நிறைய நேரங்களில் மனிதர்களைப் பார்க்கும் போது, பழகும் போது, பேசும் போது எனக்கு வியப்பாக இருப்பது அவர்களின் அபிப்பிராயங்கள் அதன் விளைவான முடிவுகள். சிலர் அதையும் தாண்டி தங்கள் அபிப்பிராயங்களை விற்க அல்லது திணிக்க முயல்வது. சுவாரசியமாக இருக்கும் அவர்களது வாதங்கள் நம்புவது மாதிரி சொல்லப்படும் , ஆனால் உண்மை ?
உண்மை என்பது கூட விசித்திரமானது தான். எது உண்மை ?
- பெரும்பான்மை மனிதர்களின் நம்பிக்கை
- ஊர் சொல்வது
- CNN, BBC, etc சொல்வது
- அறிவோர், பெரியோர், ஆன்மீகவாதிகள் சொல்வது
- சமயம் சொல்வது
- நான் கண்டது கேட்டது விசாரித்தது
- நான் நம்புபவர்கள் சொன்னது
- என் தலைவன் , குரு, அம்மா, அப்பா, சொல்வது
- என் உள்ளுணர்வு சொல்வது
எது உண்மை ? எனக்கு செரியாத் தெரியேல்லை , இதல ஒன்றை மறுத்து மற்றதை ஏற்க முடியுமா தெரியேல்லை....
உண்மை எதோ ஒன்றாய் இருந்துட்டு போகட்டும்.... உண்மையே ஏதேண்டு தெரியமலிருக்கேக்கை, ஒன்றை உண்மை எண்டு எப்படி தீர்மானிக்கிறார்கள்... தெரியேல்லை... எனக்கு தெரிந்து எந்த ஒரு பிரச்சனைக்கும் குறைந்த பட்சம் இரண்டு பார்வை இருக்கும், இரண்டுக்கும் ஒரு வரலாறு இருக்கும் , அந்தப் பார்வையை முன் வைப்பவர்கள், அவர்கள் அனுபவம், சூழல் என்பவை பொறுத்து அந்தப் பார்வைக்கான நியாயம் மாறுபடும். மனிதர்களைப் புரிந்துகொள்வதன் மூலம் அவர்கள் வாழ்வை தேடுதல் மூலம் ஒவ்வோர் பார்வைக்கும் காரணங்கள் காரியங்கள் கண்டறியலாம்.
துருவத் துருவ தேடத் தேட வாழ்வின் நிலைமையைக் காட்டிலும் கருத்தியலின் நிலையாமை அல்லது ஒன்றுடன் ஒன்று முரண்படும் எல்லாக்கருத்துகளினதும் நியாயத்தையும் நோக்கி நான் நகர்வது எனக்கு கவலை தருகிறது. உள்ளீடற்ற ஒரு கொள்கைக்கு அல்லது பச்சோந்தித்தனமான கொள்கைக்கு தள்ளப்படுவது ஒரு பெருங்குளப்பத்தை தருகின்றது. எதை உண்மை என்று எடுக்க, எதை பொய் என்று முரண்பட, எல்லாத்தையும் அங்கீகரிக்கவா, அல்லது எல்லாவற்றையும் மறுத்துவிடவா, பேசமா இமயமலை எறிடலாமா ரஜனிய மீட் பண்ணலாம்... குளிரிமே, தவம் செய்யலாமா பதில் கிடைக்குமோ ?...., அடப் போங்கப்பா பருப்புக்கு இன்னும் கொஞ்சம் உப்பு போடலாம வேணாமா ... அதே செரியாத் தெரியேல்லை ... மண்டை காயுது ...