பயித்தியம் எனப்படும் பக்தன் ஒரு வினாதமான முரண்... பல சமயம் அசாதியமான தத்துவங்களை சாதாரனமான தர்கங்களில் வெளிப்படுத்தும் சில சமயம் மிக சுலபமாக ஏமாந்து போகும்.

அபிராமியின் வருகையை எப்படி இருக்கும் ?எப்படிக்க் கண்டு கொள்வது அந்த ஈஸ்வரியை ?கண்ணுக்குள் அடங்காத அந்தப் பேரெழிலை சொல்லுக்குள் அடக்குவது எப்படி ?

இப்படி கட்டியம் கூறுகிறான் ஒருத்தன்....

மங்கள இசை முழங்க... பிப்பிரிப்.... பிப்பிரிப்.... பீ ... எனமுத்து வடங்கொண்ட நங்கை தூய உருப் பளிங்கு போன்ற மங்கை அபிராமி வருவாள்.

அவள் வருகை ஆயிரம் கோடி சூரிய உதயம். ஏற்கனவே தன் குழை கொண்டு மதி தந்தவள்......(அபிராமிப்பட்டர்) இம்முறை ஆதவனின் அழுக்கு எடுப்பாள். பவர்ணமியில் சீறத் திருவுளம்....

இந்தப் பாடலுக்கானவர்கள் : இளையராஜா , கமல் காசன் , சந்தான பாரதி , வேணு, லெனின், ஜேசுதாஸ்.......

அபிராமி தரிசனம்:

கட்டியம் சொன்ன மாதிரி அபிராமி வருகிறாள்.இதோ அவனை கடந்து போகிறாள்...அசைந்து கடந்தது முத்து ரதம்.............

கடந்து போகிற காட்சிக்கு மனசுக்குள் மத்தாப்பு போடும் ராஜா...வீணையா, கீ-போர்டா தெரியாது....

திகைத்து நிக்கிறான் குணா... கடந்து சென்று விட்டாள் அபிராமி...நிலை குலைந்து சரிகிறான் பக்தன் .....கண்களில் விழுந்த காட்சி கண் மணிக்குள்ளேயே நிற்கிறது ...கண்மூடி மெல்ல அனுபவிக்கிறான் .....“என் அபிராமியா ? “ - தன்னை தானே கேட்டு கொள்கிறான் ....

அவன் முகத்தில் மந்தகாசம்.... அவளே தான்....உலகமே அவனை சுற்றி வருவது போல உணர்கிறான் ...

கண் விழித்துப் பார்த்தால் காணவில்லை.....துணுக்குற்று நிமிர்ந்து எழுந்து ஓடுகிறான் தேடுகிறான்....

கோயில் மணி அவனை ஆசிர்வதிதனுப்புகிறது...அபிராமி தன்னை தேடி வந்தாள் என்று இறுமாந்திரிந்தவனின் தலைக்கனத்தை குட்டி அனுப்புகிறது மணி...

ஓடுகிறான்...!

திசை மாறி திரும்பியவனை நிறுத்தி ...திரிபுர சுந்தரியி நோக்கி....திசை காட்டுகிறது கை காட்டி மரம்.

அவன் அஞ்ஞான இருள் நீங்கி பேரருள் ஒளி பிரகாசிக்கிறது...ஆதவனின் அழுக்கு எடுக்கிறாள் அபிராமி. (பார்க்கப் பாடல் - இது காட்சி அமைக்கப்பட்ட விதம் அழகு)

பகல் நேரத்து பௌர்ணமி அவள்.
வேதம் அவளின் பரிமாணங்களை சொல்ல விளைகிறது...பேசாப் பொருளை பேச விளைகிறது பாடல்.


நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச சாயகி
சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு வாய் அகி
மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று ஆய கியாதியுடையாள்
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் - அபிராமி அந்தாதி 50

நாயகி : ஈசனின் தலைவி அல்லது சக்தி
நான்முகி : நாலு முகம் கொண்டவள் / பிரம்ம சக்தி
நாராயணி : நாராயணனின் சக்தி
கைநளின பஞ்ச சாயகி : இந்த வகை மலர் அம்புகளை கைகளில் ஒய்யாரமாக வதிருப்பவளே
சாம்பவி : நெற்றி கண் உடையவள் அல்லது சம்பு (சிவன் ) இக்கு பிரியமானவள்
சங்கரி : சந்தோசத்தையும் இன்ன பிற பொருள் களையும் ஆக்குபவள்
சாமளை : எழில் உரு வானவள்
சாதி நச்சு வாய் அகி : நாக பாணி
மாலினி : மாலை போன்றவள்
வாராகி : உலகளந்தவள்
சூலினி : சூலம் தரித்தவள்
மாதங்கி : கரிய திருமேனி நிலவு நெற்றி கொண்டவள்
( just to remind MIA : மாதங்கி அருள்பிரகாசம்.)

என்று ஆய கியாதியுடையாள்: மேற் சொன்ன list உள்ளது போல பல வடிவானவளே ...

------------------

பட்டர் பாடும் போது

.... சரணம் அரண் நமக்கே என்பார் அவருக்கு அபிராமியின் பாதுகாப்பு அந்த தருணத்தில் அவசியப்பட்டது

இங்கே மூன்று முறை சரணம் என்பார்...குணா ஒரு எதிர்பார்ப்பு அற்ற பக்தன் ...directa சரண் அடைந்து விடுகிறான்------------------

அபிராமியின் பாதங்களில் குணாவின் இதயம் சரண் அடைவதை அழகாக காட்சிப் படுதியிருப்பதை காண்க.

தன் இதயம் சரண் புகுந்து கொண்டதை மூன்று முறை கூவிக் கொண்டாடுகிறான் இந்த பக்தன்

தேவியின் காவலன் அவனை ஒரு நிலைப்படுதுகிறான்...

சரணத்தின் நினைப்பில் திளைத்திருந்த வேளை குறிக்கிட்ட காவலன் செயல் ... மேலும் காத்திருக்க சொன்னது அவனுக்கு கோபம் வருகிறது உடனே மறந்தும் போகிறது...காரணம்....அபிராமி! ..... அபிராமி! .... அபிராமி .....!

நடன இயக்குனர்களுக்கு ஒரு சவால்;

ஜதி மிக இலகு. “தோம் ... தோம் தோம்.”முதல் தோம் ஒரு மாத்திரையில் ஒலிக்க மற்ற இரண்டும் சேர்ந்து அதே நேர அளவில் (ஒரு மாத்திரை) ஒலிக்கும் ...இடையில் ஒரு விநாடி மௌனம் ...

காட்சி:தேவியை கண்டு விட்ட பக்தன்....சாதாரண பக்தன் அல்ல.

அவன் frame of mind ஏ வேறு .சில நொடிகளில் பேரருள் பிரவாகம்...மனது குதிக்கிறது...

என்னளவில் இது இந்த பாடலில் முத்திரையான ஒரு இடம்...

இசையும் சலனமும் நடிப்பும் ஒருங்கே மனதில் பதியும்......

இந்தக் காட்சிக்காக பாடலை மீண்டும் பார்த்து ரசியுங்கள்....

இதோடு நின்றிருந்தால் இந்த கட்டுரை எழுத தோன்றியிருக்காது .....இனிமேதான் கதகளியே.....

அடுத்த பாகம் ->