புதன், நவம்பர் 16, 2011

ஆசை + மோகம் = மடம் , இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு மட்டுமே

ஆசை + மோகம் = மடம் 
             "இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு மட்டுமே"

மயக்கம் என்ன.....
தோய்ப்பதற்கு எடுத்த சட்டை collor, கை என்பவற்றில் இருந்து body-spray உடன் வியர்வையும் சேர்ந்து வரும் வாசம் கிறங்கடித்தது. அவனுக்கு அடிக்கடி தோய்ப்பது பிடிக்காது, ஆனா அவளுக்கு புதுத் துணி கூட ஒருமுறை அலம்பி அணிவதே பழக்கம்.

கொடியில் சுடிதாருக்கு பக்கத்தில் காய்ந்து கொண்டிருக்கும் டெனிம், ஆறு மணி எப்ப வரும் என்று ஏங்க வைத்தது, தனக்கென ஒருத்தன் என்பது மனதுக்கு நிறைவான உணர்வு, வார்த்தைகளுக்குள் அடங்காத உணர்ச்சி - நல்ல குளிர் காலத்து கம்பளி மாதிரி, அவன் வர இன்னும் பல மணியாகும் என்பது ஏக்கம் + வாட்டம் - அதுவும் சுகம்தான் குளிர் காலத்தில் கோப்பி குடிக்கிற மாதிரி, அப்ப பின்நேரம் அவன் வந்தவுடன் வரும் உணர்வை என்ன வேண்டு சொல்லலாம் ? ஏக்கம் + வாட்டம்: சூடான கோப்பி கப் கையை சுட சுட சூடு தாளாமல் கை மேலும் கப்பை இறுக்குற மாதிரி, அந்தி வேளை அவன் வருகை+ ....(வயது வந்தவர்கள் புரிந்து கொள்ள) அது குளிர் காலத்து கோப்பி, உள்ளிறங்கி உடல் கலக்கும் வரை அதன் சூடு தெரியும்.

அவன்ட computer மேசை அலங்கோலமா புத்தகங்களும், பேப்பர்களும் சிடி களும் இறைந்திருந்தது, ஒவ்வொன்றா எடுத்து அடுக்கி வைப்பது பிடித்திருந்தது. அவள் அப்படி பழக்கப் பட்டவள் இல்லை. வீட்டில் இதுவரை இப்படி மற்றவர் வேலை செய்ததில்லை, அவள் மேசை நேர்த்தியாகத்தான் எப்பவும் இருக்கும். ஆனா அவன் அலங்கோலமாக வைத்திருக்கும் முறை ரசனை, அது பற்றி பின்நேரம் வந்தவுடன் சண்டை போட வேணும், சொன்னாலும் அவன் ஒழுங்காகப் போவதில்லை, கேப்பான், சில சமயம் கோபமாக நான் அப்படித்தான் எண்டு முரண்டு பிடிப்பான், அடுக்கி வச்சதுக்கு நன்றி சொல்லுவான் - அவன் நன்றி சொல்லும் விதமே தனி, நேற்று குழம்புக்கு சொன்ன நன்றி கன்னங்களில் இன்னும் எரியுது - தாடி மீசையை வழித்தெறி ஏண்டா கேக்குறானா. அந்த நினைவில் அதரங்கள் பரபரத்தன. கட்டாயம் கொழுவ வேணும் - இண்டைக்கு மேசை அடுக்கி வைக்குறது பற்றி.

அண்டைக்கு உப்புடித்தான் ஜே.கே இண்ட கதை வாசி எண்டு நச்சரித்து எடுத்திட்டான் , எனக்கு நிறைய நேரங்களில் அவன் வாசிக்கிற விசயங்கள் விளங்காது, அவனே விளங்கப் படுத்துவான் ஆனாலும் விளங்காது; அவனும் பேச்சும், தாடையும், தாடையை போர்த்தி இருக்கும் தாடியும் ரசிப்பதில், அவன் சொல்வதை கவனிப்பதில்லை. அவனும் எழுதுவான், மிக அரிதாய், ஆனா அவனுக்கு வாசிக்கிறது தான் பிடிக்கும் எண்டுவான். எழுதிப் போட்டு, யாரு வாசிச்சவை யாரு கொமென்ட் போட்டவை எண்டு கொஞ்சநாளா தவம் கிடப்பான் - ஆனா அதை காட்டிக்கொள்ள அவனுக்கு வெக்கம். ஆனா நிறைய வாசிப்பான் - வாசிச்சதில் ரசிச்சதை மற்றவர்களுக்கு விதவிதமாய் -வற்புறுத்தலாய் - பகிர்வது அவன் குணம்.

அண்டைக்கு உப்புடித்தான் ஜே.கே இண்ட கதை வாசி எண்டு நச்சரித்து எடுத்திட்டான் - "உஸ் இது கடவுள்கள் துயிலும் தேசம் " எண்ட பெயரை கேட்டவுடன் எனக்கு விளங்கேல்லை , இது கடவுள்கள் துயிலும் தேசம் எண்டா சொர்க்கமோ?  இல்லை, இந்த ஊரில சாமி எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கு எண்டு அர்த்தமோ?. உஷ் எண்டு எதுக்கு சொல்லோணும் ? எழுப்பிடாதேங்கோ, இங்கை ஆழத்துயில் கொள்ளும் எல்லாரும் கடவுள்கள் என்டர்த்தமோ ? சுடலை பற்றி இருக்குமோ ? துயிலும் இல்லம் ? குழந்தைகள் காப்பகம் ? அவன் இப்படித்தான் பல மாதிரி கேள்வி கேப்பான் - ஏன் இப்படி குழம்போணும் எண்டு எனக்கு விளங்கிறேல்லை. சும்மா வாசிச்சுட்டு போறதுக்கு இவளவு ஆர்ப்பாட்டம் - அவன் அப்படித்தான் - அது அவளுக்கு பிடிச்சிருந்தது.

உப்பு தூக்கலாக போட்டு, நெயில தாளிச்சு துவரம்பருப்பு வறை, அவன் தான் சொல்லித் தந்தான், இவளுக்கு முந்தி அறிமுகமில்லை. ரசம் ஒருபக்கம் கொதிச்சுக் கொண்டிருந்தது , தாளிக்குறது ஒரு ரசனை அனுபவம் எண்டுவான், கருவேப்பிலை, கடுகு, சீரகத்துடன் பொரியும் போது வரும் சத்தமும், மணமும் காங்கேசன் வீதிகளில் பயணிக்க வைக்கும் எண்டுவான் இப்படித்தான் கருவேப்பிலைக்கும் காங்கேசன் வீதிக்கும் என்ன லிங்க் எண்டு தெரியேல்லை கேக்க வேணும் , அதுக்கொரு கதை வச்சிருப்பான்.

சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் சுப்பர் சிங்கர் பாத்திட்டு படுத்திடலாம். அந்த கதையை வாசிக்கலாம்....

"கண்ணம்மா.....",
 அவளுக்கும் ஆசையா இருந்தது , தனக்கொரு குழந்தை எண்ட எண்ணம் அவள் கன்னக் கதுப்புகளை சிவக்க வைச்சு , காதுகளை சூடேற்றியது. கண்கள் சொருக ஆறு மணிக்கனவுகளோடு தூங்கப் போனாள். அவன் வந்து கதை சொல்லுவான். அதை கேக்கலாம் - அது ஒரு சுகம் - சில வேளை சினப்பான், நீயா தேடி வாசி - அப்பத்தான் அதில ஒரு சுகமிருக்கும், கூடவே ரசனை வளரும், அது படைப்பாளிக்கான கௌரவம் என்பான். இவளுக்கு அதில் ஆர்வமில்லை, அவன் வாசித்தால் கேக்கலாம், கேக்க நல்லா இருக்கும் அவன் வாசிப்பு - நாடகம் மாதிரி - வாசிப்பே அபிநயங்களோடு. அதை அவள் சொன்னதில்லை, எல்லாத்தையும் தனக்கு வாசிச்சு காட்டுவதில்லை எண்ட குறை அவளுக்குண்டு, அவளா எதையும் தேடி வாசித்து பகிர்வதில்லை எண்ட குறை அவனுக்குண்டு. அவனுக்கு பிள்ளையார் பிடிக்கும் எண்டு ஈ-மெயிலில் வரும் பிள்ளயார்களை அவனுக்கு அனுப்புவாள், கூடவே உணவுப் பழக்க வழக்கம் பற்றிய ஈ-மெயில்கள் - அவன் அதை தேடி வாசிப்பதாக ஏற்றுக்கொள்வதே இல்லை. அதற்க்கு இன்னமும் கோபப் படுவான். அனால் அது அவனுக்கு சந்தோசம் தரும் எண்டு அவள் நினைத்திருந்தாள். தனக்காக அனுப்புகிறாள் எண்டு அவனுக்கு ஒரு கரிசனை உண்டு எண்டு தான் நினைக்குறன். பின்னேரம் எழும்பி பில் கட்டவேணும், பகோடா சுடுவம் - அவனுக்கு அது பிடிக்கும் எண்டு நினைத்துக்கொண்டாள்.

மீண்டும் ஆறுமணி நினைவில் வர, ஒரு நகைப்பு வாயுக்குள் வந்து கடிவாயில் கொப்பளித்தது , அதை விழுங்கிக்கொண்டாள். மறக்காமல் ஜே.கே இண்ட கதையை தண்ட facebook இல் பகிர வேணும் எண்டு இடையில் எப்பவோ நினைத்தாள், அனால் தூக்கம் அவளை ஆட் கொண்டதில் பல சிந்தனைகள் அப்படியே முடங்கிப் போயின - பகோடா மட்டும் நினைவில் இருந்தது.

21 கருத்துகள்:

Think Why Not சொன்னது…

ஃபீலிங்ஸ் கதை மாதிரி தெரியுது.... இப்படி ஒருத்தி இருக்கா என்று சொல்லுறீங்களா..? இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்லுறீங்களா..? இல்லை இப்படி இருக்கணும் என்கிற எதிர்பார்ப்பா..?

Open Talk சொன்னது…

என்ன வாலிபா சொந்தக்கதை போல தெரியுது!!! நல்லா இருக்கு கதை!!!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

think Y not, வந்ததுக்கும் கிண்டலுக்கும் நன்றி. வாசகர்கள் தங்கள் விருப்பம் போல எடுத்துக் கொள்ளலாம் , இது வாலிப விளையாட்டு அப்படித்தான் இருக்கும் - கொஞ்சம் confusing ஆ.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

வெளிப்படயாப் பேசும் (open talk) நண்பருக்கு வணக்கம் இது சொந்தங்களின் கதை எண்டு வேணும் எண்டா வச்சுக் கொள்ளலாம்.

Chocka சொன்னது…

மச்சி,
கணவன் மனைவி இடையான சிறு சிறு சங்கதிகளையும் நன்றாக உள்வாங்கி எழுதி உள்ளாய். ஒரு மனைவியின் எண்ண வெளிப்பாடாய் உள்ளது உன் பதிவு. நுண்ணுணர்வு சார்ந்த பதிவாக உள்ளது. இங்கு பதிந்துள்ளவற்றில் சிலவற்றை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததுண்டு. ஆனால் பெண்ணின் எண்ணம், உணர்வு சார்ந்த பதிவாகையால் எவ்வளவு துல்லியமாக அவர்களின் அனுபவம் இப்பதிவோடு ஒத்துப்போகிரதேன்பது திருமணமான ஒரு பெண்ணே சொல்ல வேண்டும். தலைப்பு முழுதாக விளங்கவில்லை. 'மடம்?'

ஏ.எ.வாலிபன் சொன்னது…

சந்தோசம் சொக்கன், வந்ததுக்கும் தந்ததுக்கும். உன் அபிப்பிராயங்களின் மீதுள்ள அபிமானத்தால் உன்னை வற்புறுத்தி அழைத்து வந்தேன்.

//ஆனால் பெண்ணின் எண்ணம், உணர்வு சார்ந்த பதிவாகையால் எவ்வளவு துல்லியமாக அவர்களின் அனுபவம் இப்பதிவோடு ஒத்துப்போகிரது//

எனக்கும் அதில கொஞ்சம் டவுட்டிருக்கு - நீதான் அனுபவஸ்தன் எண்ட முறையில சொல்ல வேணும்.

மடம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - மரபு வகுத்த பெண்ணின் நான்கு அடிப்படைக் குணங்கள். ஆயினும் மடம் என்பது மடமை எண்டு பொத்தாம் பொதுவாக சொல்லுவது தவறு என்பது என் எண்ணம் - பெண் தெரிந்தாலும் தெரியாத மாதிரி பண்ணுவதும் : அதுக்கு ஆண் அவளுக்கு தெரிஞ்சிருக்கலாம் எண்டு தெரிந்திருந்தும் தெரியாது எண்டு அவன் பண்ணுவதும் - அது ஒரு ரசனை உணர்வு. once one of my friend said - 'tube-light' girls make me horny. மற்றபடி ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் எண்டு ஒரு சொலவடை இருக்குறது உனக்கு தெரிந்திருக்கும். இந்த தலைப்பு கதையின் நிஜ நோக்கத்தை சுட்டி நிற்கிறது. try and think after 90 days...

ஜேகே சொன்னது…

இதுக்கு பதில் எழுத ஆரம்பித்து வழமை போல நீண்டு விட்டது. வெறுமனே கமெண்ட்ஸ் செக்க்ஷனில் தேங்ககூடாது என்று என்னுடைய தொடரில் இணைத்து விட்டேன்.

http://orupadalayinkathai.blogspot.com/2011/11/blog-post_19.html

ஏ.எ.வாலிபன் சொன்னது…

பேசாம யாரவது ஒராள் பெண்ணாப் பிறந்திருக்கலாம், மொறாவில காதலிச்சு, கொடவில காந்தர்வம், தொண்ணூறு நாட்களுக்குப் பிறகும் கசந்திருக்காது - என்ன செய்யுறது, வகுத்தான் வகுத்த படி அல்லால்...

இதை துசி வாசிச்சா, நான் சொல்லி நீங்கள் எழுதினதெண்டு சண்டைக்கு வருவான்.

இவளவு நுணுக்கமா ஒரு அண்ணாவும் தம்பியும் வாசிக்கிறது - புளி கரைக்குது. இனி இன்னும் கொஞ்சம் ஊறவிட்டு எழுதுறன்.

//...சொல்கிறேன்! அனுபவியுங்கள்!!// பினாலிருக்கும் வலியும், பெரு மனதும்... எனக்கு புரியுது - இப்ப நீங்கள் அனுபவிக்ககோணுமோ? ;)

எழுத்துப்பிழை -> திருத்துறன் + தவிர்க்கிறன்.

பாத்திரத்துக்குள் கொஞ்சம் ஓவராத்தான் எட்டிப் பார்த்திருக்குறன் - ஒருவேளை தெரிந்தே, வேணுமெண்டு.... எத்தனை பொருத்தம் பார்த்தாலும் இந்தச் சிக்கல் தவிர்க்காமல் வாழ்க்கையில் வரும் - எப்படி சிக்கெடுக்கிறது எண்டு ஏதும் idea இருக்கே ?

பெண்ணிய வாதிகள் கருத்துகளுக்காய் காத்திருக்குறன்

ஜேகே சொன்னது…

இதில் பெண்ணியத்தை எங்கேயும் குறை சொல்லவில்லையே நீங்கள்!! இரு வேறு துருவங்களுக்காக ஒரு துருவம் மேல் என்று மற்றயது கீழ் என்றும் ஆகாது. அவளுக்குள்ளும் அந்த உணர்வுகள் இருக்கின்றனவே! இரண்டு புள்ளிகளும் இணையாது .. அவ்வளவே!

//...சொல்கிறேன்! அனுபவியுங்கள்!!// பின்னாலிருக்கும் வலியும், பெரு மனதும்... எனக்கு புரியுது - இப்ப நீங்கள் அனுபவிக்ககோணுமோ? ;)

--- Very Dangerous Fellow மச்சி நீயி .. கவனமா இனி எழுதோணும்!!

பெயரில்லா சொன்னது…

Damn awesome!!!
You really nailed it !!!
I came to this blog entry from jk anna blog...

இது என்னுடைய கடந்த 3 வருட திருமண வாழ்க்கையை பட்டவர்த்தமாக படம் பிடித்து காட்டுகிறது :). என்ன நான் ஒண்டும் எழுதிறது இல்ல. எழுதினாலும் திருப்பி வாசிச்சுட்டு அழிச்சிடுவன் :)

என் மனைவி வாசிச்சுட்டு முதலில் சொன்னாள்,
உங்கள பற்றி.. என்றுவிட்டு, நீயா எழுதினதெண்டள்?

இல்லையெண்டன்.

அப்படியே நான் நினைகிறத எழுதிகிடக்குது ஏண்டாள். அடுத்த கேள்வி, இத என்னத்துக்கு வாசிக்க சொன்னனி? அவளே ஒரு பதில் சொன்னள். இரவுக்கு சுறா வறுத்து தாறன் எண்டனான். வறுத்து தருவன் ஏண்டு சிரித்தாள்.

நான் அம்மா செய்த சுறா வறை மாதிரி வருமாவென இப்பின்னூட்டத்தை எழுதிகொண்ட்டிருக்கிறன்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நண்பரே, அரங்கேறும் என் கவிதைகளுக்குப் பின்னல் ஒரு குப்பைக் கூடை நிறைய குறைப பிரசவக் கவிதைகள் கொட்டி நிக்கும்: காடே எரிந்து ஒருநாள் வெளிய வெரும் உங்கள் எழுத்தெண்டு நினைக்குறன். இவளவு ரசனையான (எழுத்தும் வாசிப்பும்) உங்களை அறிமுகப் படுத்திய ஜேகே க்கு மேகலா அடிக்கடி கனவில் வரட்டும்.

//நான் அம்மா செய்த சுறா வறை மாதிரி வருமாவென இப்பின்னூட்டத்தை எழுதிகொண்ட்டிருக்கிறன்.//

ஏறத்தாள இதே மாதிரி ஒரு கருத்தை அண்மையில் இன்னொருவரும் பகிர்ந்திருந்தார்.

மனுசன் பாவம், சுறா விரும்பி சாப்பிடும், freezerukkul வைச்சா அது பழுதாகிவிடும் எண்ற எண்ணம்

சுறா போனாப் போகுது, வா இதை சேர்ந்து வாசிச்சி சிலாகித்து சிருங்காரம் செய்யலாம் எண்ற எண்ணம்

இரண்டுமே மற்றவரை மகிழ்ச்சிப்படுத்த, மகிழ, எனக்கேதிரே நிண்டாலும் அது கரிசனையே - பொருளீட்ட ஓடும் பெருமோட்டம்
இந்த முரணுக்குள் ஏற்படுத்தும் உராய்வு - அவ்வப்போ;
கடந்துவர வழி சொல்லத் தெரியேல்லை எனக்கு, ஆனால்
இல்லறத்தீர்
இந்த வேகம் குறைய
விரைவில் உங்கள் தாபம் தணிய
வேண்டுவது அல்லால்
யாமொன்றும் அறியோம்
பராபரமே.

எனக்கு பொழுது போகாட்டி, வாத்திண்ட வேலை மூச்சு முட்டேக்க , இரவு ரண்டு மணிக்கு மேல் நித்திரை வராட்டி .... நான் எழுதும் எழுத்துக்கு வந்து நீங்கள் எழுதிய பொழிப்பில் வார்த்தைக்குள் நுட்பம் வைத்தீரே //அவளே ஒரு பதில் சொன்னள். இரவுக்கு சுறா வறுத்து தாறன் எண்டனான்.//.

ஆண்டவரே,
இந்த நல்லாறங்கரையிருந்து
எள்ளாற்றம்கரை வரைக்கும்,
இனிதாய் கடந்து போக
நல்லாற்றல் தருவீரே
நமக்கு.

பெயரில்லா சொன்னது…

வாழ்க்கை எப்பொதும் சிந்துவாகவோ பைரவியகவோ இருக்காது!
இருவர் துறையையும் இருவரும் புரிந்தால் சிக்கல் தீர்ந்துவிடும்..
I'm just a reader..Not an experienced guy/girl

ஏ.எ.வாலிபன் சொன்னது…

//வாழ்க்கை எப்பொதும் சிந்துவாகவோ பைரவியகவோ இருக்காது!// - சத்தியம்

ஜேகே சொன்னது…

//வாழ்க்கை எப்பொதும் சிந்துவாகவோ பைரவியகவோ இருக்காது!//

யாரு அந்த பெயரில்லா மேதை பாஸ்? .. நாங்க முப்பது பதிவில சொல்றத ஒரே வார்த்தைல சொல்லீட்டு எஸ்கேப் ஆயிட்டாரு ... முக்காடை விலக்கிவிட்டு முன்னுக்கு வாங்க சார்/மேடம் .. உங்க மாதிரி நண்பர்கள் எப்போதும் வேண்டும் சாரே!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

மடம் + tubelight வைச்சுக்கொண்டு சண்டைக்கு வருவினம் எண்டு பார்த்தன். மரபு சிந்தனை போல கதைநாயகி வீட்டை திருத்திக்கொண்டு, ஆறுமணிக்கு தலைவன் வருகைக்கு காத்திருப்பது போல படைத்திருப்பது பற்றியும், அவளுக்கு இலக்கியம் போன்ற intellectual ரசனை இல்லாதிருப்பதும் பொதுவாக பெண்ணிய வாதிகள் முரண்படும்/ படக்கூடிய கருத்துக்கள். ஜே.கே.பி கள் ரசிக்காம விட்ட பைரவியின் பருப்பு-ரசம் பற்றி நாங்கள் இருட்டடிப்பு செய்து விடுவதாகவும்...செரி விடுங்கோ, சில கருத்துகள் தனிப்பட்ட முறையில் சொல்லுச்சினம்.

//Very Dangerous Fellow மச்சி நீயி//: ச்சே...ச்சே...நான் அச்சாப்பிள்ளை.

அந்த சறுக்கல் பற்றி, சில சமயம் சிந்துகள் கூட கலியாணத்துக்கு பிறகு; அரிசி, பருப்பு, 80 marks, தமிழ்த்தினப் போட்டி சட்டை தைக்குறது எண்டு சுருங்கிடிறதை சுட்டும் முயற்சி, முயற்சியில் சறுக்கி இருக்கலாம். இது நிறைய அவள்களை ஒரு அவளாக காட்டும் முயற்சி.

பொதுவா, தவிர்க்கேலாத இந்த முரண்களை தாண்ட 90 நாட்கள் முடியுது எண்டால், அதை எப்படி நீட்டிக்கிறது எண்டுதான் கேள்வி.

எஸ் சக்திவேல் சொன்னது…

>அவன்ட computer மேசை அலங்கோலமா புத்தகங்களும், பேப்பர்களும் சிடி களும் இறைந்திருந்தது, ஒவ்வொன்றா எடுத்து அடுக்கி வைப்பது பிடித்திருந்தது

எல்லாம் எத்தனை நாட்களுக்குக் என்று முன்னாள் புதுக்கணவர்கள் புறுபுறுக்கிறார்கள்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

வந்ததுக்கு சந்தோசம் சக்திவேல், குறும்பை ரசித்தேன். உங்களை முகமுபுக செயலாளராக அறிவிக்கலாம்.

Barathi Subramaniam சொன்னது…

மச்சி!! பிடி இந்தப் பூங்கொத்தை..அட்டகாசம். ஆசை + மோகம் = மடம் , இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு மட்டுமே சிறுகதையில்..பெண்களின் உளவியல் சம்பந்தமான ஒரு பெருங்கதையாடலுக்கான சிந்தனைப்போக்கு தெரிகிறது. வெறுமனே திருமணமான அல்லது தாலி கட்டாமல்/ பதியாமல் சேர்ந்து வசிக்கும் பெண்களின் (குறையொன்றுமில்லையே..) உணர்வு/உளவியல் பற்றி மட்டுமே இக்கதை பேசுவதாக நான் கருதவில்லை. வாழ்க்கையை பகிர்வதற்காக வரப்போகும் வஞ்சிதனை எதிபார்த்து கண்களுக்குள் கனவுகளையும், மனசு முழுக்க கற்பனைகளையும் தேக்கி வைத்திருக்கும் வாலிபர்களின் ஏக்கமூச்சின் சூடு கதை முழுக்க விரவி நிற்பதாகவே தோனுகிறது. கதை முழுக்க கொப்பளிக்கும் இளமை + எள்ளல் சூப்பர்ப். மற்றபடி "மயக்கம் என்ன" நாயகி யாமினியின் (ரிச்சா) போட்டோ போட்டது, உன் கதை நாயகியின் குணவியல்பை குறியீடாக காட்டுவதற்காகவென்றே நான் நம்புகிறேன்.
எனக்கு எப்போதுமே தத்துவஞானி டெரிடாவின் "ஆசிரியன் இறந்துவிட்டான்" கருத்தில் உடன்பாடில்லை. அது ஒரு தப்பிப்பதற்கான வாதம். நீ அவ்வளவு கோழை அல்ல என்றே நம்புகிறேன். :). ஆனால் இந்த இடத்தில் "பிரிவோம் சந்திப்போம்" நாயகி ஷாலாவின் போட்டோ இருந்திருந்தால் அது மிகச்சரியான குறியீடாக இருந்திருக்கும். என்னடா இவன் ஒரு போட்டோவைச் சுற்றி இவ்வளவு நேரம் அலம்புறானே என சலிக்காதே.. உன் கதை நாயகியின் உளவியலும் நான் எனக்குள் கட்டமைத்திருக்கும் பெண்கள் குறித்தான புரிதலின் உணர்வும் எவ்வாறு ஒரு புள்ளியில் சந்தித்ததோ... அதே போலவே மேற்குறிப்பிட்ட திரைப்பட பாத்திரங்களும் எனக்குள் நெருங்க்கியிருந்தன. அந்த ஒற்றுமையை சுட்டவே அவற்றை குறிப்பிட்டேன்.. தமிழிலக்கியங்களும் தமிழ் சினிமாவும் எமக்குள் பெண் குறித்தான ஒரு விம்பத்தை கட்டமைத்திருக்கிறது. அந்த விம்பங்கள் எங்கள் கனவுகள் முழுக்க வியாபித்திருக்கிறன.. அந்த கற்பனைகள் எங்கள் தோள் சேரும்போது நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆகின்றோம். மற்றபடி ஆணாதிக்கம்/ பெண்ணடிமைத்தனம்... வேண்டாம்..பிறிதொருபொழுதில் என் கருத்தை உனக்கு சொல்கிறேன். வாழ்த்துகள் மச்சி.. இன்னும் எழுது....... :pp

ஏ.எ.வாலிபன் சொன்னது…

உன் சிலாகிப்பில் ஆழ்ந்த வாசிப்பு பயிற்சி தெரிகிறது, மிக்க சந்தோசம் மச்சி....அந்த படம் நான் வேணும் எண்டு தேடிப் போட்டது.... உனக்கு அந்தப் படமும் சேர்ந்து கதை சொல்லி இருப்பது சந்தோசம் - நிறையப் பேர் அதை லகுவாக கடந்து விடுவர் - இந்தக்கதை ஏதோ ஒன்றை மட்டும் சொல்வது அல்ல - ஒரு பெரும் உணர்ச்சிக் குவியலே - ஜேகே ஒரு பார்வை அதற்கு பதில் தொடுத்த பிரவீணா இன்னொரு பார்வை (பார்க்க:http://orupadalayinkathai.blogspot.com/2011/11/blog-post_19.html ) நீ முற்றிலும் மாறுபட்ட அதே சமயம் ரசனையான ஆழமான இன்னொரு பார்வை.
இப்படி ஒரு வாசிப்பும் தொடர்ந்த வெளிப்பாடும், அதுவும் நண்பனிடமிருந்து - கௌரவம் - இந்த வார்த்தைகள் தான் இன்னும் எழுதப் போதை தருகிறது....

செழியன் சொன்னது…

ஒரு பெண்ணின் பார்வையில் அருமையாக (உங்கள் வருங்கால மனைவியைப்பற்றிய கனவுகளையும் சேர்த்து) சொல்லியிருக்கிறீர்கள்!!
//ஆசை + மோகம் = மடம் , இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு மட்டுமே//
தொண்ணூறு நாட்களுக்குள் இந்தப்பதிவையும் ஒருமுறை உங்கள் வருங்கால மனைவிக்கு காட்டினால் பிழைத்துக்கொள்ள( கனவு நனவாக) வாய்ப்புண்ண்டு!!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

செழியன் ஒரே வாசிப்பில் யாருடைய குணவியல்பும் மாறாது என்றே நம்புகின்றேன். இதில் வெறுமே என்னுடைய எதிர்பார்ப்பு எண்டு கடந்து போவது ஆயாசம் தருகிறது.
//வாழ்க்கை எப்பொதும் சிந்துவாகவோ பைரவியகவோ இருக்காது!//

கருத்துரையிடுக